எதை நம்புகின்றோம்?
1 இராஜாக்கள் 19 ஆம் அதிகாரத்தில் எலியா பாகாலின் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தால் கொன்றுப் போட்ட செய்தியை, ஆகாப் மூலமாக யேசபேல் கேள்விப்பட்டாள். அப்பொழுது, எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி ’நாளைக்கு இந்த நேரத்தில் அந்த தீர்க்கதரிசிகளை எப்படி கொன்றாயோ, அப்படியே உன் பிராணனுக்கும் செய்வேன். அப்படி செய்யவில்லையென்றால் தேவர்கள் அதற்கு சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்கள்’ என்று சொல்லச் சொன்னாள். அதாவது உன் உயிரை எடுக்கவில்லையென்றால் தேவர்கள் என் உயிரை எடுக்கட்டும் என்று சபதம் இட்டாள். இந்த வார்த்தைகள் எலியாவுக்கு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பல தீர்க்கதரிசிகளை அவள் பட்டயத்தினால் கொலை செய்திருந்தாள். இது எலியாவுக்கு நன்றாக தெரியும். இந்த சூழ்நிலைகளையும், வார்த்தைகளையும் கேட்ட எலியா இதை ஆழமாக நம்ப ஆரம்பித்துவிட்டான். உண்மையாகவே அவள் பட்டயத்தினால் கொன்று போடுவாள் என்று எண்ணி, பயந்து, தன்னைக் காக்க யூதாவை சேர்ந்த பெயர்செபாவுக்கு புறப்பட்டுப் போனான். கிட்டத்தட்ட நாற்பது நாளைக்கு பி...