தண்ணீரைப் போல் தளம்புதல்...
தண்ணீரைப் போல் தளம்பினவர்கள் மேன்மையடையமாட்டார்கள். பரிசுத்த வேதத்தில் யாக்கோபின் குமாரன் ரூபன் தண்ணீரைப் போல் தளம்பினான். அவனைப் பார்த்து யாக்கோபு மேன்மையடையமாட்டாய் என்று கூறினான்.(ஆதியாகமம் 49:4). அவன் எந்த காரியத்தில் தண்ணீரைப் போல் தளம்பினான்? தண்ணீரைப் போல் தளம்புதல் என்றால் என்ன? நாம் தண்ணீரைப் போல் தளம்புகின்றோமா? தண்ணீரைப் போல் தளம்பாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? போன்றவற்றினைக் குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் கொஞ்சம் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார்.
ரூபன் யாக்கோபின் சேஷ்டப்புத்திர குமாரன் ஆவான். மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். யாக்கோபின் சத்துவமும் முதற்பெலனுமானவன். சேஷ்டப்புத்திர சுதந்திரம் அவனுக்குரியது. யாக்கோபு கானானை நோக்கி தன் சொந்த குடும்பத்தோடு பிரயாணம் பண்ணினான். இப்படி பிரயாணம் செய்து வரும்போது, ஏதேர் என்கின்ற கூடாரத்துக்கு அப்புறம் கூடாரம் போட்டு தங்கி குடியிருந்தான். அந்த இடத்தில் அவன் வசிக்கும் போது ரூபனுக்கு பரலோகத்திற்கு எதிராக பாலியல் உணர்வு தூண்டப்பட்டது. அந்த உணர்வுகளை அடக்காமல் மாம்ச இச்சைக்கு இடம் கொடுத்து, பில்காளோடு சயனித்தான். யார் இந்த பில்காள்? தன் தகப்பனுடைய மறுமனையாட்டி. அதாவது ரூபனுடைய சித்தி. அவளோடு சென்று விபச்சாரம் செய்தான். இதை யாக்கோபு கேள்விப்பட்டான். (ஆதியாகமம் 35: 2)
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் கொண்டு செல்லும்போது, அந்தத் தண்ணீர் நிலையாக இருக்காமல் தளம்பும். சின்ன சின்ன ஏற்ற இறக்கங்களுக்கும் கூட தன் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கும். இதைத்தான் தளம்புதல் என்று சொல்லுவோம். எவ்வளவு தடுத்தாலும் இதை மாற்ற முடியாது. இது இயற்கை விதியாகும். அதேபோல் ரூபனுக்கு உணர்ச்சிகள் தூண்டப்பட்டவுடன் அதை அடக்காமல் தன் இஷ்டத்திற்கு தன்னை விட்டு விட்டான். உணர்ச்சிகளை தணிக்க தன் சித்தியை பயன்படுத்திவிட்டான். இதைக் கேள்விப்பட்ட யாக்கோபு முதிர்வயதில் தன்னுடைய பிள்ளைகள் அனைவரையும் ஆசீர்வதிக்கும்போது, சேஷ்டப்புத்திரனாகிய ரூபனைப் பார்த்து தண்ணீரைப் போல் தளும்பினவனே நீ மேன்மையடையமாட்டாய் என்று கூறினான். ஆம், பாலியல் உணர்வில் தண்ணீரைப் போல தளம்பி தாறுமாறான உறவுகளில் சிக்கிக் கொண்டவர்கள் மேன்மையடையமாட்டர்கள்.
தேவனுடைய பிள்ளைகளே! பாலியல் உணர்வு என்பது
பொதுவான ஒன்றாகும். அனைவருக்கும் இருக்கும். எனக்கு இல்லை… உனக்கு இல்லை… அவனுக்கு
இல்லை என்று யாரும் கூற முடியாது. எனக்கு தூண்டப்படாது உனக்கு தூண்டப்படாது என்று யாரும்
மேன்மைப்பாராட்டவும் முடியாது. எல்லாருக்கும் தூண்டப்படும். அப்படி தூண்டப்படும் நேரத்தில்
அது இஷ்டத்திற்கு நம்மை விட்டு விடக்கூடாது. நம் சரீரத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது.
கண்களால் பார்த்தவர்களையெல்லாம் உறவுமுறை வித்தியாசமின்றி விபச்சாரம் செய்துவிடக்கூடாது.
தண்ணீரைப் போல் தளம்பினால் கண்டிப்பாக வாழ்க்கையில் மேன்மை என்ற ஒன்று பரலோக தேவனால்
கிடைக்காது. ஆசீர்வாதமும் கிடைக்காது. எனவே, இக்காரியங்களில் வாலிபர்கள், தேவனுடைய
ஊழியக்காரர்கள், அபிஷேகம் பெற்றவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியமான
ஒன்றாகும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு
மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment