மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2020

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபம் (சங் 119:105) மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2020 கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே.. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாகட்டும்… தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி மெகா வேதாகமம் எழுதும் தேர்வு -2020 நடத்தப்பட்டது. இதில் 2100 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டார்கள். எழுதிய நோட் அல்லது பேப்பர் எங்களுக்கு 2020 ம் ஆண்டு டிசம்பர் 15 க்குள் வந்து சேரும் விதமாக 433 பேர் அனுப்பினார்கள். எங்களுக்கு வந்த நோட் புத்தகத்தை ஆட்களை நியமனம் செய்து, எல்லா வசனங்களும் எழுதப்பட்டுள்ளதா? அடித்தல் திருத்தல் உள்ளதா? தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஒரே கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளதா? என்று சரிபார்க்கப்பட்டது. முதல் சுற்றில் 245 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 188 பேர் அடுத்து சுற்றுக்கான தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இரண்டாம் சுற்றில் 245 பேரின் நோட்டுகளும் மிக மிக துல்லியமாக சரிபார்க்கப்பட்டு 18 பேரின் நோட்டுகள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்...