ஒரு நன்மையும் குறைவுபடாது

கர்த்தரை
தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்று சங்கீதம் 34:10 ல் வாசிக்கின்றோம்.
இதையே இந்த நாட்களில் சர்வ வல்ல தேவன் வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார். இதை வாசிக்கின்றபோது
உங்களுக்கு ஒரு நகைச்சுவையாக இருக்கலாம். என்ன சார் சொல்றீங்க எங்க இருக்கீங்கா இந்த
உலகத்தில்தானா கொள்ளை நோயினால் உலகமே ஸ்தம்பித்து
இருக்கிறது. தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், அரசு துறைகள் ஏன் சாதாரண ரோட்டோர
கடைகள் எல்லாமே மூடியாச்சு. வேலை இல்லை அதனால் வருமானத்திற்கு வழியும் இல்லை. இப்பொழுது
இந்த வசனத்தை சொல்றீங்களே என்று யோசிக்கலாம். இப்படி யோசித்தால் உங்களுக்கு தேவனுடைய
வல்லமை தெரியவில்லை என்று அர்த்தம். அவருடைய வல்லமை மிகவும் வித்தியாசமானது. இல்லாதவைகளை
இருக்கிறவைகள் போல் அழைக்கின்றவர். பெலவீனனை
பெலவான் என்றும் அசுத்தனை பரிசுத்தவான் என்றும் நீதிமான் என்றும் அழைக்கின்றவர்தான்
அவர். நாம் ஆராதிக்கின்ற ஜீவனுள்ள தேவன்.
அவர் தம்முடைய சொந்த ஜனமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வனாந்தரத்தின் வழியாய் நிறைய அற்புதங்களைச் செய்து,
வழிநடத்திக் கொண்டு வருகின்றார். இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் நமக்கு இறைச்சியைப்
புசிக்க கொடுப்பவர் யார் என்று கேட்கின்றார்கள்.(எண்ணாகமம் 11:4) அப்போது கர்த்தர் ஒரு நாள் , இரண்டு நாள், ஐந்து நாள் பத்து நாள்
மாத்திரம் அல்ல ஒரு மாதம் வரைக்கும் புசிப்பீர்கள் என்றும் அது உங்கள் மூக்காலே புறப்பட்டு
உங்களுக்கு தெவிட்டிப் போகும் மட்டும் புசிப்பீர்கள் என்றும் சொன்னார்.(எண்ணாகமம்
11:20) இதைக் கேட்ட கர்த்தருடைய தாசனாகிய மோசே
அதிர்ச்சியாகிவிட்டான். ஆண்டவரே என்னோடே இருக்கின்ற காலாட்கள் ஆயிரமோ இரண்டாயிரமோ அல்ல
ஆறு இலட்சம் பேர். அவர்களுக்கு ஒரு மாதம் முழுவதும் புசிக்கும் படி இறைச்சிக் கொடுப்பேன்
என்று சொன்னீரே. இது எப்படி சாத்தியம். எங்களிடத்தில் உள்ள ஆடு மாடுகளை அடித்தாலும்
அவர்களுக்கு போதுமா? சமுத்திரத்தின் மச்சங்களை சேர்த்தாலும் அவர்களுக்கு போதுமா? என்று
சொன்னான். .(எண்ணாகமம் 11:31)
அதற்கு கர்த்தர் மோசேயைப் பார்த்து கர்த்தருடைய கை
குறுகி இருக்கின்றதோ? என் வார்த்தையின் படி
நடக்குமோ? நடவாதோ? என்று இப்போது காண்பாய் என்றார். கர்த்தரிடத்தில் இருந்து
புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்தில் இருந்த காடைகளைக் கொண்டு வந்து பாளையத்தினை நிரப்பினது.
பெரிய அற்புதத்தினை செய்தார் மோசேக்கு முன்பாக தான் வல்லமையுள்ள தேவன் என்பதை நிரூபித்தார்.
.(எண்ணாகமம் 11:)
இன்றும் மோசேயைப் போல் சூழ்நிலைகளைப் பார்த்து எப்படி
இந்த நாட்களில் தேவன் என்னைப் போஷிப்பார்? எனக்கு நன்மைகளைத் எப்படி தருவார்? ஏன் தேவைகளை
எப்படி சந்திப்பார்? வருமானத்தினைத் எப்படி தருவார்? என்றுக் கேட்கலாம். வேலை கிடைக்குமோ,
கிடைக்காதோ என்றும், எப்படி நான் வாழ்க்கையை
நடத்தப் போகின்றேன் என்றும் யோசிக்கலாம். கர்த்தராகிய தேவன் மோசேக்கு சொன்னதுப் போல், இன்று
உங்களைப் பார்த்து சொல்கின்றார். என்னால் செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?(எரேமியா
32:27) சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்துப் பட்டினியாய் இருக்கும். ஒருவேளை உலகத்தின் மனிதர்கள் உலகத்திற்காக வாழ்க்கின்ற மனிதர்கள்
தாழ்ச்சியடைந்து சிறுமைப்பட்டு பட்டினி உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால், கர்த்தரை தேடுகிற உனக்கோ, என்னுடைய அபிஷேகத்தினைப்
பெற்ற நீயோ, ஒரு நன்மையும் குறைவுபடாமல் செழித்திருப்பாய் என்று ஆவியானவர் உங்களைப்
பார்த்துப் பேசுகின்றார். இந்த சிலாக்கியம் யார் யாருக்கெல்லாம் கிடைக்குமென்றால்,
அவருடைய வார்த்தையை யார் யார் விசுவாசிக்கின்றார்களோ அவர்கள் இந்த சிலாக்கியத்தைப்
பெற்றுக்கொள்வார்கள்.
இந்த தீர்க்கதரிசனத்தை
வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளையே! இந்த வார்த்தையை நீ விசுவாசித்தாயானால் இனி வரும் நாட்கள்
முழுவதும் ஒரு நன்மையும் குறைவுப் படாதபடிக்கு தேவனால் நீ பாதுகாக்கப்படுவாய். தேவனுடைய
கரம் உன்னோடு கூட இருக்கும். அவர் உன்னைக் கொண்டு செய்ய நினைத்தக் காரியம் தடைபடாது. தேவன் தாமே உன்னை ஆசீர்வதிப்பாராக
ஆமென்.
(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில்
பரலோக பிதாவுக்கும்,
கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவுக்கும்,
பரிசுத்த ஆவியானவருக்கும்
முழு மகிமையை செலுத்துங்கள்.
மகிமை மண்ணான
மனிதனுக்கு அல்ல தேவனுக்கே. எனக்கு அல்ல கர்த்தருக்கே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு
நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள். உங்கள் Comment –ஐ பதிவு
செய்யுங்கள் மற்றும் நண்பர்களுக்கும்
அதிகமாக SHARE செய்யுங்கள். நீங்களும் இந்த செய்தியை WHATS APP - ல் தினமும்
பெற Prophetic Words Ministries 8608833150, 8608096748)
Amen
ReplyDeleteAmen
ReplyDeleteAmen
ReplyDeleteThank you jesus Amen
ReplyDeleteYes..i beleive that..Glory to jesus christ..Amen.
ReplyDeleteAmen
ReplyDelete