வெளிப்பாட்டினால் வரும் பிசாசின் தாக்குதல்



     நம்முடைய எதிர்காலத்தினைக் குறித்துப் பரலோகம் வைத்திருக்கும் திட்டங்களை அறிந்துக்கொள்ளும் ஆவல் தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் இருக்கும். இதற்காக  உலகத்து மக்கள் குறிச்சொல்கின்றவர்களையும், அருள்வாக்கு சொல்கின்றவர்களையும் நாடித்தேடிச் செல்கின்றார்கள். தேவனைப்பற்றி அறிந்த விசுவாசப் பிள்ளைகளோ தீர்க்கதரிசிகளைத் தேடிச் செல்வார்கள். எதிர்காலத்தினைக் குறித்த வெளிப்பாடுகளை தீர்க்கதரிசனமாக கேட்பார்கள். எதையாவது சொல்லிவிடமாட்டார்களா என்று எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள்.

   ஆனால், இதற்குப் பின்பு மிகப்பெரிய ஆபத்து ஒன்று உள்ளது. எதிர்கால வெளிப்பாடுகள் கிடைத்த பின்பு அது நிறைவேறக்  கூடாதபடிக்கு பிசாசு மும்முரமாக கிரியைச் செய்வான். சோதனைகளையும், உபத்திரவங்களையும், பாடுகளையும் கொண்டு வருவான். அதில் சிக்கி எதிர்கால வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும் இழந்தவர்களும் உண்டு. சிக்காமல் தப்பியவர்களும் உண்டு.

    பரிசுத்தவேதத்தில் தாவீதுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட பிரச்சனைகளைப் பிசாசு கொண்டு வந்தான். அதைக்குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாகத் தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள்.

  தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கையில் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றிற்று. அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாழ்கின்றேன். ஆனால், தேவனுடையப் பெட்டி திரைகளின் நடுவே இருக்கின்றதே என்று சொல்லி அங்கலாய்த்தான். மேலும், கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணும் மட்டும் என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை என்றும், என் படுக்கையாகிய கட்டிலின் மேல் ஏறுவதுமில்லை என்றும், என் கண்களுக்கு நித்திரையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்கு ஒரு பொருத்தனை பண்ணினான்.(சங்கீதம் 132:2-5) பரலோக தேவனுக்கு ஆலயத்தினை கட்டுவதில் அவனுக்குள் வைராக்கியம் இருந்தது.

 பரலோகதேவனுக்கு பொருத்தனை செய்து நம் விண்ணப்பத்தினை ஜெபத்திலே சொல்வோமானால், அதற்கு உடனே பதில் கிடைக்கும். இது ஆழமான இரகசியமாகும். தாவீது பொருத்தனை செய்து விண்ணப்பித்தான். அவன் ஜெபத்தினைக் கேட்ட தேவன் உடனே, பதில் கொடுத்தார். தீர்க்கதரிசியாகிய நாத்தானோடு அன்றிரவே பேசி தாவீதுக்கு சொல்லும்படி வார்த்தைகளைக் கொடுத்தனுப்பினார்.

 நாத்தான் தீர்க்கதரிசி தாவீதினிடத்தில் வந்து பரலோகதேவன் சொன்ன வார்த்தைகளையும், வெளிப்பாடுகளையும் கூறினான். உன் வீடும், உன் இராஜ்ஜியமும் என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும் என்றும், உன் இராஜாசனம் என்றென்றைக்கும் நிலைப்பெற்றிருக்கும் என்றும், எதிர்க்காலத்தை குறித்தத் திட்டத்தினை வெளிப்படுத்தினான். அதுவரை இந்த திட்டம் யாருக்கும் தெரியவில்லை. ஏன் தாவீதுக்குக் கூட தெரியாது. நாத்தான் சொன்னப்பிறகே எல்லாருக்கும் தெரிந்தது. பிசாசும் இந்த வெளிப்பாட்டினைக் கேட்டான்.

     இதற்கு பின்பு  “என் தலையை நசுக்குபவர் தாவீது வம்சத்தில் தான் வருவார்” என்று யூகித்தான். எப்படியாவது அதை தடுக்க வேண்டும் என்று தந்திரமாக கிரியைச் செய்தான். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதை எப்படி கீழே விழத்தள்ளலாம் என்று மொத்த பிசாசின் இராஜ்ஜியமும் யோசித்தது. அடுத்தவனுடைய மனைவியோடு விபச்சாரம் செய்ய வைத்து, ஒரு அநீதியின் குழந்தையை பெற்றெடுக்கலாம் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

  அதன்படி பிசாசு தாவீதை  விபச்சாரப் பாவத்தில் தள்ளினான். அநீதியின் குழந்தையைப் பெற்றெடுக்கச் செய்தான். இதினிமித்தம் தாவீதின் பிள்ளைகளின் வாழ்க்கையையும் கெடுத்தான். தாவீதை இராஜ்ஜியபாரத்திலிருந்து துரத்தி வனாந்தரங்களில் அலையச்செய்தான். பல பாடுகளையும், பிரச்சனைகளையும் கொண்டுவந்தான். தாவீதின் வாழ்க்கையில் மாத்திரமல்ல, அவனுடைய குமாரனாகிய சாலமோனையும் தாக்கினான். இராஜ்ஜியங்களை இரண்டாகப் பிரித்தான். இது வெளிப்பாடுகள் நிறைவேறக் கூடாதப்படிக்கு கிரியை செய்த பிசாசின் மும்முரமான தாக்குதல்கள் ஆகும்.

  ஆனாலும், பரலோகதேவன் கிருபையினால் தன்னுடைய திட்டத்தினை தாவீதின் வாழ்க்கையில் நிறைவேற்றினார். இராஜ்ஜியங்களை ஸ்திரப்படுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தாவீதின் வம்சத்தில் பிறக்கச் செய்தார். அல்லேலூயா!  தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். ஆமென்.

     ஒரு தேவனுடைய பிள்ளைக்கு தன்னுடைய எதிர்காலத்தினைக்குறித்து அறிந்துக் கொள்ள மிக ஆவல். அதற்காக எந்த ஊழியர்கள் வந்தாலும் ஜெபிக்க செல்வது வழக்கம். ஒரு தீர்க்கதரிசியிடம் சென்றார். பிடிவாதமாக எதிர்காலத்திட்டத்தினை தெரிந்து கொள்ளவதற்காக ஜெபிக்க சொன்னார். அவரும் ஜெபித்து எதிர்காலத்தில் தேவன் உன்னை வல்லமையாக பயன்படுத்தப்போகின்றார்; மரித்தவர்களை நீ எழுப்புவாய்     என்று சொன்னார்.      ஆவியின் தூண்டுதலினால் சொன்னாரா அல்லது தொல்லை தாங்காமல் மாம்சத்தில் சொன்னாரா என்பது தெரியாது. அதற்கு பின்பு அந்த சகோதரரின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. எங்கு சென்றாலும் ஒரே பாவச்சோதனை. பாவ எண்ணங்கள் மேலோங்கின. கடைசியில் தேவன் வல்லமையாக பயன்படுத்த முடியாதப்படிக்கு பாவத்தில் விழுந்தான். அவனுடைய சாட்சியான வாழ்க்கை கெட்டது. தேவத்திட்டத்தினை இழந்துவிட்டான்.

       இந்த நாட்களிலும் இந்த சகோதரனைப்போல அநேக தேவனுடைய பிள்ளைகள் எதிர்காலத்தினைக்குறித்து நடப்பு நாட்களில் அறிந்துக்கொள்ள மிக ஆவலாக இருக்கின்றார்கள். அது பாவமல்ல… ஆனால் அது சில வேண்டாத பிரச்சனைகளை வாழ்க்கையில் கொண்டு வரும்.        

      தேவனுடைய பிள்ளைகளே! கருத்தாய் இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசிக்கின்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்டெடுக்கப்பட்டவர்களே!! எதிர்காலத் திட்டத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை வருவது நியாயமான ஒன்றுதான். அதற்காக பொறுமையாக தேவசமூகத்தில் காத்திருங்கள். ஊழியர்களையும், தீர்க்கதரிசிகளையும் தேடி  ஓடி  செல்லாதீர்கள். ஏற்ற நேரத்தில் பரலோக தேவன் எதிர்காலத்திட்டத்தினை உங்களுக்கு வெளிப்படுத்துவார். அதுவரை பொறுமையாக அமர்ந்திருங்கள். இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் மற்றும் போராட்டங்கள் வருவதை தடுக்கலாம். தேவசித்தம் தடையின்றி வாழ்க்கையில் நிறைவேறும்.

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 


 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..