மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2020

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபம் (சங் 119:105)




மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2020 

    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே..

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாகட்டும்… தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி மெகா வேதாகமம் எழுதும் தேர்வு -2020 நடத்தப்பட்டது. இதில் 2100 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டார்கள். எழுதிய நோட் அல்லது பேப்பர் எங்களுக்கு 2020 ம் ஆண்டு டிசம்பர் 15 க்குள் வந்து சேரும் விதமாக 433 பேர் அனுப்பினார்கள். எங்களுக்கு வந்த  நோட் புத்தகத்தை ஆட்களை நியமனம் செய்து, எல்லா வசனங்களும் எழுதப்பட்டுள்ளதா? அடித்தல் திருத்தல் உள்ளதா? தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஒரே கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளதா? என்று  சரிபார்க்கப்பட்டது.  முதல் சுற்றில் 245 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 188 பேர் அடுத்து சுற்றுக்கான தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.  இரண்டாம் சுற்றில் 245 பேரின் நோட்டுகளும் மிக மிக துல்லியமாக சரிபார்க்கப்பட்டு 18 பேரின் நோட்டுகள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

   அதன்படி 28-02-21 அன்று மதியம் CSI திருநெல்வேலி திருமண்டலம் தென்காசி சேகரத்தலைவர் அருள்திரு ஜாண் கென்னடி ஐயா அவர்கள் தலைமையிலும், ஆலங்குளம் பகுதியை மையமாக வைத்து நண்பர்கள் தரிசன ஜெபக்குழு என்ற ஊழியத்தை செய்து வரும் சகோதரர் S.பொன்ராஜ் அவர்கள் முன்னிலையிலும் சீட்டு போட்டு ஒரு நபரை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு சிறு கூட்டத்தை ஆயத்தப்படுத்தியிருந்தோம். மதிப்பிற்குரிய தேவ மனிதர் அருள்திரு ஜாண் கென்னடி ஐயா அவர்கள் ஜெபித்து  சீட்டை எடுத்து  திருநெல்வேலி மாவட்டம் கீழே சிவந்திப்புரத்தை சேர்ந்த Ms.P.Sathiya Devi (Rv286 Qz1002 என்ற சகோதரியை தேர்ந்தெடுத்தார்கள்.  

  நாங்கள் அறிவித்திருந்தப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த சகோதரிக்கு  11-03-2021(வியாழன்) அன்று மாலையில் கீழேசிவந்திப்புரம் CSI பரிசுத்த பவுலின் ஆலயத்தில் வைத்து, சபை மக்கள் உறவினர்கள் முன்னிலையில் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியத்தின் சார்பாக ஜெபித்து ஒரு சவரன் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. அந்த சகோதரியும் கர்த்தருக்குள் மிக்க மகிழ்ச்சியோடு பரிசினை பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய சாட்சியினையும் பதிவு செய்து தந்தார்கள்.(அவர்களுடைய சாட்சிகளை கேட்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் CLICK HERE )

  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு 2020 - க்கான வெற்றி பெற்ற நபருக்கு பரிசினை வழங்குவதற்கு எங்களை அழைத்து  உற்சாகப்படுத்தின CSI பரிசுத்த பவுலின் ஆலயத்தின் சேகர தலைவர்  தேவமனிதர் அருள்திரு. S.இம்மானுவேல் ஐயா அவர்களுக்கும், தேர்ந்தெடுப்பதில் தலைமை தாங்கி சீட்டு போட்டு ஒரு நபரை தேர்ந்தெடுத்த தேவமனிதர் அருள்திரு ஜாண் கென்னடி ஐயா அவர்களுக்கும், சகோதரர் S.பொன்ராஜ் அவர்களுக்கும்,  வேதாகமம் எழுதும் தேர்வு-2020 தை பரலோக திட்டத்தின்படி நடத்தி முடிப்பதற்காக ஜெபித்து, கொடுத்து, உழைத்து பிரயாசப்பட்ட அனைவருக்கும்  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் ஒரு சவரன் தங்கத்தினை பரிசாக பெற்ற சகோதரி சத்தியாதேவிக்கும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம். தேர்வில் கலந்துக் கொண்டு பரிசுத்த வேதத்தினை சொந்த கரங்களால் எழுதிய உங்கள் அனைவரையும் பரலோக தேவன் தாமே ஆசீர்வதித்து உயர்த்துவாராக. ஆமென். 



ஒரு சவரன் தங்கத்தினை பரிசாக பெற்ற சகோதரி சத்தியாதேவியின் சாட்சிகளை இங்கே பார்க்கலாம்.










Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..