Mega Bible Writing Exam-2022



 கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…    

   தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்  சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, 2019-ம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும்  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தபடியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியைப் பார்த்து (பரிசுத்த வேதாகமத்தை), சொந்தக்கையால் எழுதி கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  அப்படி அனுப்பியவர்களின் நோட்டுகள் சரிப்பார்த்து, நன்றாக எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன.

 அதன்படி கடந்த 2022-ம் வருடமும் இந்த மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வேதப்பகுதி கொடுக்கப்படும். இந்த வருடம் (2022) பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதம் மற்றும் நீதிமொழிகளில் உள்ள வசனங்களை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படி எழுதி அனுப்புகின்றவர்களின் நோட்டுகளை கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியிலிருந்து  விதிமுறைக்குட்பட்டு சரியாக எழுதியிருக்கின்றார்களா? ஏதேனும் பிழை உள்ளதா?  என்று இரண்டு சுற்றுக்களாக சரிப்பார்க்கப்பட்டு.  இந்த இரண்டு சுற்றிலும் வெற்றிப் பெற்றவர்களுக்கு பம்பர் பரிசு வழங்கப்படும் என்றும், இதில் ஒன்றுக்கும் அதிகமானோர் இருப்பின் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு  ஒரு சவரன் தங்கம் பம்பர் பரிசாக  வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு சரியாக எழுதி, முதலில் அனுப்பும் ஒரு நபருக்கு சிறப்பு பரிசாக 1000 ரூபாயும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு சரியாக எழுதிய  சிறந்த Presentation க்கு ஒரு நபருக்கு சிறப்பு பரிசாக  2000 ரூபாயும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, சரியாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக  3000 ரூபாயும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு,  ஒரே முகவரியில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களில்   15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சரியாக எழுதியிருந்தால் அக்குடும்பத்திற்கு சிறப்பு பரிசாக 4000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் 2022- ம் ஆண்டு ஜனவரி  மூன்றாம் தேதி  அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த அறிவிப்பு Social Media மூலமாக அநேகருக்கு அனுப்பப்பட்டது.

     சுமார் பத்தாயிரத்திற்கும் (10,000) மேற்பட்டோர்  பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டு உற்சாகமாக எழுதினார்கள். கடைசி நாளான  2022 ம் ஆண்டு டிசம்பர் 15 ம் தேதிக்குள் (15-12-2022)  எழுதிய நோட்டை 50 பேர் நேரிலும், 156 பேர் போஸ்ட் மூலமாகவும்,  636 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 842 பேர் அனுப்பியிருந்தார்கள். அதில் 730 பேர் தமிழிலும், 112 பேர் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்கள்.

     எங்களுக்கு வந்த ஒவ்வொரு நோட்டையும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டு சரியாக எழுதியிருக்கின்றார்களா? ஏதேனும் பிழை உள்ளதா?  என்று இரண்டு சுற்றுக்களாக சரிப்பார்க்கப்பட்டது.  முதல் சுற்றில்  13 பேர் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த 13 பேரின் நோட்டுகளும் இரண்டாம் சுற்றில் மிக ஆழமாக சரிப்பார்க்கப்பட்டது. அதில் 12 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதி சுற்றில் ஒன்றுக்கும் அதிகமானோர் இருந்ததினால் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பம்பர் பரிசாக ஒரு சவரன் தங்கம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

 


அதன்படி 16-07-2023  அன்று மதியம் 12 மணி அளவில் பம்பர் பரி்சாக ஒரு சவரன் தங்கத்தை பெறுபவர் யார் என்பதை கண்டறிய    சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் இறுதி சுற்றுக்கான கூட்டம் ஆயத்தப்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில்  ஆலங்குளம் பகுதியை மையமாக வைத்து நண்பர்கள் தரிசன ஜெபக்குழு என்ற ஊழியத்தை செய்து வரும் சகோதரர் S.பொன்ராஜ் அவர்கள் முன்னிலையில் 12 பேரின் பெயர்களும் எழுதிய சீட்டுப் போடப்பட்டது. சகோதரர் அவர்கள் நன்றாக ஊக்கமாக ஜெபித்து  ஒரு நபரை  தேர்ந்தெடுத்தார்கள்.  தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த Mrs. A. ஜான்சி மேரி. (Reg.No : Qz2842  RvC No. : RvC576)   அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.    ஏற்கெனவே அறிவித்திருந்தப்படி ஜெபத்துடன் மற்ற பரிசுகளை பெறுபவர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

மற்ற பரிசுகள் பெறுபவர்களின் விபரங்கள் :

1.முதலில் அனுப்பும் நபர்களுக்கான சிறப்பு பரிசு :

          முதலில் அனுப்பும் ஒரு நபருக்கு சிறப்பு பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2022 வருடம் நடத்தப்பட்ட தேர்வில் தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த Mrs. S.Asha Threse (Qz2082, RvC001) அவர்கள் எழுதிய நோட்டை  முதலில் அனுப்பினார்கள். எனவே அந்த சகோதரி  இந்த பரிசினை  பெற்றுக்கொள்ள  தகுதி உள்ளவர் ஆவார். ஆதலால் இந்த சிறப்பு பரிசுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

2.சிறந்த Presentation க்கு சிறப்பு பரிசு :

     சிறந்த Presentation க்கு சிறப்பு பரிசாக  2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது போல் மிகவும் அழகாக சொந்த கையால் எழுதி அனுப்பிய  Mr. Christopher G (Qz1988 , RvC824) அவர்கள் இந்த பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  

3. அதிக முறை எழுதும் நபருக்கான சிறப்பு பரிசு : 

     அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக  3000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த Mrs. S.Asha Threse (Qz2082) அவர்கள் ஐந்து முறை (RvC001, 131, 334, 809, 810) எழுதி அனுப்பியிருந்தார்கள். வேறு யாரும் இத்தனை முறை எழுதவில்லை. ஆதலால் அவரே இந்த பரிசினை  பெற  தகுதி உள்ளவர் ஆவார். இந்த பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  

4. அதிகம் எழுதும் குடும்ப உறுப்பினர்களுக்கான பரிசு :

       ஒரே முகவரியில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களில்   15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகமானோர்  எழுதி அனுப்பியிருந்தால் அக்குடும்பத்திற்கு சிறப்பு பரிசாக 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி கர்நாடகா மாநிலத்தினை சேர்ந்த Mrs. R. Chitra Justin (Qz5212) அவர்களுடைய குடும்பத்தில் மூன்று பேர் ஆறு முறை(RvC59, 581, 582,679,680,681)) எழுதி அனுப்பியிருந்தார்கள். வேறு குடும்பத்தினர் யாரும் இவ்வளவு முறை எழுதவில்லை.  ஆதலால் அக்குடும்பத்தினரே இந்த பரிசினை  பெற  தகுதி உள்ளவர் ஆவார்கள். அந்த குடும்பத்தினர் இந்த பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  

   பரிசினைப் பெற தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று அவர்களின் வீடுகளில் வைத்து ஜெபித்து பரிசினை வழங்கி வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் சொல்லுவது வழக்கம். கடந்தாண்டுகளிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த 2022 ம் வருடம் நடத்தப்பட்ட தேர்வில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசு வழங்கப்பட்டது. முதலில் 20-07-2023 அன்று பம்பர் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த சகோதரி Mrs.A. ஜான்சி மேரி அவர்களின் வீட்டிற்கு சென்று குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பம்பர் பரிசாக ஒரு சவரன் தங்கமும், சான்றிதழும், கேடயமும், வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் ஜெபத்துடன் வழங்கப்பட்டது. இதை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதர் T. வினோத் சாமுவேல் அவர்கள் வழங்கினார்கள். அக்குடும்பத்தினர் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியுடன் பரிசினைப் பெற்றுக்கொண்டு சாட்சியையும் பதிவு செய்து தந்தார்கள்.


 06-08-2023 அன்று இரண்டு சிறப்பு பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த சகோதரி Mrs. S.Asha Threse அவர்களின் வீட்டிற்கு சென்று, இரண்டு பரிசுகளுக்கான தொகையும், சான்றிதழும், வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் ஜெபத்துடன் வழங்கப்பட்டது. மிகவும் மனமகிழ்ச்சியுடன் பரிசினைப்பெற்றுக்கொண்டு சாட்சியை பதிவு செய்து தந்தார்கள். அன்றைய தினமே சிறந்த Presentation காக வழங்கப்படும்  சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட Mr. G. Christopher  அவர்களின் வீட்டிற்கு சென்று குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பரிசு தொகையான 2000 ரூபாயும், சான்றிதழும், வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் ஜெபத்துடன் வழங்கப்பட்டது. அவர்களும் சந்தோஷத்துடன் பரிசினைப்பெற்றுக்கொண்டு சாட்சியை பதிவு செய்து தந்தார்கள்.

  அதிகம் எழுதும் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு பரிசினைப் பெறும் சகோதரி Mrs. R. Chitra Justin அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதினால் நேரில் சென்று அவர்களுக்கு பரிசுத் தொகையையும், சான்றிதழையும் வழங்க முடியவில்லை. ஆதலால் Google Pay  மூலமாக பரிசுத் தொகை  வழங்கப்பட்டது.  கொரியர் மூலமாக சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களும் இந்த பரிசினை பெற்றுக்கொண்டு சாட்சியினை பதிவு செய்து அனுப்பி வைத்தார்கள்.

 இந்த தேர்வினை வெற்றிக்கரமாக நடத்தி முடிக்க கிருபை பாராட்டின பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையும், கனமும், கீர்த்தியும், புகழ்ச்சியும் உண்டாகட்டும். ஆமென். இந்த தேர்வுக்காக பதிவு செய்து கலந்துக்கொண்ட உங்கள் அனைவரையும் பரலோக தேவன் தாமே ’வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வதிப்பாராக’  (மல்கியா 3:10).

   மெகா வேதாகமம் எழுதும் தேர்வு 2022 - க்கான வெற்றி பெற்ற நபரை தேர்ந்தெடுப்பதில் முன்னிலை வகித்து,  சீட்டு போட்டு குலுக்கல் முறையில்  ஒரு நபரை தேர்ந்தெடுத்த சகோதரர் S.பொன்ராஜ் அவர்களுக்கும்,  வேதாகமம் எழுதும் தேர்வு-2022 யை பரலோகத் திட்டத்தின்படி நடத்தி முடிப்பதற்காக ஜெபித்து, கொடுத்து, உழைத்து பிரயாசப்பட்ட அனைவருக்கும்  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். பரிசுகளைப் பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்.

 (குறிப்பு :  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக ஒவ்வொரு வருடமும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இந்த 2023 ம் வருடத்திலும் நடத்தப்படும் வேதாகமம் எழுதும் தேர்வினை பற்றி  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளுங்கள். இந்த தேர்வில் கலந்துக்கொள்ளுங்கள். பரிசை ஒரு பொருட்டாக எண்ணாமல் சொந்தக் கையால் பரிசுத்த வேதத்தினை எழுதுங்கள். பரலோக தேவன்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினையும் ஆசீர்வதிப்பாராக. CLICK HERE)

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..