புதுவருட வாக்குத்தத்த தீர்க்கதரிசன செய்தி-2022
புதுவருடம் என்றாலே வீடுகளில் சபைகளில் சில மாற்றங்கள் காணப்படும். ஒவ்வொரு புதுவருடமும் வீட்டில் உள்ள பழைய காலண்டரை எடுத்துப் போட்டு விட்டு, புதிய காலண்டரை மாற்றுவார்கள். எல்லா இடங்களிலும் இந்த மாற்றம் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு புதுவருடத்திலும் பரலோக தேவன் உலக வாழ்க்கையிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் புதிய புதிய காரியங்களைச் செய்வார். அவர் என்ன செய்வார் என்பதனை வாக்குத்தத்தங்களாக தருவார். இதைத்தான் புதுவருட வாக்குத்தத்தம் என்று சொல்லுவார்கள். வருடந்தோறும் அவர் தரும் வாக்குத்தத்தங்கள் என்ன என்று தேவசமூகத்தில் காத்திருந்துப் பெற்றுக் கொள்பவர்கள் உண்டு. பின்பு, அதை உறுதியாகப் பிடித்துக் கொண்டு கருத்தாக ஜெபித்து சுதந்தரிப்பவர்களும் உண்டு.
இந்த 2022-ம் வருடமும் பரலோக தேவன் நம்முடைய வாழ்க்கையில், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகின்றார் என்பதனை வாக்குத்தத்தத்தின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். ’என் தலை என்னை சுற்றிலும் இருக்கின்ற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்’ (சங்கீதம் 27:6 )என்பதுதான் அந்த வாக்குத்தத்தம். இந்த வருடம் நம்முடைய தலைகளை சத்துருக்களுக்கு முன்பாக உயர்த்தப் போகின்றார். கண்டிப்பாக இதை செய்வார், நிச்சயம் உயர்வு உண்டு.
இந்த வாக்குத்தத்தத்தின்படி நமக்கு சத்துருக்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு முன்பாக எப்படி தலை உயர்த்தப்படும்? என்பதைனைக் குறித்து இந்த செய்தியில் கொஞ்சம் விரிவாக ஜெபத்துடன் தியானிக்கலாம். அதைக்கொண்டு கருத்தாக ஜெபித்து வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்கலாம்.
என் தலை என்னை சுற்றிலும் இருக்கின்ற என் சத்துருக்களுக்கு முன்பாக உயர்த்தப்படும் என்பது இந்த வருடத்திற்காக பரலோக தேவன் கொடுத்துள்ள வாக்குத்தத்தம் ஆகும். இதில் சத்துருக்கள் என்பது யார் என்பதனை நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும். விழுந்துப் போன தூதனை சாத்தான் என்றும் சத்துரு என்றும் சொல்வார்கள். ஆனால், இதில் அவனை குறிக்கவில்லை. பிசாசின் சுபாவத்தைக் கொண்ட மனிதர்களைத்தான் குறிக்கின்றது. தேவனுடைய பிள்ளைகளை பாவம் செய்ய வைப்பதும், அவர்களை தேவச்சமூகத்தில் குற்றம் சாட்டுவதும், ஆசீர்வாதங்களை தடுப்பதும், பரலோக பாக்கியத்தினை தடை செய்வதும், நல்ல குடும்ப வாழ்க்கையை பிரிப்பதும், சமதானக்குலைச்சல்களைக் கொண்டு வருவதும் பிசாசின் சுபாவங்கள் ஆகும்.
இப்படிப்பட்ட சுபாவங்களைக் கொண்ட மனிதர்கள் இன்றைக்கு நம்மை சுற்றிலும் இருக்கின்றார்கள். பாவி… பாவி.. என்று நம்மை குற்றம்சாட்டுவார்கள். ஆண்டவரே அவனை அழித்துக் கொன்றுவிடும் என்று நமக்கு விரோதமாக சூனிய ஜெபங்களை செய்வார்கள். பரலோக ஆசீர்வாதங்கள் கிடைக்கும்போது, அதைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அதை நாம் பெற்றுக்கொள்ளக்கூடாதபடிக்கு தடுப்பார்கள்.
இந்த மனித சத்துருக்களுக்கு முன்பாகத்தான் இந்த வருடம் பரலோக தேவன் தலையை உயர்த்தப் போகின்றார். அதைத்தான் வாக்காக கொடுத்துள்ளார்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே… உங்கள் மேலும் உங்கள் ஆசீர்வாதத்தின் மேலும் பொறாமைக் கொண்ட மனித சத்துருக்களுக்கு முன்பாகவும், உங்களை பாவம் செய்ய வைக்கின்ற சத்துருக்களுக்கு முன்பாகவும், ஆசீர்வாதத்தை தடுக்கின்ற சத்துருக்களுக்கு முன்பாகவும், உங்களை பரியாசம் செய்து குற்றம்சாட்டுகின்ற சத்துருக்களுக்கு முன்பாகவும், உங்கள் தலை உயர்த்தப்படும். பரலோக தேவன் நிச்சயமாக இந்த வருடமே செய்வார். ஆமென்
சரி.. எப்படி தலையை உயர்த்துவார்? என்று கொஞ்சம் ஆழமாக தியானிக்கும் போது சில இரகசியங்கள் தெரிய வரும். ஒரு பட்டணத்தில் ஐக்கியமாக இருந்து கர்த்தருடைய ஊழியத்தினை செய்கின்ற சகோதரர்கள் இருந்தார்கள். சின்ன சின்ன ஐக்கியமாகவும் சிறு சிறு கூட்டமாகவும் பரலோக ஊழியத்தை நிறைவேற்றுவது பரலோக தேவனுக்கு பிரியம். அந்த ஐக்கியத்திலிருந்த ஒரு மனிதன், பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பிசாசின் ஆவியால் நிரப்பப்பட்டு ஊழியத்தை விட்டு வெளியே சென்று விட்டான். சென்ற பின்பு பிசாசின் சுபாவத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டான். ஐக்கியத்தின் சகோதரர்களை பிரிப்பதும், அவர்களுக்கு விரோதமாக சபித்து ஜெபிப்பதும், அவர்களுக்கு இடறலாகவும், ஆசீர்வாதத்தினை தடை செய்பவனாகவும் இருந்தான். திருமணம் நடக்கக் கூடாது என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்க கூடாது என்றும், Accident ஆக வேண்டும் என்றும், Police Case ஆக வேண்டும் என்றும் உபவாசம் இருந்து ஜெபித்தான்.
இது தேவனுடைய பார்வையில் மிகவும் அருவருப்பாக இருந்தது. எனவே, தனக்கு உண்மையாக ஊழியம் செய்த அந்த சகோதரர்களை உயர்த்த, பரலோக தேவன் சித்தம் கொண்டார். அந்த பிசாசின் மனிதன் என்னென்ன நடக்கக் கூடாது
என்றும், என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கக்கூடாது என்றும் ஜெபித்தானோ அந்தக் காரியத்தில் பரலோக தேவன் ஆசீர்வதித்து உயர்த்த ஆரம்பித்து விட்டார்.
அவர்களின் தலை உயர்த்தப்பட்டது. அந்த மனிதனின்
தலையோ தாழ்த்தப்பட்டது.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே… எந்த காரியத்தில் மற்ற மனிதர்களால் தூஷிக்கப்பட்டு இருக்கின்றீர்களோ அல்லது எந்த ஆசீர்வாதத்திற்கு மற்றவர்கள் தடையாக இருக்கின்றார்களோ அந்த காரியத்தில் அவர்களுக்கு முன்பாக உங்கள் தலையை உயர்த்துவார். உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் சத்துருக்கள் வெட்கப்படுவார்கள். அவர்கள் தலை தாழ்த்தப்படும்.
எனவே,
பரலோக தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தங்களை விசுவாசியுங்கள்.
உறுதியாக பிடித்து கருத்தாக ஜெபியுங்கள் சீக்கிரமாக உங்கள்
தலை சத்துருக்களுக்கு முன்பாக உயரும் ஆமென்..
தேவ கிருபை உங்களோடு இருக்கட்டும்.
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Glory to God,
ReplyDelete