சின்ன தீர்க்கதரிசி?

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 7: 15) நல்ல தீர்க்கதரிசி, கள்ள தீர்க்கதரிசி என்று இரண்டு வகையான தீர்க்கதரிசிகள் இவ்வுலகில் உள்ளனர். யார் நல்ல தீர்க்கதரிசி? யார் கள்ள தீர்க்கதரிசி? என்பதனை அவர்களுடைய கனிகளைக் கொண்டே மற்றவர்கள் எளிதாக அறிந்துக் கொள்ள முடியும். நல்ல கனிகளைக் கொடுப்பவர்கள் நல்ல தீர்க்கதரிசிகளும், கெட்ட கனிகளைக் கொடுப்பவர்கள் கெட்ட (கள்ள) தீர்க்கதரிசிகளாகவும் இருப்பார்கள். சில சபைகளில் ஊழியக்காரர்களை சின்ன பிரதர் பெரிய பிரதர் என்று அழைப்பார்கள். அதேப்போல் நல்ல தீர்க்கதரிசிகளையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பெரிய தீர்க்கதரிசி, மற்றொன்று சின்ன தீர்க்கதரிசி ஆகும். சின்ன தீர்க்கதரிசி என்பவர் யார்? அவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்? யார் பெரிய தீர்க்கதரிசி? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழும்பலாம். இந்த தீர்க்கதரிசன செய்தியில் அதை குறித்துதான் கொஞ்சம் விரிவாக தியானிக்கப் போகின்றோம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர்...