மகிமை கமிட்டி
நம் தேவனாகிய கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய
மகிமையை செலுத்துங்கள் என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (சங்கீதம் 96:8) ஜெபிக்கின்ற
விசுவாச பிள்ளைகளின் வாயிலிருந்து கர்த்தருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்றும் தேவனுக்கு
மகிமை என்றும் அடிக்கடி சொல்வதை கேட்டிருப்போம். பரலோகப் பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கு முழு மகிமையும் செலுத்த வேண்டுமென்று
பரலோகம் எதிர்பார்க்கின்றது. இது ஏன் எதற்கு போன்ற காரணங்களை இந்த தீர்க்கதரிசன செய்தியில்
தியானிக்கலாம்.
இது பரிசுத்த வேதத்தின்
ஆழ்ந்த இரகசியம் ஆகும். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் கற்றுக் கொடுத்தால்
மட்டுமே புரியும். இந்தச் செய்தி உங்களுக்கு
பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக
இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
உன்னதத்தில் வீற்றிருக்கின்ற சர்வ வல்ல தேவனை,
எல்லா வானங்களும், வானத்திலுள்ள சிருஷ்டிகளும், பூமியிலும், பூமியின் கீழுமிருக்கிற
சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ள வைகளும் அவற்றுள்ளடங்கிய வஸ்துக்கள் யாவும்,
எல்லாத் தூத சேனைகளும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இமைப்பொழுதும் மகிமைப்படுத்துகின்றன.
(வெளி 5:13) சர்வவல்ல தேவனுக்கு செலுத்தப்பட வேண்டிய மகிமை சரியாக செலுத்தப்படுகின்றதா
என்பதை கண்காணிக்கவும் அதனை
ஒழுங்குப்படுத்தவும் பரிசுத்தவான்கள், தீர்க்கதரிசிகள் அடங்கிய பரலோக கமிட்டியும்,
அதில் வேலை செய்கின்ற தூதர்களின் கூட்டம் ஒன்று உள்ளது. இவர்கள் சர்வ வல்ல தேவனுக்கு
வரவேண்டிய மகிமை சரியாக வருகின்றதா என்பதனை கண்காணிப்பார்கள். வரவில்லை என்றால் அந்த
இடத்திற்கே சென்று ஏன் வரவில்லை? என்ன காரணம் என்று ஆராய்ந்துப் பார்த்து அதை சரி செய்வார்கள்.
தேவனுக்குரிய மகிமையை சரியாக செலுத்தாதவர்களையும், செலுத்தாத
வஸ்துக்களையும் அழிப்பதற்கும், அடித்து சரி செய்வதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் 12:23-ல் சர்வவல்ல தேவனுக்கு மகிமையை செலுத்தாமல் இருந்த
எரோதை அடித்தது இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த தூதர்தான்.
யாராவது ஒருவர் பரலோக தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தினைப்
பெற்றுக் கொண்டு தேவனுடைய மகிமையை செலுத்தவில்லையென்றால், அந்த வழக்கு மகிமையின் கமிட்டி
முன்பாக செல்லும். அங்குள்ள பரிசுத்தவான்கள், தீர்க்கதரிசிகள் வழக்கை கவனித்து, விசாரித்து
ஆராய்ந்து, தீர்மானம் எடுப்பார்கள் இதைப்பொறுத்து தீர்ப்பு இயற்றப்படும். அந்த தீர்ப்புகளை
தூதர்கள் நிறைவேற்றுவார்கள்.
இப்படி ஒரு மனிதனுக்கு விரோதமாக தீர்ப்பு எழுதப்பட்டால்,
அந்த ஆசீர்வாதம் திரும்ப எடுக்கப்படலாம் அல்லது வேறு ஆசீர்வாதம் கிடைப்பதில் தடை ஏற்படலாம்
அல்லது சரீர பலவீனங்கள் ஏற்படலாம். சில நேரங்களில் மரணம் கூட ஏற்படும். எனவேதான், சர்வ
வல்ல தேவனுக்குரிய மகிமையை சரியாக செலுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
இதை வாசிக்கின்ற நீங்கள் பரலோகத்திலிருந்து அற்புதத்தினையும்,
ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொள்வதற்காக ஜெபிக்கலாம். அதற்கு முன்பாக முழு மகிமையையும்
தேவனுக்கு செலுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இதனால் ஆசீர்வாதம் கிடைத்ததற்கு பின் வரும்
பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment