Posts

Showing posts from 2023

Registration now

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…           கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்… உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக 2019 ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் வேதாகம தேர்வுகள் நடத்தப்படுகின்றது. தேவனுடைய பிள்ளைகள் வேதத்தை நேசித்து,  வேதவசனத்தை வாசித்து, சொந்தக்கரங்களால் எழுதி, தியானிக்க வேண்டும் மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன்  நோக்கமாகும். எந்தவிதமான கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இத்தேர்வுகளில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும் எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் இதில் கலந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும் வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும். நீங்களும் இந்த தேர்வில் கலந்துக்கொள்ளலாம். ஆம் இதை வாசிக்கின்ற உங்களையும் இத்தேர்வில் கலந்துக்கொள்ள நான் அன்புடன் அழைக்கின்றேன். கடந்த வருடங்களில் பதிவு செய...

Mega Bible Writing Exam-2022

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…          தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்   சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, 2019-ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும்   மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தபடியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியைப் பார்த்து ( பரிசுத்த வேதாகமத்தை) , சொந்தக்கையால் எழுதி கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  அப்படி அனுப்பியவர்களின் நோட்டுகள் சரிப்பார்த்து, நன்றாக எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன.   அதன்படி கடந்த 2022-ம் வருடமும் இந்த மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வேதப்பகுதி கொடுக்கப்படும். இந்த வருடம் (2022) பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதம் மற்றும் நீதிமொழிகளில் உள்ள வசனங்களை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி எழுதி அனுப்புகின்றவர்களின் நோட்டுகளை கொடுக்க...

சத்துருக்களுக்கு விரோதமான யுத்தம்

Image
  யாத்திராகமம் 23:27 …உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டபண்ணுவேன்.    தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்புகின்ற சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய தேவன் வாக்கு பண்ணியுள்ளார். சத்துருக்கள் என்பவர்கள் யார்? யாரை முதுகு காட்டப்பண்ணுவார்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதனை குறித்து தொடர்ந்து தியானிக்கலாம்.   சத்துருக்கள் என்றால் அனைவரும் சொல்வது விழுந்து போன தூதனாகிய லூசிபரைத்தான். உண்மையில் அவன்தான் சத்துரு.  அவன் மாத்திரம் அல்ல அவனுடைய சுபாவம் கொண்ட மனிதர்களும் சத்துருக்கள்தான். அதாவது பிசாசின் சுபாவம் கொண்ட மனிதர்கள் நமக்கு சத்துருக்களாகவே இருப்பார்கள். நமக்கு விரோதமாக பேசி, குற்றம் சாட்டி, குறைச்சொல்லி நம்முடைய ஆசீர்வாதத்தினை தடை செய்கின்றவர்களாக இருப்பார்கள்.    ஒரு ஊரில் ஆவிக்குரிய சகோதரன் ஒருவன் தொழில் செய்து கொண்டு வந்தான். நன்றாக ஜெபிக்கின்றவன்.  நல்ல ஆவிக்குரிய அனுபவத்தினை பெற்றவன்.  அந்த சகோதரன் மீது பொறாமை கொண்ட சக ஆவிக்குரிய நண்பன் அவனுக்கு விரோதமாக சூன்ய ஜெபத்தினை அனுதினமும் செ...

உயர்வுக்கு பின் தாழ்த்தப்படுவது ஏன்?

Image
            நம்முடைய வேலையில் வாழ்க்கையில் ஒரு உயர்வு கிடைத்த பின்பு தாழ்த்தப்படுவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். வனாந்திரத்தில் கொஞ்ச ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது, சாமுவேல் தீர்க்கதரிசியால் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பிறகு, சவுலின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். அவன் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்தது. எனவே, சவுலுக்கு ஆயுததாரியாக உயர்த்தப்பட்டான். வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்தவனுக்கு அரன்மனையில் பெரிய வேலை.  இந்த உயர்வு அவனுக்கு ரொம்ப நாட்களாக நீடிக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்பு, மறுபடியும் சவலை விட்டு திரும்பி போய், வனாந்திரத்தில் இருக்கிற அதே கொஞ்ச ஆடுகளை மேய்க்கச் சென்றான் (1 சாமுவேல் 17: 15). ஏன் இந்த தாழ்வு?    இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் கூட அநேக தேவனுடைய பிள்ளைகள் வாக்குத்தத்தினை பெற்று, பரலோக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, வாழ்க்கையில் அதிசயம் நடந்து உயர்த்தப்படுகின்றார்கள். ஆனால், அது ரொம்ப நாட்கள் நீடித்திருப்பதில்லை. சீக்கிரத்தில் தாழ்த்தப்பட்டு பழைய நிலைக்கே வந்து விடுகின்றார்கள். இப...