அநீதியின் குழந்தை

ஒரு மனிதனைக் குறித்து பரலோகம் மிகப்பெரியத் திட்டத்தினை வைத்திருக்கும் போது, அதை முறியடிக்க பிசாசு வகைத்தேடி சுற்றித்திரிவான். பல வழிகளில் தந்திரமாக முயற்சி செய்வான். அந்த மனிதனை பயங்கரமான பாவத்தில் விழச்செய்து திரும்ப எழும்பக் கூடாதபடிக்கு தன்னுடைய கிரியைகளை நடப்பிப்பான். அப்படி என்ன பாவத்தில் விழ செய்வான்? என்னென்ன கிரியைகளை நடப்பிப்பான்? பிசாசின் தந்திரங்கள் என்னென்ன? என்பதனை இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதைக் குறித்து பரலோகதேவன் மிகப்பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். அந்த திட்டம் என்ன? என்பதனை 2 சாமுவேல் 7 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இதைக் குறித்து நாத்தான் தீர்க்கதரிசி தாவீதிடம் கூறுகின்றான். இதனை தாவீதும் கேட்டான் கூடவே எதிராளியான பிசாசும் கேட்டான். தாவீதின் வாழ்க்கையில் இந்த திட்டம் நிறைவேறாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தான். தன்னுடைய தந்திரத்தினால் பிறன...