உயர்வுக்கு பின் தாழ்த்தப்படுவது ஏன்?
நம்முடைய வேலையில் வாழ்க்கையில் ஒரு உயர்வு
கிடைத்த பின்பு தாழ்த்தப்படுவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். வனாந்திரத்தில் கொஞ்ச ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்த தாவீது, சாமுவேல் தீர்க்கதரிசியால் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட
பிறகு, சவுலின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். அவன் கண்களில் அவனுக்கு
தயவு கிடைத்தது. எனவே, சவுலுக்கு ஆயுததாரியாக உயர்த்தப்பட்டான். வனாந்திரத்தில் ஆடுகளை
மேய்த்தவனுக்கு அரன்மனையில் பெரிய வேலை. இந்த
உயர்வு அவனுக்கு ரொம்ப நாட்களாக நீடிக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்பு, மறுபடியும்
சவலை விட்டு திரும்பி போய், வனாந்திரத்தில் இருக்கிற அதே கொஞ்ச ஆடுகளை மேய்க்கச் சென்றான்
(1 சாமுவேல் 17: 15). ஏன் இந்த தாழ்வு?
இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் கூட அநேக
தேவனுடைய பிள்ளைகள் வாக்குத்தத்தினை பெற்று, பரலோக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, வாழ்க்கையில்
அதிசயம் நடந்து உயர்த்தப்படுகின்றார்கள். ஆனால், அது ரொம்ப நாட்கள் நீடித்திருப்பதில்லை.
சீக்கிரத்தில் தாழ்த்தப்பட்டு பழைய நிலைக்கே வந்து விடுகின்றார்கள். இப்படி உயர்த்தப்பட்டு
தாழ்த்தப்படுவதற்கு என்ன காரணம்? சீரான உயர்வை பெறாமல் ஏறி இறங்க காரணம் என்னவாக இருக்கும்?
இதன் இரகசியங்களை இந்த தீர்க்க தரிசன செய்தியில் விரிவாக தியானிக்கலாம். ஜெபத்துடன்
வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் நிச்சயமாக பேசுவார்.
தாவீது அரண்மனையில் இருந்து மறுபடியும் ஆடுகளை
மேய்க்க வனாந்தரத்திற்கு வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள அவனுடைய வாழ்க்கையில் நடந்த
இன்னொரு சம்பவத்தை தியானிக்க வேண்டும். அதன் மூலம் மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
அதைக் குறித்து முதலில் பார்ப்போம்.
தேவனுடைய
இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீது இராஜாவாக உயர்த்தப்பட வேண்டும் என்பதும் பரலோக தேவனுடைய
திட்டம். அதற்கு சவுலின் குமாரத்தியை அவன் விவாகம் பண்ண வேண்டும். அதேபோல் இராஜாங்கத்தை
குறித்து அறிந்து கொள்ள அரன்மனையில் வேலை செய்ய வேண்டும். இதுவும் பரலோக திட்டம். இதன்படி பரலோக தேவன் சவுலின் இருதயத்தில் ஒரு குருட்டாட்டத்தை
கொடுத்து, தன்னுடைய மூத்த மகளான மேராவை, தாவீதுக்கு திருமணம் பண்ணி கொடுக்க வேண்டும்
என்ற எண்ணத்தை கொடுத்தார். அவனும் தாவீதைப் பார்த்து என் மூத்த மகளை உனக்கு மனைவியாக
விவாகம் பண்ணி கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாக இருந்து மாத்திரம் கர்த்தருடைய யுத்தங்களை
நடத்து என்றான்.( 1 சாமுவேல் 18:17) கண்டிப்பாக சவுல் இதை நல்ல மனதோடு சொல்லவில்லை.
எப்படியாவது தாவீதை பெலிஸ்தியன் கையில் விழ பண்ண வேண்டும் என்ற தீய நோக்கத்தோடுதான்
சொன்னான். ஆனாலும், அது தேவனுடைய திட்டம்.
சவுல் இராஜாவே தன்னுடைய மகளை வனாந்தரத்தில் கொஞ்சம்
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த, தாவீதுக்கு விவாகம் பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்லுகின்றான்.
ஆனால், தாவீது தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்து இராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம்; என் ஜீவன் எம்மாத்திரம்; என்
தகப்பன் வம்சம் எம்மாத்திரம் என்று அறிக்கை செய்கின்றான். இப்படி எதிர்மறையாக அவன்
பேசியதினிமித்தம் சவுல் விருப்பப்பட்டு தன்
மூத்த மகளை தாவீதுக்கு கொடுக்கும் காலம் வந்தபோது வேறொருவனுக்கு கொடுக்கப்பட்டாள்.
அந்த திருமணம் நடக்காமலே தடைப்பட்டது. இதற்கு
காரணம் என்ன? தாவீதின் தாழ்வு மனப்பான்மை தான்.(18:18)
ஆனாலும்
,வாக்குத்தத்தம் கொடுத்து அபிஷேகம் பண்ணின தேவன் அவனை அப்படியே விடவில்லை. ஒரு புது
காரியத்தினை செய்தார். சவுலின் மற்றோர் மகள் மீகாள் தாவீதை நேசித்தாள். ஆதலால், சவுல் என்னுடைய இரண்டாம் குமாரத்தியை உனக்கு
விவாகம் பண்ணித் தருகின்றேன். இதனால் நீ என் மருமகனாவாய் என்று சொன்னான். தன் ஊழியக்காரர்களை
அனுப்பி பேசினான். அதற்கு மறுபடியும் தாவீது இராஜாவுக்கு மருமகனாகிறது இலேசான காரியமா?
அற்பமாய் எண்ணப்பட்டவனாக இருக்கிறேன் என்று சொல்கின்றான்.(18:23)
இதை
சவுலின் ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். தாவீதின் தாழ்வு மனப்பான்மையை அறிந்த சவுல், யோசனை
செய்து இராஜா பரிசத்தை விரும்பாமல், நூறு பெலிஸ்தியர்களின்
நுனித்தோல்களினால் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாய் இருக்கின்றார் என்று சொல்ல
சொன்னான். இதைக் கேட்ட பின்பு, தாழ்வு மனப்பான்மையிலிருந்த
தாவீதுக்கு சவுலின் குமாரத்தி திருமணம் செய்வது, பிரியமாய் இருந்தது. ஏனென்றால் நூறு பெலிஸ்தியர்களின் நுனித்தோல் என்பது
மிகவும் சின்ன காரியம் ஆகும்.
இந்த சம்பவத்தின் மூலம் தாவீதுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது என்பதையும், அதனால் தன் மேல் இருந்த அபிஷேகத்திற்கு விரோதமாகவும் தேவத்திட்டத்திற்கு விரோதமாகவும் அறிக்கை செய்து ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் இழந்து போனதையும் அறிந்து கொள்ளலாம்.
அதேபோல்தான்
கொஞ்ச ஆடுகளை வனாந்திரத்தில் மேய்த்துக்கொண்டிருந்தபோதே அபிஷேகமும் உயர்வும் கிடைத்தது.
அரண்மனைக்கு அழைக்கப்பட்டான். நல்ல கௌரவமான
வேலையும் கிடைத்தது. அந்த உயர்வுக்காக தேவனுக்கு நன்றி சொல்லி துதித்து, பரலோக திட்டத்திற்கு
தன்னை விட்டுக் கொடுக்காமல், நான் எம்மாத்திரம்?
நான் தகுதியானவனா? என் குடும்பம் தகுதியானதா?
என்னால் இது முடியுமா? என்று எதிர்மறையாக பேசி இருப்பான். இதுவே அரண்மனையில் இருந்து
மறுபடியும் வனாந்தரத்திற்கு துரத்தி இருக்கும். உயர்த்தப்பட்ட பின்பு தாழ்த்தப்பட்டான்.
இந்த
தீர்க்கதரிசன செய்தியை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே..! தாவீது தன் மேல் இருந்த அபிஷேகத்திற்கு விரோதமாகவும், தேவத்திட்டத்திற்கு
விரோதமாகவும் பேசி , உயர்வையும், ஆசீர்வாதத்தையும் இழந்து தாழ்த்தப்பட்டான். அதேபோல்
உங்கள் மேல் உள்ள அபிஷேகத்திற்கு விரோதமாகவும் உங்களை குறித்து தேவன் வைத்திருக்கும்
திட்டத்திற்கு விரோதமாகும் பேசாதீர்கள். உயர்த்தப்படுவீர்கள் தாழ்வு இல்லாமல் உயர்த்தப்பட்டு
கொண்டே இருப்பீர்கள்.
சரி… அபிஷேகத்திற்கு விரோதமாகவும் பேசுவது என்றால்
என்ன? என்பதாக நீங்கள் கேட்கலாம். உதாரணமாக புது வீட்டை தருவேன் என்று பரலோக தேவன் உங்களுக்கு வாக்கு கொடுத்திருப்பார். அதற்கான அபிஷேகத்தையும் கொடுத்திருப்பார். அதற்கு
விரோதமாக எனக்கெல்லாம் புது வீடு கிடைக்குமா? என்னால் புது வீடு வாங்க முடியுமா? தேவைகள் இருக்கின்றதே… எனக்கு பணம் இல்லையே.. கண்டிப்பாக என்னால் முடியவே
முடியாது என்பதாக பேசுவது அபிஷேகத்திற்கு விரோதமாக பேசுவதாகும். இப்படி பேசினால் நமக்குள் இருக்கும் அபிஷேகம் கிரியை
செய்யாது. இதனால் வீடு கட்டுவதற்கு வாய்ப்பு
கிடைத்தும் அல்லது அது வீடு கட்ட ஆரம்பித்தும், அதை முடிக்க முடியாமல் போகலாம். எனவே
எச்சரிக்கையாக இருப்போம். பரலோக தேவனின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு
மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன
வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
இப்பொழுது தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக Prophetic words என்ற Android Mobile App வெளியிடப்பட்டுள்ளது. இதில் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கலாம். இதை Play Store-ல் Prophetic words என டைப் செய்து Install செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும்.
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment