உயர்வுக்கு பின் தாழ்த்தப்படுவது ஏன்?

நம்முடைய வேலையில் வாழ்க்கையில் ஒரு உயர்வு கிடைத்த பின்பு தாழ்த்தப்படுவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். வனாந்திரத்தில் கொஞ்ச ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது, சாமுவேல் தீர்க்கதரிசியால் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பிறகு, சவுலின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். அவன் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்தது. எனவே, சவுலுக்கு ஆயுததாரியாக உயர்த்தப்பட்டான். வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்தவனுக்கு அரன்மனையில் பெரிய வேலை. இந்த உயர்வு அவனுக்கு ரொம்ப நாட்களாக நீடிக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்பு, மறுபடியும் சவலை விட்டு திரும்பி போய், வனாந்திரத்தில் இருக்கிற அதே கொஞ்ச ஆடுகளை மேய்க்கச் சென்றான் (1 சாமுவேல் 17: 15). ஏன் இந்த தாழ்வு? இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் கூட அநேக தேவனுடைய பிள்ளைகள் வாக்குத்தத்தினை பெற்று, பரலோக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, வாழ்க்கையில் அதிசயம் நடந்து உயர்த்தப்படுகின்றார்கள். ஆனால், அது ரொம்ப நாட்கள் நீடித்திருப்பதில்லை. சீக்கிரத்தில் தாழ்த்தப்பட்டு பழைய நிலைக்கே வந்து விடுகின்றார்கள். இப...