தீர்க்கதரிசன தியானம்


    

   ஒவ்வொரு நாளும் நாம் தேவ சமூகத்திற்கு வருவதற்கு எண்ணற்றத் தடைகளை பிசாசு கொண்டு வருவான். அதை நாம் முறியடித்துதான் ஜெயம் எடுக்க வேண்டும். ’ஏன் இந்த தடை என்றும், தேவன் என்னோடு இல்லையா என்றும் சோர்ந்து போகக்கூடாது. இன்றைக்கும் கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்க பல தடைகளை தாண்டி தேவசமூகத்திற்குள் வந்திருக்கின்றோம். ஜெபத்துடன் காத்திருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார்.

        2 சாமுவேல் புஸ்தகத்தில் அகித்தோப்பேல் என்ற மனிதனைக் குறித்து பார்க்கலாம். இவன் ஒரு ஆலோசனைக்காரன். தாவீதுக்கு இவனுடைய ஆலோசனைகள் எல்லாம் தேவனுடைய வாக்கைப்போலிருந்தது; அப்படியே அப்சலோமுக்கும்  இருந்தது என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகின்றது.(16:23) முதலில், இவன் தாவீதுக்கு ஒரு சிறந்த ஆலோசனைக்காரனாக இருந்தான். பின்பு அப்சலோமுக்கு  ஆலோசனைக்காரனாக மாறினான். கடைசியில் நான்றுக் கொண்டு செத்தான் என்று பார்க்கின்றோம். இந்த நல்ல ஆலோசனைக்காரன் வாழ்க்கையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட காரணம் என்ன?

      தாவீதும் ஒரு தீர்க்கதரிசிதான். ஆனாலும், அவனுக்கு காத் என்ற ஞானத்திருஷ்டிக்காரனும், நாத்தான்  என்ற தீர்க்கதரிசியும், அநேகக் ஆலோசனைக்காரர்களும் இருந்தார்கள். ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும் என்று நீதிமொழிகளில் 24:6-ல் வாசிக்கலாம்.  நானே ஒரு ராஜா.. நானே ஒரு தீர்க்கதரிசி.. எனக்கு ஏன் ஆலோசனைக்காரர்கள் தேவை? எனக்கு ஏன் தீர்க்கதரிசிகள் தேவை? ஞானத்திருஷ்டிக்காரன் தேவை? என்று தாவீது சொல்லாமல், எல்லாரிடமும் ஆலோசனைகளை செவிக்கொடுத்து கேட்டான். அதனால், தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக  இருந்தான். 

         இன்றைய நாளில் கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே!  நீங்கள் ஒரு ஜெபவீரர்களாகவும், வேத இரகசியங்களை அறிந்தவர்களாகவும், நிறைய வெளிப்பாடுகளை பெற்றவர்களாகவும், தீர்க்கதரிசனம் உரைக்கின்றவர்களாகவும் இருக்கலாம். ஆனாலும், உங்களுக்கு  ஆலோசனைக்காரர்கள் தேவை. ஊழியக்காரர்கள் தேவை. தீர்க்கதரிசிகளும் தேவை. எனக்கு யாரும் வேண்டாம் என்று யாரையும் தள்ளவேண்டாம்.

        ஒரு சிறந்த ஆலோசனைக்காரனாக அகித்தோப்பேல் தாவீதுக்கு இருந்தான். இன்னொரு சுபாவம் தாவீதுக்கு இருந்தது. தனக்கு உதவி செய்ய அநேகர் இருந்தாலும், ஆலோசனைக்காரர்கள் இருந்தாலும், அவர்கள் சொல்லுவதை அப்படியே கேட்கமாட்டான். அதை தேவசமூகத்தில் கொண்டு சென்று விசாரிப்பான். நலமானதை மாத்திரம் ஏற்றுக்கொள்வான். தேவையில்லாததை கேட்கமாட்டான். அதை அப்படியே விட்டு விடுவான். சிலவேளைகளில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனைகள் தேவத்திட்டத்தின்படி இருக்கும். அதை அப்படியே ஏற்றுக் கொள்வான். சில நேரங்களில்  மாம்சத்தில், சுயவிருப்பத்தின் படி அவன் சொல்லும்போது, அதை புறம்பே தள்ளி விடுவான். அதை ஏற்றுக்கொள்ளமாட்டான்.

       இந்த நேரத்தில் தன்னுடைய ஆலோசனைகள் புறம்பே தள்ளுவதை அகித்தோப்பேல் காணும்போது, அவனுக்குள் தாவீது மீது கோபம், எரிச்சல் வரும். அது இருதயத்திற்குள்ளாகவே மறைந்து இருந்தது.  தாவீதுக்கு விரோதமாக அப்சலோம் எழும்பும்போது, தாவீதை விட்டு பிரிந்து சென்றுவிட்டான். இப்பொழுது அப்சலோமோடு சேர்ந்துக்கொண்டான். அவனுக்கும் ஆலோசனைக்காரனாக மாறிவிட்டான்.(2 சாமுவேல் 15:31)

   அப்சலோமுக்கும் இவனுடைய ஆலோசனைகள் எல்லாம் தேவனுடைய வாக்கைப்போலிருந்தது. ஒரு நேரத்தில் அவனுடைய  ஆலோசனைகளை தேவன் அபத்தமாக்கினார். அதை அப்சலோம் கேட்கவில்லை. தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின் மீது ஏறி தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குச் சென்று, வீட்டுக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி நான்றுக்கொண்டு செத்தான்.(2 சாமுவேல் 17:23)

      பெருமை இருதயத்திற்குள்  இருக்குமானால்,  நான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்றும், நான் சொல்வதுதான் சரி என்றும்  பிடிவாதமாக இருப்பார்கள். தான் சொன்னதை கேட்கவில்லை என்றால் எரிச்சல், கோபத்திற்கு இடம் கொடுப்பார்கள். தேவனுடைய ஐக்கியத்தினை விட்டுப் பிரிந்து செல்லுவார்கள். இல்லையென்றால் தவறான முடிவினை எடுப்பார்கள்.

      தேவனுடைய பிள்ளைகளே!   ”நான்” என்ற வீணான பெருமைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வாழ்க்கையில் நீங்கள் சொல்லுவதை உங்கள் கணவன் அல்லது மனைவி கேட்கவில்லையென்றால் கோபம் எரிச்சலுக்கு இடம் கொடுக்காமல் பொறுமையாக அமர்ந்திருங்கள்.  தலையில் இருக்கின்ற ஒரு முடிக்கூட தேவனுடைய சித்தமில்லாமல் கீழே விழாது. எனவே,  ஆலோசனைகளை சொல்லுங்கள்.  குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை சொல்லுங்கள். ஜெபத்துடன் பொறுமையாக காத்திருங்கள். கர்த்தருடைய  சித்தம் ஒன்றே நிறைவேறும் என்று விசுவாசியுங்கள். இதற்கு மாறாக எரிச்சல் கோபத்திற்கு இடம் கொடுக்கும் போது, தவறான முடிவுகளை எடுத்துவிடுவோம்.  வாழ்க்கை  பரிதாபத்துக்குரியதாக மாறிவிடும்.


(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் திரியேக தேவனுக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..