யேசேபேல்
எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி நாளைக்கு உன்னைக் கொலை செய்வேன் என்று மிரட்டுகின்றாள்.
தீர்க்கதரிசிகளை கொலை செய்ய துடிப்பதும், கொலை செய்வேன் என்று மிரட்டுவதும், தீர்க்கதரிசிகளுக்கு
விரோதமாக எழும்புவதும் யேசேபேலின் ஆவியாகும். யேசேபேலின் மிரட்டல்கள் எலியாவுக்கு தெரிந்த
போது, தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக பெயெர்செபாவுக்கு புறப்பட்டுப் போகின்றான். வனாந்தரத்தில்
ஒரு நாள் பிரயாணம் செய்த எலியா, சூரைச் செடியின் கீழ் உட்கார்ந்து தான். வாழ்ந்தது
போதும் சாக வேண்டும் என்று சொல்கின்றான்.
(1இராஜாக்கள் 19)
முதலில்
தன் உயிரைக் காப்பாற்ற துரிதமாக சென்றவன், பின்பு சோர்ந்துப் போய் சாக வேண்டும் என்று
சொல்கின்றான். ஏன் இந்த மாற்றம்? அவனுடைய ஆவியில் என்ன மாற்றம் ஏற்பட்டது? இங்கு தான்
அவன் மிக முக்கியமான ஒன்றை மறந்துவிட்டான். அப்படி அவன் என்னத்தை மறந்தான் என்பதனை
இந்தச் செய்தியில் தியானிப்போம். தொடர்ந்து வாசியுங்கள். இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு
மகிமையை செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஜெபியுங்கள்.
யேசேபேலின்
மிரட்டலைக் கேட்டு, தன் உயிரைக் காப்பாற்ற சென்ற எலியா ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்
என்று ஜெபித்து இருப்பான். எப்பொழுது ஜெபித்தாலும் தேவபிரசன்னத்தை உணருகின்ற எலியாவால்
இப்பொழுது உணரமுடியவில்லை. ஜெபத்திற்கு பதிலும் கிடைக்கவில்லை. எவ்வளவோ போராடி பார்த்திருப்பான்.
ஆனாலும், தேவனுடைய சத்தத்தினைக் கேட்க முடியவில்லை. ஏற்கனவே பல தீர்க்கதரிசிகளை பட்டயத்தினால்
யேசேபேல் கொலை செய்திருந்தாள். அது எலியாவுக்கு
நன்கு தெரியும். நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று
வாக்குத்தத்தம் பண்ணின தேவன், என்னையும் கைவிட்டுவிட்டார்
என்று நினைத்துவிட்டான். அவருடைய வாக்குத்தத்தத்தினை மறந்துவிட்டான். எனவே, தான் சாக
வேண்டும் என்று சொல்லி, போதும் கர்த்தாவே,
நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல, என் ஆத்துமாவை எடுத்துக் கொல்லும்
என்று சொல்லி விண்ணப்ப ஜெபம் செய்தான். தேவ
திட்டத்தினையும் இழந்துவிட்டான்.
இன்றைக்கும்
நாம் பலவிதமான சூழ்நிலைகளில் கடந்து செல்வோம். எதிர்காலத்தைக் குறித்துப் பயங்கள்,
கொள்ளை நோய்கள், உபத்திரவங்கள், சரீர பெலவீனங்கள், கடன் பிரச்சனைகள் என பலவிதமான போராட்டங்கள்
நம்மை நெருக்கும். அந்தக்காரங்கள் நம்மை சூழ்ந்துக் கொள்ளும். சூழ்நிலைகள் சாதகமாக
இல்லாமல் எதிராகவே இருக்கும். சில நேரங்களில் தேவ பிரசன்னத்தை உணர முடியாது. ஜெபிக்கவும்
முடியாது. கர்த்தருடைய சத்தத்தினைக் கேட்க முடியாது. வேதத்தினை தியானிக்க முடியாது. எப்படி இருந்தாலும் நான் உன்னைவிட்டு
விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்ன தேவன் என்னைக் கைவிடமாட்டார்
என்பதனை மனதில் மிக ஆழமாக பதித்துக் கொள்ள
வேண்டும். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், அவர் கிருபை என்னைவிட்டு
விலகாது என்பதனை மறந்துவிடக் கூடாது. இது மிகவும் முக்கியமானது.(ஏசாயா 54:10)
மறந்துவிட்டால், சூழ்நிலைகளைக் கண்டு பயப்பட்டுவிடுவோம்.
பயம் ஆத்துமாக்குள் செல்ல செல்ல அவிசுவாசமும்
பின் தொடர்ந்து வந்துவிடும். பின்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலித்து விடுவோம்.
அவர் வாக்குத்தத்தங்களை மறந்துவிடுவோம். தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும் சிலர் தற்கொலையும்
செய்து விடுவார்கள். இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளையே தேவன் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும்
என்னை விட்டு விலகமாட்டார் என்னைக் கைவிடமாட்டார் என்பதனை மறந்துவிடாதே.
Switch To ENGLISH HINDI
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல்
பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன
வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை
உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின்
ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்
எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள்
Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல்
அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள
E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள்.
Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை
கிளிக் செய்யவும் ClickHere
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment