தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி
புது மாதத்தை நம்முடைய வாழ்க்கையில் காணச் செய்த
தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும் உண்டாகட்டும். ஒவ்வொரு புது நாளை காண்பதும் கர்த்தருடைய மகா பெரிய
கிருபையே. ஒவ்வொரு முறையும் புதுப்புது வாக்குத்தங்களையும் வழிநடத்துதல்களையும் தந்து
பரலோக தேவன் ஆசீர்வதிக்கின்றார். இந்த புதிய மாதத்திலும் உன் தேவனாகிய கர்த்தர் பூமியில்
உள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் என்ற தீர்க்கதரிசன வாக்குத்தத்த வசனத்தின்
படி ஆசீர்வதிப்பாராக. (உபாகமம் 28:1)
பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் மேன்மை என்பது
மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இதை சுதந்தரித்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த ஆசீர்வாதம் நமக்கு
கிடைக்கும்? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தியில் தியானிக்கலாம்.
இந்த
பூமியில் அநேக மனிதர்கள் வாழ்கின்றார்கள். சிலருக்கு ஒரு சில ஆசீர்வாதங்கள் இருக்கும். வேறு சிலருக்கு மற்ற சில ஆசீர்வாதங்கள் இருக்கும்.
உதாரணமாக, சிலருக்கு கர்ப்பத்தின் கனிக்கான
ஆசீர்வாதம் இருக்கும். ஆனால், சொந்த வீட்டிற்கான
ஆசீர்வாதங்கள் இருக்காது. வாடகை வீட்டில் குடியிருப்பார்கள். இன்னும் சிலருக்கு சொந்த
வீட்டிற்கான ஆசீர்வாதங்கள் இருக்கும். சொந்த வீட்டில்தான் குடியிருப்பார்கள். ஆனால்,
தொழிலுக்கான ஆசீர்வாதங்கள் இருக்காது. இப்படி
பூமியில் உள்ள சகல ஜாதிகளுக்குள்ளும் ஆசீர்வாதங்களில் வித்தியாசங்கள் காணப்படும்.
பரலோக தேவன் இந்த மாத வாக்குத்தத்தின்படி சகல ஜாதிகளிலும்
நம்மை மேன்மையாக வைக்க வேண்டுமென்றால்,, பூமியில் உள்ள எல்லா ஆசீர்வாதங்களையும் , நன்மைகளையும்,
ஒவ்வொருவருக்கும் தேவன் தந்தே ஆக வேண்டும்.
அப்பொழுதுதான் எல்லா ஜாதிகளிலும் மேன்மையாக
வைக்க முடியும். ஏதாவது ஒரு ஆசீர்வாதத்தில்
குறைவு உள்ளது என்றால், மேன்மையாக வைக்க முடியாது. ஆதலால், பரலோக தேவன் எல்லா ஆசீர்வாதங்களும் ஒவ்வொருவருக்கும்
தரப்போகின்றார். எனவே, இந்த மாதத்திலிருந்து ஒவ்வொரு
ஆசீர்வாதங்களையும் ஜெபத்துடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
சரி… இந்த
மாதத்திலிருந்து என்னென்ன ஆசீர்வாதங்களெல்லாம்
அவர் தரப் போகின்றார். அதை எப்படி பெற்றுக்கொள்ள
வேண்டும்? என்பதனைக் குறித்து தொடர்ந்து தியானிக்கலாம்.
குடும்பத்திலும்
ஆசீர்வாதம் வேலையிலும் ஆசீர்வாதம் :
நீ
பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
என்று உபாகமம் 28: 3-ல் வாசிக்கின்றோம். ஜனங்கள்
வாழ்கின்ற இடம் பட்டணம் என்றும், விவசாயம் செய்கின்ற இடத்தை வெளியிலும் என்றும் சொல்வார்கள்.
இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன? குடும்பத்திலும் ஆசீர்வாதம் வேலையிலும் ஆசீர்வாதம்
என்பதாகும். இன்றைய காலங்களில் அநேகருக்கு
இந்த ஆசீர்வாதங்கள் இருப்பதில்லை. ஒன்று குடும்பத்தில் ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்ச்சியாக
இருப்பார்கள். ஆனால், வேலையிலும் தொழிலிலும் பிரச்சனைகள் சமாதானம் குலைச்சல்கள்
காணப்படும். ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்?
இந்த வேலை வேண்டாமே என்று என்ன தோன்றும். இன்னும் சிலரோ வேலைக்கு செல்வதை சமாதானமாக எண்ணுவார்கள்
குடும்ப வாழ்க்கை கசப்புகளை கொண்டு வரும். ஏன் வீட்டிற்கு வருகின்றேன் என்று எண்ணுவார்கள்.
ஆனால், நம் தேவன் இந்த நிலைமைகளை மாற்றி குடும்பத்திலும் வேலையிலும் ஆசீர்வாதங்களை
தருவார் .
ஏனென்றால், இந்த ஆசீர்வாதங்களை தந்தால்
மட்டுமே சகல ஜாதிகளிலும் மேன்மையாக வைக்க முடியும். ஆதலால், இந்த மாதத்தில் இருந்து பட்டணத்திலும் வெளியிலும்
ஒரு ஆசீர்வாதத்தினை நீங்கள் காணப் போகின்றீர்கள். நிச்சயமாகவே உங்கள் குடும்பமும் வேலையும் ஆசீர்வதிக்கப்படும்.
கனிகளுக்கான
ஆசீர்வாதம்:
உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின்
கனியு,ம் உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய மிருக ஜீவன்களின்
பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்று உபாகமம் 28:4 - ல் பார்க்கின்றோம். இந்த வசனம் கனிகளுக்கான ஆசீர்வாதங்கள் குறிப்பதாகும். இதில்
கனி என்பது பிரயாசத்தின் பலன் எனப்படும். ஒரு
மரத்தை நட்டு, அதை பராமரித்து, அதற்கான செலவுகளை செய்து, கடைசியில் கனிகளை பறிப்பது சந்தோஷமான ஒன்றாகும்.
அதில் கனி இல்லையென்றால் அந்த மகிழ்ச்சி கிடைக்காது. கனிகளில் கர்ப்பத்தின் கனி, தொழிலில் கனி, ஆவிக்குரிய கனி என பல வகையான கனிகள் உள்ளன. சிலருக்கு எல்லா கனிகளும் இருக்கும். ஒரு சிலருக்கு சில கனிகள் மாத்திரமே கிடைத்திருக்கும்.
சிலர் கனிகளை பெறுவதற்கு பிரயாசப்படுவார்கள்.
ஆனால், அவர்களுக்கு கிடைத்திருக்காது. இந்த மாதத்தில் இருந்து கனிகளுக்கான ஆசீர்வாதங்களைத்
தர பரலோக தேவன் விரும்புகின்றார். பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் மேன்மையாக வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கனிகளுக்கான
ஆசீர்வாதங்களை தந்தே ஆக வேண்டும். எனவே, கர்பத்தின் கனி, வருமானம் என்ற கனி, ஆவிக்குரிய கனிகளை நீங்கள் சீக்கிரமாக பெற்றுக் கொள்வீர்கள்.
உணவிற்கான
ஆசீர்வாதம் :
உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும்
ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்று உபாகமம் 28:6-ல் வாசிக்கலாம். இது நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கான ஆசீர்வாதத்தினை
குறிக்கும் வேத வசனம் ஆகும். சாப்பிடும் உணவில்
ஆசீர்வாதங்கள் இருந்தால் மட்டுமே எல்லா உணவுகளையும் சாப்பிட முடியும். சரீரத்திலும் எந்த வியாதியும் வராது . இன்றைய நாட்களில்
அனேகருக்கு இந்த ஆசீர்வாதங்கள் கிடைப்பதில்லை. மருத்துவரிடம் சென்றால் அதை சாப்பிட வேண்டாம் இதை
சாப்பிட வேண்டாம் என்று தடை போடுவதை பார்க்கின்றோம்.
ஆனால், இந்த மாதத்திலிருந்து சாப்பிடும் சாப்பிடும் உணவில்
ஒரு பெரிய ஆசீர்வாதத்தினை தரப் போகின்றார். இந்த ஆசீர்வாதம் கடந்து வரும்போது சாப்பிடும்
ஆகாரமே மருந்தாக இருக்கும். சாப்பாடு வியாதியாக
மாறாமல் மருந்தாக வேலை செய்யும். சகல ஜாதிகளிலும்
உங்களை மேன்மையாக வைக்க சாப்பாட்டிற்கான ஆசீர்வாதத்தினை நீங்கள் பெற்றே ஆக வேண்டும்.
இந்த மாதத்திலிருந்து இதைப் பெற்றுக் கொள்வீர்கள்
போக்குவரத்திற்கான
ஆசீர்வாதம்:
நாம்
எல்லாருமே ஏதோ ஒரு காரியங்களுக்காக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணம் செய்கின்றோம்.
பயணத்தின் போது நிறைய விபத்துக்கள் ஏற்படுவதை
பார்க்கலாம். விபத்தினால் கைக்கால்களை இழந்து
கஷ்டப்படுகின்றனர். சிலர் மரித்து விடுகின்றார்கள். போக்குவரத்திற்கான ஆசீர்வாதங்கள் இருக்கும்போது இப்படிப்பட்ட
சடுதியான விபத்துக்கள் ஏற்படாது. சர்வ வல்ல
தேவன் விபத்துகளில் சிக்காமல் பாதுகாப்பார். இதைத்தான் உபாகமம் 28:6-ல் நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்;
நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. அதன்படி,
இந்த மாதத்திலிருந்து உங்கள் பயணம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் விபத்து ஏற்பட்டு விடுமோ
என்று நீங்கள் பயந்து பயந்து நடுங்கலாம். ஆனால், எந்தத் தீங்கும் நடக்காதபடிக்கு பரலோக
தேவன் பாதுகாப்பார். இந்த ஆசீர்வாதத்தை கொடுத்து பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் மேன்மையாக வைப்பார்
சத்துருக்களை
முறியடிக்கும் ஆசீர்வாதங்கள் :
இந்த மாத வாக்குத்தத்தின்படி பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் மேன்மையாக இருக்க
வேண்டும் என்றால் இந்த ஆசீர்வாதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய எதிரிகள் ஒருமனப்பட்டு ஒரு வழியாய் வருவார்கள். எதற்கு வருகின்றார்கள்? நம்மை தாக்கி அழிப்பதற்கு
வருகின்றார்கள். நம்முடைய ஆசீர்வாதங்களை திருடுவதற்கு வருகின்றார்கள். நம்முடைய பெயரைக்
கெடுப்பதற்கு வருகின்றார்கள். ஆனால், உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய்
உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்
என்ற வாக்குத்தத்த வசனத்தின் படி உனக்கு விரோதமாய் எழும்பும் சத்துருக்களை கர்த்தர்
உனக்கு முன்பாக முறியடிக்கும் போது, ஒரு வழியாய்
எதிராக புறப்பட்டு வருகின்றவர்கள் ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடி போவார்கள். இந்த ஆசீர்வாத வசனத்தின் படி பரலோக தேவன் அவர்களை
முறியடிப்பார். சத்துருக்கள் நம்மை தொடாதப்படிக்கு பாதுகாப்பார். இந்த மாதத்திலிருந்து
சத்துருக்கள் முறியடிக்கப்படுவார்கள்.
இதுவரை வெளிவந்த தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க Click Here Click Here
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE CLICK HERE
Glory to God
ReplyDelete