மகிமை கமிட்டி

நம் தேவனாகிய கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையை செலுத்துங்கள் என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (சங்கீதம் 96:8) ஜெபிக்கின்ற விசுவாச பிள்ளைகளின் வாயிலிருந்து கர்த்தருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்றும் தேவனுக்கு மகிமை என்றும் அடிக்கடி சொல்வதை கேட்டிருப்போம். பரலோகப் பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கு முழு மகிமையும் செலுத்த வேண்டுமென்று பரலோகம் எதிர்பார்க்கின்றது. இது ஏன் எதற்கு போன்ற காரணங்களை இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்கலாம். இது பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியம் ஆகும். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் கற்றுக் கொடுத்தால் மட்டுமே புரியும். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். உன்னதத்தில் வ...