பணத்திற்கான ஊழியம்


           

         இந்த கடைசி நாட்களில் பணம் வாங்கிக்கொண்டு ஊழியம் செய்கின்ற  அநேக  ஊழியக்காரர்கள்  எழும்பியுள்ளார்கள்.  அவர்கள் நடத்தும் கூடுகைகளில் கலந்துக்கொள்ள சில ஆயிரங்களைக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள்.  இது தேவனுடைய சித்தமா? அதை சர்வவல்ல தேவன் அனுமதிக்க காரணம் என்ன? இது தேவனுடைய பரிபூரணத்திட்டமா? என்பதனைக் குறித்து இந்த செய்தியில் விரிவாகப்பார்க்கலாம்.  

       கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனுஷகுமாரனாக பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தன்னுடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும் போது,  இலவசமாய் பெற்றீர்கள். இலவசமாய் கொடுங்கள் என்று கட்டளையிட்டார்.  (மத்தேயு 10:8)

         பரலோகத்தேவனிடமிருந்து  இலவசமாய் வரங்களையும், அபிஷேகத்தினையும், அற்புதங்களையும், அதிசயத்தினையும், சுகத்தையும், தீர்க்கதரிசன வெளிப்பாடுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், அதை மற்றவர்களுக்கு இலவசமாய் கொடுக்க வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். ஆதலால், தீர்க்கதரிசிகளையும், ஊழியக்காரர்களையும்  இலவசமாக  ஊழியம் செய்வதற்கு அனுப்புகிறார். அவர்கள் கர்த்தருடைய நாமத்தினால் வந்து, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்கு பிரசங்கிக்கின்றார்கள். பரலோகக் கிரியைகளையும் நடப்பிக்கின்றார்கள்.

        ஆனால்,  ஒரு கூட்ட மக்கள் தேவனுடைய வார்த்தை என்பதை உணர்ந்து, விசுவாசியாமல் அதை அசட்டைப் பண்ணுகின்றார்கள்.  இந்த ஊழியக்காரருக்கு என்ன தெரியும்? என்னுடைய பாஸ்டருக்கு  வல்லமை இல்லை என்று  சொல்லி வீம்பு பேசுகின்றார்கள். அவர்கள் மூலமாகக் கிடைக்கின்ற கர்த்தருடைய வார்த்தைக்கும், ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படிவதில்லை. அவர்கள் மூலமாக நடப்பிக்கின்ற பரலோகத் கிரியைகளுக்கும் தன்னை அர்ப்பணிப்பதில்லை.

     எனவே, அப்படிப்பட்ட விசுவாசிகளுக்கு உணர்வைத் தருவதற்காகவும், அவர்களிடம் காணப்படுகின்ற அசட்டைத்தனங்களை எடுப்பதற்காகவும்,முதலில் பணம் வாங்கிக்கொண்டு பின்பு ஊழியம் செய்கின்ற ஊழியக்காரர்களை பரலோகத் தேவன் எழுப்பி அனுப்புகின்றார். அவர்கள் நடத்தும்  ஆராதனைகளில்  கலந்துக்கொள்வதற்காகவும், அவர்கள் மூலமாக அற்புத சுகத்தினையும், பரலோக தீர்க்கதரிசன வெளிப்பாடுகளையும்  பெற்றுக்கொள்வதற்காகவும், இருநூறு, முந்நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று கட்டணத்தை நிர்ணயிக்கின்றார்கள்.  ”முதலில் பணத்தை கட்டு…  இல்லையேல் வெளியே செல்… உனக்கு  என்னிடத்திலும், என் ஊழியத்திலும் பங்கு இல்லை” என்று கடினமாக கூறுகின்றார்கள்.

        தனக்காக பரலோகத்தேவன் நியமித்த ஊழியக்காரர்களையும், தீர்க்கதரிசிகளையும், சபை பாஸ்டர்களையும், அவர்கள் மூலமாக பரலோகத்தேவன் செய்த கிரியைகளையும் அசட்டை செய்த விசுவாச மக்கள், எவ்வளவு பணமோ  அதை முதலில் கட்டி, பின்பு பரலோகக் கிரியைகளை வாங்குகின்றார்கள்.

         தன் சபையில் பாஸ்டர் ஆராதனை நடத்தும் போது , சிரித்து பேசி, மொபைல் போனைப்பார்த்து அசட்டை செய்தவர்கள் பணத்தை கட்டியதால் , ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல் பயபக்தியுடன் அவர்கள் நடத்தும் ஆராதனையில் கலந்துக்கொண்டு ஆராதிக்கின்றார்கள். அவர்கள் மூலமாக வெளிப்படுகின்ற கர்த்தருடைய வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்கின்றார்கள். அங்கே அசட்டை செய்தால் பணம் வீணாகிவிடுமே. காசு கரியாகிவிடுமல்லவா!

         என்றைக்கும் இலவசமாகக் கொடுக்கின்ற பொருட்களுக்கு மதிப்பில்லை. அதேப்போல் இலவசமாக பரலோகத்தேவன் கிரியைகளை  நடப்பிக்கும் போது, அதை அசட்டை பண்ணுகிறவர்களும் உண்டு. அவர்கள் உணர்வடைவதற்கு பணம் வாங்கிக்கொண்டு ஊழியம் செய்கின்ற ஊழியக்காரர்களை சர்வவல்ல தேவன் அனுமதிக்கின்றார்.

       இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே, தேவன் உங்களுக்காக நியமித்த ஊழியக்காரர்களை அசட்டை பண்ணாமல், அவர்கள் மூலமாக வருகிற வார்த்தைகளை விசுவாசியுங்கள். ஊக்கமாக அதற்கு கீழ்ப்படியுங்கள். நீங்கள் பணம் செலுத்திய பின்புதான் ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை உங்களுக்கு ஏற்படாது. பரலோகத்தேவன் இலவசமாகவே உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஆமென்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 


Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..