சின்ன தீர்க்கதரிசி?



        கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 7: 15) நல்ல தீர்க்கதரிசி, கள்ள தீர்க்கதரிசி என்று இரண்டு வகையான தீர்க்கதரிசிகள் இவ்வுலகில் உள்ளனர். யார் நல்ல தீர்க்கதரிசி? யார் கள்ள தீர்க்கதரிசி? என்பதனை அவர்களுடைய கனிகளைக் கொண்டே மற்றவர்கள் எளிதாக அறிந்துக் கொள்ள முடியும். நல்ல கனிகளைக் கொடுப்பவர்கள் நல்ல தீர்க்கதரிசிகளும், கெட்ட கனிகளைக் கொடுப்பவர்கள் கெட்ட (கள்ள) தீர்க்கதரிசிகளாகவும் இருப்பார்கள்.

  சில சபைகளில் ஊழியக்காரர்களை சின்ன பிரதர் பெரிய பிரதர் என்று அழைப்பார்கள். அதேப்போல் நல்ல தீர்க்கதரிசிகளையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பெரிய தீர்க்கதரிசி, மற்றொன்று சின்ன தீர்க்கதரிசி ஆகும். சின்ன தீர்க்கதரிசி என்பவர் யார்? அவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்? யார் பெரிய தீர்க்கதரிசி? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழும்பலாம். இந்த தீர்க்கதரிசன செய்தியில் அதை குறித்துதான் கொஞ்சம் விரிவாக தியானிக்கப் போகின்றோம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உங்களுடன் பேசுவார். சின்னத்தீர்க்கதரிசிகள் யார்? என்பதனை மிகத் தெளிவாக அறிந்துக் கொள்வீர்கள்.

  தீர்க்கதரிசிகளின் புத்திரர் என்று பரிசுத்த வேதத்தில் அநேகரைப் பார்க்கலாம். இவர்களின் பெயரை பரிசுத்த ஆவியானவர் எழுதி வைக்கவில்லை. ஏனென்றால், இவர்கள் தீர்க்கதரிசிகள் கிடையாது. தீர்க்கதரிசன பயிற்சியில் இருக்கும் சின்ன தீர்க்கதரிசிகள் ஆவார்கள். கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எலியாவை பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் வந்தபோது, பெத்தேல் மற்றும் எரிகோவில் இருக்கும் இந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து, எலியா எடுத்துக் கொள்ளப்படுவதை மிகத் தெளிவாக தீர்க்கதரிசனமாக சொன்னார்கள். ஆனால், எதுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றான்? இதற்கு பின்பு என்ன நடக்கும் என்பதும்? ஏன் எடுத்துக்கொள்ளப்பட்டான்? என்பதும் அவர்களுக்கு கொஞ்சம் கூட தெரியாது. இதனால்தான் எலியா எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, எலிசாவினிடத்தில் வந்து உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உமது எஜமானனை தேடும்படி உத்தரவு கொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து பர்வதங்களின் ஒன்றின் மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டு போய் வைத்திருப்பார் என்று அனுமதி கேட்டார்கள். எலிசா பெரிய தீர்க்கதரிசியாக மாற்றப்பட்டு விட்டான். அவனுக்கு ஏன் எடுத்துக் கொள்ளப்பட்டான் என்ற இரகசியம் தெரியும். எனவே, அவர்கள் யாரையும் அனுப்ப வேண்டாம் என்று கூறினான். அவன் சலித்துப் போகும் மட்டும் அவனை அலட்டிக் கொண்டிருந்தார்கள் என்று வேதத்தில் வாசிக்கலாம். (2 இராஜாக்கள் 2ஆம் அதிகாரம்)

   தீர்க்கதரிசன புத்திரர் மேல் தீர்க்கதரிசன வரங்கள் இருப்பதினால் பின்நாட்களில் என்ன நடக்கும் என்பதனை மிகத் துல்லியமாக கூறுவார்கள். ஆனால், முடிவில் என்ன நடக்கும்? இந்த காரியங்களை பரலோக தேவன் எப்படி முடியச்செய்வார்? இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதனை அவர்கள் தெளிவாக கூறமுடியாது. வெளிப்பாடுகள்  கிடைக்கும். அதை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாது. இவர்கள் சின்ன தீர்க்கதரிசிகள் ஆவார்கள்.

  சிலர் தீர்க்கதரிசன ஊழியத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் தீர்க்கதரிசிகளின் புத்திரராக இருப்பார்கள். இவர்கள் மேல் தீர்க்கதரிசன வரங்கள் இருக்கும். அதனால், வெளிப்பாடுகள் மிகத் துல்லியமாக தெரியும். எதிர்காலத்தினைக் குறித்து மிகச்சரியாக தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இதைக் கொண்டு அவர்கள் பெரிய தீர்க்கதரிசி என்று ஏமாந்து, வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களை பெரிய தீர்க்கதரிசி என்று புகழ்ந்து விடக்கூடாது. அவர்களை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர்களுக்கு கிடைத்த வெளிப்பாடுகளை எப்படி கையாளுகின்றார்கள் என்றும், அதற்காக எப்படி ஜெபிக்கின்றார்கள் என்றும், என்ன ஆலோசனைகள் சொல்லுகின்றார்கள் என்றும், வெளிப்பாடுகளைக் குறித்த வெளிப்பாடுகள் என்ன சொல்லுகின்றார்கள் என்பதனையும் ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். அதை கொண்டே சின்ன தீர்க்கதரிசியா? பெரிய தீர்க்கதரிசியா? என்பதனை முடிவு செய்ய வேண்டும்.

  சின்ன தீர்க்கதரிசி என்று தெரிந்தால் அவரை விட்டு விலகுவது நலம். ஏனென்றால், வெளிப்பாடுகளை கையாள தெரியாததினால் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனைகளும் கிடைக்காது. மாறாக தவறான ஆலோசனைகள் கிடைக்கும். இதனால், அதிகமாக பாதிக்கப்படுவீர்கள். ஆதலால், தேவனுடையப் பிள்ளைகள் தங்களுக்கு தீர்க்கதரிசனமாக உரைக்கும் நபர் யார் என்பதனை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். பின்பு அவர்களிடம் ஜெபிக்க சொல்ல வேண்டும்.

   ஒரு பட்டணத்தில் சின்ன தீர்க்கதரிசி ஒருவர் இருந்தார். இவர் தீர்க்கதரிசி அல்ல தீர்க்கதரிசன பயிற்சியில் இருக்கும் தீர்க்கதரிசிகளின் புத்திரர் ஆவார். இவருக்கு தன்னிடம் வரும் மக்களைக் குறித்த வெளிப்பாடுகள் மிகத் துல்லியமாக தெரியும். எனவே, ஜனங்கள் அவரை நாடித் தேடி ஓடி தீர்க்கதரிசனம் கேட்க வருவார்கள். அவர் சின்ன தீர்க்கதரிசி என்பது ஜனங்களுக்கு தெரியாதல்லவா? எனவே கூட்டம் கூட்டமாக வந்து எதிர்காலத்தினைக் குறித்து தெரிந்துக் கொள்வார்கள்.

 மரணத்துக்கேதுவான வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை அவரிடத்தில் அழைத்துக்கொண்டு சென்றார்கள். அவர்மீது மரணக்கட்டுகள் இருந்தது உண்மைதான். அதை அவர் சொல்லி சீக்கிரத்தில் மரித்து விடுவார் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார். உண்மையிலேயே அவர் மரிக்க வேண்டும் என்பது தேவனுடைய பரிபூரணத்திட்டம் கிடையாது. மரணக் கட்டுகள் உடைக்கப்பட்டு உயிர் வாழ வேண்டும் என்பதுதான் தேவனுடைய பரிபூரணத்திட்டமாகும். இந்த இரகசியம் அந்த சின்ன தீர்க்கதரிசிக்கு தெரியாமல், மரித்து விடுவார் என்று தீர்க்கதரிசனமாக கூறிவிட்டார். இந்த வார்த்தை வந்தபின்பு அவருடைய இருதயம் நம்பிக்கையை இழந்தது. மனத்தளர்ச்சி அடைந்தார். இதனால், வியாதியின் கோரம் அதிகமானது. மரணக் கண்ணிகள் அவரை நெருக்கியது.

   யாரோ ஒருவர் சொல்லி பெரிய தீர்க்கதரிசியிடம் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவர் பெரிய தீர்க்கதரிசி அல்லவா உடனே வெளிப்பாடுகளின் முடிவு என்ன என்பதனை தெரிந்துக் கொண்டு, அந்த மரணக் கட்டுகளை உடைத்து ஜெபித்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் உள்ள அதிகாரத்தினை பயன்படுத்தினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமை இறங்கியது. மரணக் கட்டுகள் உடைக்கப்பட்டு இப்பொழுது ஆரோக்கியத்துடன் அந்த சகோதரர் இருக்கின்றார். ஒருவேளை அவர் பெரிய தீர்க்கதரிசியிடம் செல்லாமல் இருந்திருந்தால் மரணம்தான் வந்திருக்கும்.

  அதேபோல், இன்னொரு சின்ன தீர்க்கதரிசியிடம் ஒரு குடும்பத்தார் கணவன் மனைவியாக ஜெபிக்கச் சென்றார்கள். அவருடைய மனைவி இரட்சிக்கப்பட்டு பரிசுத்த வாழ்க்கை வாழ்கின்ற தேவனுடைய பிள்ளை. ஆனால், அவளுடைய முன்னோர்கள் தேவனைப் பற்றி அறியாமல் துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்திருந்தவர்கள். பாவங்களை துணிகரமாக செய்தவர்கள். அவர்கள் மூலமாக தொடர்ந்துவந்த ஒரு விபச்சார ஆவி அந்த சகோதரியை தாக்கியது. சில பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கொண்டு வந்தது.

   இதைக் குறித்து கொஞ்சம் கூட தெளிவு இல்லாத அந்த தீர்க்கதரிசன புத்திரர் உங்கள் மனைவி மீது விபச்சார ஆவி உள்ளது என்று தீர்க்கதரிசனமாக உரைத்துவிட்டார். இதனால், அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தது. கணவனை சந்தேகத்தின் ஆவி தாக்கியது. கடைசியில் அந்தக் குடும்பமே உடைக்கப்பட்டு விட்டது. கணவன், மனைவி இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள். உண்மையிலேயே அந்த சகோதரி விபச்சாரப் பாவம் செய்யவில்லை. முன்னோர்களின் வழியாக வந்த ஆவி அவர்களைத் தாக்கியது. அப்படித் தாக்கும்போது விபச்சார ஆவி தாக்கியதாகத்தான் வெளிப்பாடு கிடைக்கும். இது எங்கிருந்து வந்தது என்பதனை பகுத்தறியாமல் சொன்ன தீர்க்கதரிசனம் குடும்பத்தையே கெடுத்துவிட்டது.

    இதில் யார் மீது தப்பு உள்ளது. அவரோ சின்ன தீர்க்கதரிசி. இப்பொழுதுதான் Training- ல் இருக்கின்றார். அவரையும் குறை சொல்ல முடியாது. யார் தீர்க்கதரிசனம் சொன்னாலும் அது தீர்க்கதரிசிதான் என்று நம்பி சென்ற, அந்த குடும்பத்தினர் மீது தான் தப்பு இருக்கின்றது. சின்ன தீர்க்கதரிசிக்கு ஒரு பிரச்சனையும் வராது. ஆயிரம் பேரை கொன்றால்தான் அரை வைத்தியன் என்று சொல்வார்களே, அதேப் போல் அவரும் பல தவறான தீர்க்கதரிசனங்களை உரைத்தால்தான்  தீர்க்கதரிசியாக உருவாக முடியும். இது தெரியாமல் சென்ற அந்த குடும்பத்தினர் மீதுதான் தவறு உள்ளது. இதனால்தான் பிரச்சனைகளையும் பாடுகளையும் அவர்கள் அனுபவிக்கின்றார்கள்.  தீர்க்கதரிசியோ பயிற்ச்சிக்காக மற்ற குடும்பத்தினருக்கு தீர்க்கதரிசனம் உரைக்க சென்று விட்டான்.

    எனவே, தேவனுடைய பிள்ளைகள் மிக எச்சரிக்கையாக விழிப்போடு இருக்கவேண்டும். எதிர்காலத்தினைக் குறித்து அப்படியே வெளிப்படுத்துகின்றவர்களை பெரிய தீர்க்கதரிசி என்று எண்ணித் தேடி ஓடி செல்லாதீர்கள். வெளிப்பாட்டினை எவ்வாறு கையாளுகின்றார்கள் என்பதனை அறிந்துச் செல்லுங்கள். தீர்க்கதரிசன வெளிப்பாட்டினால் எந்த ஒரு பாதிப்பும் வராதபடிக்கு பரலோகதேவன் தாமே உங்களை பாதுகாப்பாராக. ஆமென்!

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here 

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

 

 

 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..