மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2021
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே… தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. அதன்படி கடந்த 2021-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்கள் அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று நபருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் 2021- ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. (முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய்) சுமார் ஆறாயிரத்திற்கும் (6,000) மேற்பட்டோர் முன்பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டார்கள். எழுதிய நோட் அல்லது பேப்பர் எங்களுக்கு வந்...