புத்திமானாய் நடப்பதினால் வரும் ஆசீர்வாதங்கள்



       மனுஷனுக்குள்ளே இருந்து மனுஷனை தீட்டுப்படுத்தும் காரியங்கள் பதிமூன்று(13) உள்ளன.  இதைக் குறித்து மாற்கு ஏழாம் அதிகாரத்தில் 20 முதல் 23 வசனங்கள் வரை வாசிக்கின்றோம்.  இதில் பதிமூன்றாவது  காரியமாக மதிக்கேடு என்ற ஒன்று உள்ளது. இதுவும் மனுஷனை தீட்டுப்படுத்தும்.  எப்படி விபச்சாரம், வேசித்தனம், காமவிகாரம் மனிதனை தீட்டுப்படுத்தி, ஆசீர்வாதங்களை இழக்கச் செய்யுமோ. அதேபோல் மதிக்கேடும் தீட்டுப்படுத்தி, பரலோக ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும், அற்புதங்களையும் இழக்கச் செய்யும். அறிவுக்கெட்டவன், முட்டாள் என்று கூப்பிடுவதை கேட்டிருப்போம்.  இவைகள் மதிக்கேடு உள்ளவர்களை அழைக்கும் மற்றோர் பெயராகும். அதன்படி  மதிகேடு என்பது அறிவு கெட்டுப் போகுதல்  ஆகும்.  ஒரு மனிதன் அறிவு இல்லாதவனாக  வாழ்வது மதிக்கேடு ஆகும்.

         

  அதே நேரத்தில் ஒரு மனிதன் அறிவு உள்ளவனாகவும், புத்தி உள்ளவனாகவும் இருந்தால் அனேக ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்றுக் கொள்வான். அறிவில்லாதவனாக இருக்கும் போது, ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் இழப்பான். அறிவு உள்ளவனாக மாறும்போது ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வான்.

        

  பரிசுத்த வேதத்தில் ஒரு மனிதன் புத்திமானாக இருந்து, அநேக ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்றுக் கொண்டான். அந்த மனிதன் யார்? அவன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன நன்மைகளை பெற்றுக் கொண்டான்? என்பதனைக் குறித்து தொடர்ந்து தியானிப்போம். புத்திமானாய் மாறி அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்வோம்.

 

   பரலோக தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதை பற்றி 1 சாமுவேல் 18 ஆம் அதிகாரம் ஐந்தாம் வசனத்தில் புத்தியாய் காரியத்தினை நடப்பித்தான் என்றும், அதே அதிகாரம் பதினான்காம் வசனத்தில் புத்திமானாய் நடந்தான் என்றும், தொடர்ச்சியாக பதினைந்தாம் வசனத்தில் மகா புத்திமானாய் நடந்தான் என்றும், முப்பதாம் வசனத்தில் புத்திமானாய் நடந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வசனங்களின்படி தாவீது புத்திமான் என்பதனையும்,  அவன்  புத்திமானாக நடந்தான் என்பதனையும் அறிந்துக்கொள்ளலாம். இதனால் இராஜாவாக மாறுவதற்கு முன்பாகவே பல நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டான்.

      

  எப்படி புத்திமானாய் வாழ்ந்தான்? என்னென்ன நன்மைகளை பெற்றான்? அவைகளை பெற நாமும் என்ன செய்ய வேண்டும்? தொடர்ச்சியாக பார்க்கலாம். இந்த தீர்க்கதரிசனம் செய்தியை வாசிப்பதற்கு முன்பாக 1 சாமுவேல் 18 ஆம் அதிகாரத்தினை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக வாசித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதான் இந்த செய்தி நன்றாக புரியும்.


புத்திமானாய் நடந்ததினால் தாவீது பெற்ற நன்மைகள்:

    

    தாவீது புத்திமானாய் நடந்ததினால் நான்கு விதமான நன்மைகளை பெற்றுக் கொண்டான்.  அவைகள்

   1) எல்லாருடைய கண்களுக்கும் பிரியமாக இருந்தான்.

   2.) கர்த்தர் அவனோடுக் கூட இருந்தார்.

   3) சவுல் அவனைக் கண்டு பயந்தான்.

   4.) அவன் பெயர் கனம் பெற்றது. இதைக் குறித்து விரிவாக தியானிக்கலாம்.

 

1.எல்லாருடைய கண்களுக்கும் பிரியமாக இருந்தான் :

    

    நம்முடைய வாழ்க்கையில் பல நபர்களையும், பல உறவுகளையும் சந்திப்போம். எல்லாரிடமும் நமக்கு பழக்கம்,. பேச்சுவார்த்தை, உடன்பாடு மற்றும் வரவு-செலவு இருக்கும்.  எல்லாருடைய கண்களுக்கும் பிரியமாக வாழ முடியாது. குடும்பத்தில் சித்தப்பாவிடம் நன்றாக பேசி பிரியமாக இருப்போம். ஆனால், பெரியப்பாவுடன் உள்ள உறவு முறை கேள்விக்குறியாகத்தான் இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மேனேஜருக்கு பிரியமாக இருக்கலாம். ஆனால், சூப்பர்வைசருக்கு அதுவும் கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இப்படி ஒருவருக்கு பிரியமாக இருந்தால் மற்றவர்களுக்கு வெறுப்பாகத்தான் தெரிவோம். இதுதான் நிதர்சனமான உண்மை. இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும். எல்லோரும் இந்த சூழ்நிலை கடந்து வந்திருப்போம்.

       

  ஆனால், தாவீதைப் பாருங்கள் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், தன்னோடு உடன் ஊழியம் செய்கின்ற சவுலுடைய ஊழியக்காரர்களின் கண்களுக்கும் பிரியமாய் இருந்தான்.(1 சாமுவேல் 18:5) எப்படி அவனால் முடிந்தது? சவுல் தன்னை எவ்விடத்திற்கு அனுப்புகின்றானோ அவ்விடத்திற்கு சென்று புத்தியாய் காரியத்தினை நடப்பித்தான். அதனால் எல்லாருக்கும் பிரியமானவனாக இருந்தான்.  

     

  ஆம் புத்திமானாய் காரியங்களை நடப்பிக்கும்போது, எல்லோருடைய கண்களுக்கும் பிரியமாக இருக்க முடியும். உறவுகளுக்கு முன்பாகவும் பிரியமாக இருக்க முடியும். இதினிமித்தம் வீண் சண்டைகள், வாக்குவாதங்கள், பொறாமைகள் வராது. அதனால் தேவனுடைய ஆசீர்வாதத்தினை தடையில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும்.

  

  இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் குடும்பங்களில் புத்திமானாய் காரியங்களை நடப்பியுங்கள். எல்லோருடைய கண்களுக்கு பிரியமாக மாறுங்கள். வீணாக இருக்கின்ற ஆசீர்வாத தடைகளை உடைத்து எறியுங்கள்.

 

2.கர்த்தர் அவனோடு கூட இருந்தார் :

    

  மதிக்கேடு மனிதனை தீட்டுப்படுத்தும் என்று இந்த செய்தியின் தொடக்கத்தில் பார்த்தோம். விபச்சாரம் செய்தால் எப்படி  அது மனிதனை தீட்டுப்படுத்துமோ, அதேப்போல் மதிக்கேடும் தீட்டுப்படுத்தும். விபச்சாரம் பெரிய பாவம் என்றும், மதிக்கேடு சிறிய பாவம் என்றும் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது.  இரண்டும் சமமாக உள்ளதுதான்.

    

  தீட்டுள்ள இடத்தில் தேவப்பிரசன்னத்தையோ பரலோக அபிஷேகத்தையோ உணர முடியாது. அங்கு தேவன் இருப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அற்புதங்களையும், அதிசயங்களையும் காணவும்   முடியாது. மதிக்கேடு இருக்கின்ற இடத்தில் தேவாதி தேவன் இருப்பதில்லை. இதனால் தோல்விகள், அவமானங்கள் வரும். அதிசயங்கள்  மற்றும் அற்புதங்கள் நடப்பதில்லை.

 

     ஆனால், தாவீது தன்னுடைய எல்லா செயல்களையும் புத்திமானாய் நடந்தான். அது அவனுக்கு பரிசுத்தம். ஆதலால் கர்த்தர் அவனோடு கூட இருந்தார். எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் சர்வவல்ல தேவன் கூட இருப்பது.   இப்படி தேவன் கூட இருக்கும் போது,  செய்கின்ற எல்லா காரியங்களும் வாய்க்கும். தோல்வி என்பதே கிடையாது.  ஒருவேளை தோல்வி கிடைத்திருந்தாலும் அதற்குள் வெற்றி மறைந்திருக்கும்.

   

  அதனால் இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! புத்திமானாய் காரியங்களை நடப்பியுங்கள்.  பரிசுத்தமாக மாறுவீர்கள். கர்த்தர் உங்களோடு கூட இருந்து எல்லாவற்றிலும் ஜெயத்தினை தருவார்.

 

3.சவுல் அவனைக் கண்டு பயந்திருந்தான்:

     

   இந்த சம்பவத்தில் சவுல் ஒரு பின்மாற்றக்காரன். தேவனால் விடப்பட்ட ஒரு அசுத்த ஆவி அவனுக்குள் இருந்து, அவனை கலங்க பண்ணிக் கொண்டிருந்தது. என்றைக்கும் பின் மாற்றக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களைக் கொண்டு தேனுடைய பிள்ளைகளையும், ஊழியக்காரர்களையும் பிசாசு எளிதாக தாக்குவான். பின்மாற்றக்காரர்கள் நம்முடைய வாழ்க்கையில் வந்தால் ஏதோ ஒரு பெரிய கலகத்தையும், பாவத்தையும் செய்து விடுவார்கள். குடும்பத்தினையும், குடும்ப உறவுகளையும் பிரித்து விடுவார்கள். பரிசுத்தத்தினைக் கெடுத்து விடுவார்கள். தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவுகளைப் முறித்துவிடுவார்கள். பரலோக தேவன் தரும் ஆசீர்வாதங்களை திருடிக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் துன்மார்க்ககாரர்கள், அகங்காரிகள், தேவனுக்கும் மனிதர்களுக்கும் பயப்படாதவர்கள். எனவே, அவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆனால், யாருக்கும் பயப்படாத பின்மாற்றக் காரணமாக இருந்த சவுல், தாவீதை கண்டு பயந்திருந்தான்.  காரணம் என்ன? தாவீது மகாபுத்திமானாய் நடந்ததுதான்.

 

  நாமும் புத்திமானாய் நடக்கும் போது,  பின்மாற்றக்காரர்கள், அகங்காரிகள்,  துன்மார்க்கர்கள் மற்றும்தேவனுக்கு பயப்படாதவர்கள் நம்மை கண்டு பயப்படுவார்கள். இதனால் தேவையில்லாத வீணான பிரச்சனைகள், போராட்டங்கள் வாழ்க்கையில் வராது. ஆசீர்வாத தடைகளும் இருக்காது. ஆகையால்  தேவனுடைய பிள்ளைகளே புத்திமானாய் நடங்கள். ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

 

4.அவன் பெயர் கனம் பெற்றது :

  

   இந்த பாவ உலகில் பொருட்களையும், பணத்தையும், ஆஸ்திகளையும் மற்றும் நகைகளையும் சம்பாதிப்பது எளிது.  பொய் பேசி, பொய் நாவினால் கூட சம்பாதிக்கின்றவர்கள் உண்டு.  ஆனால், கனத்தினை  பெற்று கொள்வது கடினம். அதை சம்பாதிப்பது கடினம். ஒருவனுடைய பெயர் கணப்படுத்தப்படுவது மிக சாதாரணமாக நடக்காது.  சிறு வயதிலேயே தாவீதின் பெயர் கனப்படுத்தப்பட்டது. ஏனென்றால், அவன் புத்திமானாய் நடந்துக் கொண்டான்.

 

  இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் காரியங்களில் புத்திமானாய் நடங்கள். வாழ்க்கையில் கனப்படுத்தப்படுவீர்கள். உங்கள் பெயர் கனம் பெறும். ஆமென்.


 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

இப்பொழுது தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக Prophetic words என்ற Android Mobile App வெளியிடப்பட்டுள்ளது.  இதில் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கலாம். இதை Play Store-ல்  Prophetic words என டைப் செய்து Install செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும். Click Here 

இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..