புதுவருட வாக்குத்தத்த தீர்க்கதரிசன செய்தி-2023
ஏதோ கடமைக்காக ஒவ்வொரு வருடமும் வாக்குத்தத்தங்களை எடுத்து அறிவிப்பதில்லை. மாறாக உண்மையிலே பரலோக தேவன் என்ன செய்யப் போகின்றார் என்பதைத்தான் வாக்குத்தத்தமாக மற்றவர்களுக்கு சொல்கின்றோம். பரலோக தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தத்தினை இப்படித்தான் என்று யாரும் சொல்ல முடியாது. இதுதான் வேண்டும் என்று யாரும் கட்டளையிடவும் முடியாது. ஒவ்வொரு வருடமும் அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாரோ, தம்முடைய புஸ்தகத்தில் என்ன எழுதியுள்ளாரோ அதைதான் வாக்குத்தத்தமாக கொடுப்பார். எதை கொடுத்துள்ளாரோ அதைதான் வாழ்க்கையில் செய்வார்.
இந்த 2023 ஆம் வருடமும் சங்கீதம் 27 ம் அதிகாரம் ஆறாம் வசனத்தில் இருந்து என் தலை என்னை சுற்றிலும் இருக்கின்ற நம் சத்துருக்களுக்கு
மேலாக உயர்த்தப்படும் என்று வாக்கு கொடுத்துள்ளார்.
கடந்த வருடமும் இதைத்தான் எனக்கும் என்னோடு கூட இந்த ஊழியத்தில் இணைந்து இருக்கின்ற
சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் கொடுத்தார். அதன்படி சத்துருக்களுக்கு
முன்பாக என் தலையை உயர்த்தினார். அதை என்னால் உணர முடிந்தது. அதைத்தான் தொடர்ச்சியாக
இந்த வருடமும் செய்யப்போகிறார். சென்ற வருடத்தை
விட அதிகமான ஒரு உயர்வை இந்த வருடம் தரப்போகின்றார். நிச்சயமாகவே தருவார். இதை வாசிக்கின்ற
எல்லாருக்கும் சத்துருக்களுக்கு முன்பாக உயர்வு என்பது உண்டு.
எப்படி சத்துருக்களுக்கு முன்பாக உயர்வை தருவார்? இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
எப்படி ஜெபிக்க வேண்டும்? சத்துருக்கள் யார்? என்பதாய் நீங்கள் யோசிக்கலாம். அதைக் குறித்து விளக்கமாக
பார்ப்போம்.
பரலோக தேவன் கொடுத்துள்ள வாக்குத்தத்த வசனங்களை நன்றாக கவனித்து வாசித்து பாருங்கள்.
என் தலை… என்னை சுற்றிலும்… என் சத்துருக்கள்… என்று என் என் எனும் வார்த்தைகள் மூன்று
முறை வந்துள்ளது. இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன? அதாவது இந்த செய்தியை வாசித்து யாரெல்லாம்
விசுவாசிக்கின்றார்களோ அவர்களை சுற்றிலும் இருக்கின்ற, அவர்களுடைய சத்துருக்களுக்கு
முன்பாக, அவர்களுடைய தலையை பரலோக தேவன் உயர்த்துவார். மற்றவர்களுடைய சத்துருக்களுக்கு
முன்பாக அல்ல. உங்கள் சத்துருக்களுக்கு முன்பாகத்தான் உங்கள் தலை உயர்த்தப்படும். ஆமென்
சத்துரு என்பவன் யார் பிசாசுதானே என்பதாய் நீங்கள் சொல்லலாம். ஆனால், இந்த இடத்தில்
சத்ரு என்று குறிப்பிடப்படுவது பிசாசை அல்ல. ஏனென்றால் அவன் உலகம் முழுவதும் உள்ள தேவனுடைய பிள்ளைகளுக்கும்
அவன்தான் சத்துரு. ஆதலால் பிசாசை குறிப்பிடவில்லை. அப்படி என்றால் யார் சத்துரு? இந்த
இடத்தில் சத்துரு என்பது மனிதர்களை குறிப்பிடுகின்றது. அதாவது நமக்கு விரோதமாக கிரியை
செய்கின்ற பிசாசின் சுபாவம் கொண்ட மனிதர்கள் ஆவார்கள். தேவத்திட்டம் நம்முடைய வாழ்க்கையில்
நிறைவேறக்கூடாதபடிக்கு தடுப்பார்கள். இவர்கள் நம்முடைய உறவினர்களாக இருக்கலாம். கூட வேலை செய்கின்றவர்களாக இருக்கலாம். அக்கம் பக்கத்தினராக
கூட இருக்கலாம். ஆனால் பிசாசின் சுபாவத்தால் நிரப்பப்பட்டு நமக்கு விரோதமாக கிரியை
செய்வார்கள். நம்மை பகைப்பார்கள். நமக்கு விரோதமாக பேசுவார்கள். அவமானப்படுத்துவார்கள்.
அவர்களுக்கு முன்பாகதான் ஒரு உயர்வை பரலோக தேவன் தரப்போகின்றார். எப்படி உயர்வை தருவார்?
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? என்று உங்கள் மனதிற்குள்
யோசிக்கலாம். அதைக் குறித்து தியானிப்போம்
பரிசுத்த வேதத்தில் யோசேப்பு என்ற ஒரு பரிசுத்தவானைக் குறித்து வாசித்திருப்போம்.(ஆதியாகமம் 37 ) இவனுக்கு முன்பாக பிறந்த பத்து மூத்த சகோதரர்கள் உண்டு. இவனைக் குறித்து பரலோக தேவன் பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். இதை அவனுடைய சகோதரர்களுக்கு சொல்லும் பொழுது, அவனோடு பேசாமல், அவன் மேல் பொறாமைக் கொண்டு, அவனை பட்சமாய் பகைத்தார்கள். அவன் மேல் எரிச்சல் அடைந்தார்கள். பரலோக தேவன் யாரைக் குறித்து பெரிய திட்டத்தினை வைத்திருக்கின்றாரோ அவர்களை மற்றவர்கள் பகைப்பார்கள். அவர்களிடம் பிசாசின் சுபாவத்தினை காட்டுவார்கள். அவர்களை அழிக்க நினைப்பார்கள். அதேபோல் யோசேப்பையும் அழிக்க நினைத்தார்கள்.
ஒருநாள் ஆடுகள் மேய்க்கச் சென்ற தன்னுடைய
சகோதரர்களை விசாரிக்கச் சென்றான். தகப்பனாகிய
யாக்கோபு அவனை அனுப்பினான். தூரத்திலே அவன் வருகிறதைக் கண்ட அவனுடைய சகோதரர்கள், அவனை
கொலை செய்ய சதி யோசனை பண்ணினார்கள். அவனைக் கொன்று குழியிலே போட வேண்டும் என்பது அவர்களுடைய
திட்டம். பரலோக தேவன் அந்த திட்டத்தினை அபத்தமாக்கினார்.
அவனை எந்தக் குழியில் போட்டார்கள் அதிலிருந்து தூக்கி எடுத்து, எகிப்துக்கு அனுப்பி,
அதிபதியாக மாற்றினார். ஏற்ற வேளையில் தன் சகோதரர்கள் மத்தியில் உயர்த்தினார். அழிக்க நினைத்த
சகோதரர்கள் அவனுக்கு முன்பாக வந்து பணிந்து குனிந்து வணங்கினார்கள். எந்த குழியில்
தள்ளி அவனை அழிக்க நினைத்தார்களோ அதே குழியை அவனுடைய உயர்வுக்கு பயன்படுத்தும் கருவியாக மாற்றினார்.
அதேபோல் உங்களையும் உங்களை குறித்த தேவத்திட்டத்தையும் அழிக்க நினைக்கின்ற சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், பொறாமைக்கொண்டவர்கள் இருக்கலாம். உங்களுக்கு விரோதமாக சதியோசனை செய்யலாம். உங்களை அவமானப்படுத்தலாம். அவர்கள் எதைக் கொண்டு உங்களை அழிக்க நினைக்கின்றார்களோ. எந்த காரணத்தை கொண்டு உங்களுக்கு விரோதமாக எழும்புகின்றார்களோ. ’அதைக்கொண்டே’ திரும்ப சொல்லுங்கள் ’அதைக்கொண்டே’ உங்களை உயர்த்துவார். அதை உயர்த்தும் ஆயுதமாக பயன்படுத்துவார்.
ஏற்ற நேரத்தில் உங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, குனிந்து உங்களை வணங்குவார்கள்.
உங்கள் தலை அவர்களுக்கு முன்பாக உயர்த்தப்படும்.
அப்படி உங்கள் தலை உயரும் போது, நீங்கள் இந்த வாக்குத்தத்தத்தினை நினைவுகூறுவீர்கள்.
இதை அறிக்கையிட்டு தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவீர்கள்.
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment