சத்துருக்களுக்கு விரோதமான யுத்தம்



 யாத்திராகமம் 23:27

…உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டபண்ணுவேன்.

 

 தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்புகின்ற சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய தேவன் வாக்கு பண்ணியுள்ளார். சத்துருக்கள் என்பவர்கள் யார்? யாரை முதுகு காட்டப்பண்ணுவார்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதனை குறித்து தொடர்ந்து தியானிக்கலாம்.

  சத்துருக்கள் என்றால் அனைவரும் சொல்வது விழுந்து போன தூதனாகிய லூசிபரைத்தான். உண்மையில் அவன்தான் சத்துரு.  அவன் மாத்திரம் அல்ல அவனுடைய சுபாவம் கொண்ட மனிதர்களும் சத்துருக்கள்தான். அதாவது பிசாசின் சுபாவம் கொண்ட மனிதர்கள் நமக்கு சத்துருக்களாகவே இருப்பார்கள். நமக்கு விரோதமாக பேசி, குற்றம் சாட்டி, குறைச்சொல்லி நம்முடைய ஆசீர்வாதத்தினை தடை செய்கின்றவர்களாக இருப்பார்கள்.

   ஒரு ஊரில் ஆவிக்குரிய சகோதரன் ஒருவன் தொழில் செய்து கொண்டு வந்தான். நன்றாக ஜெபிக்கின்றவன்.  நல்ல ஆவிக்குரிய அனுபவத்தினை பெற்றவன்.  அந்த சகோதரன் மீது பொறாமை கொண்ட சக ஆவிக்குரிய நண்பன் அவனுக்கு விரோதமாக சூன்ய ஜெபத்தினை அனுதினமும் செய்து வந்தான். சூன்ய ஜெபம் என்பது தேவ திட்டத்திற்கு மாறாக ஜெபிக்கின்ற ஜெபம் ஆகும்.  அவன் தொழில் நஷ்டம் அடைய வேண்டும் என்றும், வருமானம் இருக்கக் கூடாது என்றும், ஆவிக்குரிய அனுபவத்தில் வளரக்கூடாது என்றும் தினமும் எதிராக ஜெபித்தான்.  இந்த ஆவிக்குரிய நண்பனும் அந்த சகோதரனுக்கு சத்துருத்தான்.  ஜெபிக்கின்றவன்தான் ஆனாலும் சகோதரனுக்கு விரோதமாக ஜெபித்ததால் சத்துருதான்.

    இந்த கடைசி நாட்களில் கூட இப்படிப்பட்ட சத்துருக்கள் இருப்பார்கள். வெளியே ஆவிக்குரியவர்கள் போல் சமாதானமாக பேசுவார்கள். ஆனால், நமக்கு விரோதமாக சூன்ய ஜெபங்களை செய்வார்கள். அவர்களின் நினைவுகள் தேவ திட்டத்திற்கு எதிராகவும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் ஆசீர்வாதத்திற்கு  தடையாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சத்துருக்களை தான் முதுகு காட்டப் பண்ணுவேன் என்று பரலோக தேவன் வாக்கு கொடுக்கின்றார். உங்களுக்கு விரோதமாக சூன்யம் செய்கின்ற சூன்ய ஜெபம் செய்கின்ற சத்துருக்களை இந்த மாதத்திலிருந்து முதுகு காட்டப் பண்ணப்போகின்றார். அதாவது உங்களை விட்டு திரும்பி தங்கள் முதுகை காட்டி ஓடப்போகின்றார்கள்.

 

  சரி நம்முடைய வாழ்க்கையில் சத்துருக்கள் முதுகு காட்டப்பட வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? என்பதனை பற்றி தொடர்ச்சியாக தியானிக்கலாம்.

 

சத்துருக்களின் சுபாவம் இருக்கக் கூடாது :

 

     சத்துருக்களை முதுகு காட்டபண்ண வேண்டுமென்றால் நம்மிடத்தில் சத்துருக்களின் சுபாவம் இருக்கக் கூடாது. அதாவது பிசாசின் கனி நம்மிடம் காணப்படக்கூடாது.  நமக்கு விரோதமாக யாருமே சூன்ய ஜெபங்களை ஏறெடுக்க கூடாது என்றால், நாம் மற்றவர்களுக்கு விரோதமாக சூன்ய ஜெபங்களை ஏறெடுக்க கூடாது. நமக்கு விரோதமாக யாராவது பொறாமைபடக்கூடாது என்றால், நாம் மற்றவர்களுக்கு விரோதமாக பொறாமைபடக்கூடாது. இப்படி பிசாசின் சுபாவம் இல்லாமல், பரிசுத்த ஆவியானவரின் சுபாவம் இருக்கும்பொழுது சத்துருக்களை முதுகு காட்டபண்ணுவார்.


 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

இப்பொழுது தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக Prophetic words என்ற Android Mobile App வெளியிடப்பட்டுள்ளது.  இதில் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கலாம். இதை Play Store-ல்  Prophetic words என டைப் செய்து Install செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும். Click Here  

இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..