மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2021


 

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…    

     தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்  சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும்  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. அதன்படி கடந்த 2021-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்கள் அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று நபருக்கு பரிசுகள் வழங்கப்படும்  என்றும்  2021- ம் ஆண்டு ஜனவரி  மூன்றாம் தேதி  அறிவிக்கப்பட்டிருந்தது. (முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய்)

     சுமார் ஆறாயிரத்திற்கும் (6,000) மேற்பட்டோர்  முன்பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டார்கள். எழுதிய நோட் அல்லது பேப்பர் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்  2021 ம் ஆண்டு டிசம்பர் 15 ஆகும்.(15-12-2021).  கடைசி தேதிக்குள் 92 பேர் நேரிலும், 184 பேர் போஸ்ட் மூலமாகவும்,  764 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 1040 பேர் அனுப்பியிருந்தார்கள். ஆட்களை நியமனம் செய்து, ஒவ்வொரு நோட்டையும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டு எழுதியிருக்கின்றார்களா?  என்று இரண்டு சுற்றுக்களாக சரிப்பார்த்து, இந்த இரண்டு சுற்றிலும் வெற்றிப் பெற்றவர்கள் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் இறுதி சுற்றுக்கு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள் என்றும், இதில் அதிகமானோர் இருப்பின் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நபருக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

       முதல் சுற்றில் அனைவரின் நோட்டுகளும்  எங்களால் சரிப்பார்க்கப்பட்டது.  19 பேர் இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல்சுற்றில் வெற்றிப்பெற்ற 19 பேரின் நோட்டுகளும் இரண்டாம் சுற்றில் மிக ஆழமாக சரிபார்க்கப்பட்டது. அதில் 13 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதி சுற்றில் மூன்று பேருக்கும் அதிகமானோர் இருப்பதினால் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நபருக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டது.

  அதன்படி 22-05-2022 அன்று மாலை 7 மணி அளவில்  சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் இறுதி சுற்றுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேரும் கலந்துக்கொள்ளும் விதமாக Online Meeting ஆக நடத்தப்பட்டது. சகோ.A.கிதியோன் இராஜா அவர்கள் ஆரம்பப் பாடல்வேளையை பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். சகோதரர் G. அருள்தங்கராஜ் அவர்கள் ஜெபத்தில் வழிநடத்தினார்கள். குயவனின் பாண்டம்  ஊழியத்தினை செய்யும் சகோதரர் ரூபன் அவர்கள் ஆராதனையை நடத்தி கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்துக்கொண்டார்கள். தென்காசி மாவட்டம்  ஆலங்குளம் பகுதியை மையமாக வைத்து நண்பர்கள் தரிசன ஜெபக்குழு என்ற ஊழியத்தை செய்து வரும் சகோதரர் S.பொன்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்கள். அவர்கள் முன்னிலையில் 13 பேரின் பெயர்களும் எழுதிய சீட்டுப் போடப்பட்டது. அதில் முதல் மூன்று நபர்களை ஜெபத்துடன்  தேர்ந்தெடுக்கப்பட்டது.

 கடைசியில் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு தேவனுடைய நாமத்தினை மகிமைப்படுத்திய அனைவருக்கும், சிறப்பு விருந்தினருக்கும், தேர்வினை எழுதிய அனைவருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியத்தினை நடத்தும் சகோ. T.வினோத் சாமுவேல் அவர்கள் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  பொன்னாடைகள் போற்றப்பட்டு சிறப்பு விருந்தினர்கள் கனப்படுத்தப்பட்டார்கள். தேவனுடைய நாமம் மகிமைப்பட்டது.

பரிசுகள் பெற்றவர்களின் விபரங்கள்:

முதல் பரிசு :  Ms. V.Silviya Celine, Erode (Rv33, Qz3817)

இரண்டாம் பரிசு : Dr.A.Jemi Bai, Salem  (Rv535, Qz220)

மூன்றாம் பரிசு : Ms. Catherine Samuel, Tiruppur (Rv225, Qz5327A)

   

இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

RV NO

Reg.No

 

NAME

DISTRICT

Rv33

Qz3817

 

Ms. V.Silviya Celine

Erode (ER)

Rv162

Qz5573

 

Mrs. Kripa Gladston

Kerala

Rv172

Qz2825A

 

Ms.Suganthi Gunasekaran

Chengalpattu (CGL)

Rv200

Qz2842

 

Mrs. Johnsimary .A

Thoothukudi (TK)

Rv225

Qz5327A

 

Ms. Catherine Samuel

Tiruppur (TP)

Rv231

Qz2067

 

Mrs. Maliga Gnanadiravium

Tirunelveli (TI)

Rv274

Qz1711

 

Mrs. A. Anitha Isaac

Virudhunagar (VR)

Rv466

Qz2683

 

Mrs. Y. Vinslin Suganya

Thoothukudi (TK)

Rv535

Qz220

 

Ms.A.Jemi Bai

Salem (SA)

Rv754

Qz2761

 

Mrs. Minusha Vinoth

Tirupattur (TU)

Rv820

Qz454

 

Mrs. C.Beaula Starlet

Chengalpattu (CGL)

Rv967

Qz3777

 

Ms. Catherine Shanjana .D

Coimbatore (CO)

Rv1036

Qz1856

 

Ms. Gracy .V

Chengalpattu (CGL)

 

 

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று பரிசுத்தொகையினை வழங்க வேண்டும் என்றும். மற்றவர்களுக்கு E-Certificate Whats App மூலமாக அனுப்பப்படும் என்று எங்களால் முடிவு செய்யப்பட்டு, பரிசு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களை வாழ்த்தி  பரிசு தொகை கொடுக்கப்பட்டது.

மூன்றாம் பரிசு :

      மூன்றாம் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரி Mrs. Catherine Samuel அவர்களுக்கு பரிசுத்தொகையான ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் விபரங்கள் மற்றும் அச்சகோதரியின் சாட்சியைப் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். Click Here  

இரண்டாம் பரிசு :

          இரண்டாம் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த சகோதரி Dr.A.Jemibai அவர்களுக்கு பரிசுத்தொகையான ரூபாய் 20,000 வழங்கப்பட்டது. அதன் விபரங்கள் மற்றும் அச்சகோதரியின் சாட்சியைப் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். Click Here 

 

முதல் பரிசு :

     முதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சகோதரி Ms. V.Silviya Celine அவர்களுக்கு பரிசுத்தொகையான ரூபாய் 30,000 வழங்கப்பட்டது. அதன் விபரங்கள் மற்றும் அச்சகோதரியின் சாட்சியைப் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் . Click Here 

 

நாங்கள் எழுதி அனுப்பிய நோட் திரும்ப கிடைக்குமா? 

   நாங்கள் எழுதி அனுப்பிய நோட் திரும்ப கிடைக்குமா? என்று அநேகர் கேட்டிருந்தார்கள். கடந்த 2020 ம் வருடம் நடத்தப்பட்ட தேர்வில் கொரியர் அல்லது போஸ்ட் மூலமாக திரும்ப அனுப்புவதற்கான செலவுத்தொகையினை பெற்றுக்கொண்டு திரும்ப அனுப்பினோம். ஆனால் அது வெற்றிகரமாக இல்லை. அநேகர் தவறான முகவரியை கொடுத்தார்கள். லாக் டவுன் இருந்த காரணத்தினால் சரியாக டெலிவரி செய்யப்படவில்லை. நாங்கள் அனுப்பியும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் பரிசுகள் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் திமிராக பேசினார்கள். இதனால் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வந்தன. எனவே, திரும்ப அனுப்புவது என்பதனை ஒரு சுமையாகவே பார்க்கின்றோம்.

  இருப்பினும் உங்களுக்கு தேவைப்படின் அதற்கான கொரியர் அல்லது போஸ்ட் மூலமாக திரும்ப அனுப்புவதற்கான செலவுத்தொகையினை செலுத்த முடியுமென்றால் அனுப்புகின்றோம் என்று அறிவிக்கப்பட்டது.   சிலர் நாங்கள் நேரில் வந்து வாங்கிக்கொள்கின்றோம் என்று கடந்த முறை கூறினார்கள். ஆனால், இன்றைய தேதி வரை வரவில்லை. எங்களது அலுவலகமோ மிகவும் சின்னது.  10 க்கு 10 அளவுள்ள அறை ஆகும். அதில் அனைத்து நோட்டுகளையும் வைத்து பாதுகாக்க இயலாது. இந்த வருடத்திற்கான நோட்டுகளும் வரத்துவங்கிவிட்டது. எனவே, நேரில் வாங்க வேண்டும் என்றாலும் 03-06-2022 க்குள் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு வரும் எந்த விண்ணப்பமும் எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதனை தாழ்மையாக தெரிவித்திருந்தோம்.

 கொரியர் அல்லது போஸ்ட் மூலமாக திரும்ப அனுப்புவதற்கான செலவுத்தொகையினை செலுத்தியவர்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டது. சிலர் நேரில் வந்தும் வாங்கிக்கொண்டார்கள்.

  ”நாங்கள் அனுப்பிய நோட்டுகளை என்ன செய்வீர்கள்?” என்று அநேகர் கேட்டார்கள். சிலர் ”பைபிள் இல்லாத மக்களுக்கு படிக்கக் கொடுங்கள்” என்பதாய் ஆலோசனைக் கூறினார்கள். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. சொந்த கையினால் எழுதிய வேதத்தில் அநேக தவறுகள் இருக்கலாம். அதை மற்றவர்கள் படிக்க நேரிடும். அது பெரிய ஆபத்தாகும். வேத வசனங்கள் தவறுதலாக புரிந்துக்கொள்ளப்படும். எனவே, நீங்கள் வேண்டாம் என்று சொன்ன நோட்டை ஏழை எளிய மக்களின் உதவிக்காகவும், படிப்பு செலவுக்காகவும் அறக்கட்டளை(Trust) மூலமாக பயன்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டு,  04-06-22 அன்று வரை வாங்காமல் இருக்கும் நோட்டுகள் அனைத்தையும், ஏழை எளிய மக்களின் உதவிக்கும், படிப்பு செலவுக்கும் பயன்படுத்தப்பட முடிவு செய்தோம்.

  அதன்படி கணவனை இழந்து மூன்று சிறு பிள்ளைகளுடன் வாழும் தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த சகோதரி P.கலாராணியின் மூன்று குழந்தைகளின் படிப்பு செலவுக்காக மெகா வேதாகமம் எழுதும் தேர்வு -2021 சார்பாக ரூபாய் 20000 வழங்கப்பட்டது.




      பரிசை ஒரு பொருட்டாக எண்ணாமல் சொந்தக் கையால் பரிசுத்த வேதத்தினை எழுதுங்கள். பரலோக தேவன்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினையும் ஆசீர்வதிப்பாராக. கிருபை உங்களோடிருக்கட்டும் ஆமென்.

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..