தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற?
வாலிப வயதில் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால் தேர்வு ஆகும். அது பள்ளி, கல்லூரி தேர்வாக இருக்கலாம்.
அல்லது வேலைக்கான போட்டி தேர்வாக இருக்கலாம். எந்த தேர்வாக இருந்தாலும் அதில் வெற்றி
பெற வேண்டும். முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பது படிக்கின்ற பிள்ளைகளின் விருப்பமாக
இருக்கும். இது நல்ல விருப்பம்தான். நம்முடைய தேவனும் இதையே விரும்புகின்றார். அப்படி
தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று, வெற்றி பெற வேதத்தின்படி என்ன செய்ய வேண்டும்?
என்பதனை இந்த பகுதியில் தியானிப்போம். ஜெபத்துடன்
பரிசுத்த ஆவியானவர் துனையுடன் வாசியுங்கள். எந்த தேர்வாக இருந்தாலும் வெற்றி பெற்று
அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள்.
பரிசுத்த வேதத்தில் (1கொரி 12)-ம் அதிகாரத்தில்
ஒன்பது வரங்களை குறித்து கூறுகின்றது. இந்த வரங்கள் அவனவனுடைய பிரயோஜனத்திற்க்கென்று
அளிக்கப்பட்டிருக்கின்றது (1கொரி 12:7). அதாவது ஊழியம் செய்வதற்கு மாத்திரம் அல்ல.
நாம் செய்யும் எந்த வேலைக்கும், எந்த தொழிலுக்கும் இந்த வரங்கள் பிரயோஜனமாக இருக்கும்.
தேவனுடைய வரங்களை மற்ற காரியங்களில் பயன்படுத்துகின்றவர்கள் எப்பொழுதும் சிறந்த இடத்தில்
இருப்பார்கள்.
அந்த ஒன்பது வரங்களில் அறிவை உணர்த்தும்
வசனம் என்ற வரம் ஒன்று உள்ளது. (1கொரி 12:8) இந்த வரம் மிகவும் விலையேறப்பெற்றது. பழைய
ஏற்பாடு காலத்தில் சாலமோன் இராஜா இந்த வரத்தினால் அபிஷேகம்பண்ணப்பட்டு மிக சிறந்த அறிவாளியாக
இருந்தான். இன்றைய காலத்தில் யார் யார் மற்றவர்களை ஆளுகை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகின்றாரோ அவர்களுக்கு அதை கொடுக்கின்றார்.
இந்த வரம் ஒரு மனிதனுக்குள் கிரியை செய்யும்போது அநேக காரியங்களை அறிந்துகொள்ள வேண்டும்
என்ற விருப்பமும், அதிகமாக படிக்க வேண்டும் என்ற விருப்பமும் வரும். எவ்வளவு படித்தாலும்
சலிப்பு இருக்காது. படிக்க வேண்டும்
என்கின்ற விருப்பமே அதிகமாக இருக்கும்.
எனவே படிக்கும் வாலிபர்களாகிய நீங்கள்
இந்த அறிவை உணர்த்தும் வசனம் என்ற வரத்தை பெற்றுக்கொள்ள
வேண்டும் என்பதற்காக ஜெபியுங்கள். தாலந்துகளை ஆண்டவருக்கு பயன்படுத்துவேன் என்று அர்ப்பணியுங்கள்.
தேவாதி தேவன் இந்த வரத்தை உங்களுக்கு தருவார். அதிகமாக படிக்க வேண்டும் என்ற வாஞ்சை
உங்களுக்குள் வரும். நீங்களும் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று மாநில அளவில், மாவட்ட
அளவில் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலத்தில்
பெரிய அதிகாரியாக இருப்பீர்கள்.
(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே. எனக்கு அல்ல கர்த்தருக்கே தீர்க்கதரிசன
வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள். உங்கள் Comment –ஐ பதிவு செய்யுங்கள் மற்றும்
நண்பர்களுக்கும்
அதிகமாக SHARE செய்யுங்கள். நீங்களும் இந்த செய்தியை WHATS APP - ல் தினமும் பெற Prophetic Words Ministries 8608833150, 8608096748)
Comments
Post a Comment