என்றும் இளமை, என்றென்றும் இளமை

சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். என்றும் இளமை என்றென்றும் இளமை என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை எண்ணாகமம் 23:22 ம் வசனத்தின் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. இந்த செய்தியின் தலைப்பை பார்க்கும் போது ஏதோ சினிமா படத்தின் பெயர் போல தோன்றும். ஆனால், உண்மையிலே இது சினிமா படத்தின் பெயரா? இல்லையா? என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ஏனென்றால், சினிமா படம் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகதான் சினிமா பார்த்தேன். ஆதலால் எனக்கு தெரியவில்லை. ஒருவேளை சினிமா படத்தின் பெயராக இருக்குமோ என்ற ...