தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி
நீங்கள் நினையாத நாழிகையில் மனுஷகுமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாய் இருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 24:44) இந்த வார்த்தைக்கு கீழ்படிந்து திருடன் வருகின்ற விதமாக இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருக்கின்ற தேவனுடைய பிள்ளைகளுக்கு, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் புதுப்புது வார்த்தைகளை வாக்குத்தத்தங்களாக தந்து, பரலோக தேவன் திடப்படுத்துகின்றார். அவர்களை பலப்படுத்துகின்றார்.
உற்சாகப்படுத்துகின்றார். அதன்படி, இந்த நாட்களிலும் கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் என்ற ஏசாயா தீர்க்கதரிசி புத்தகம் 40 ஆம் அதிகாரம் 31 ஆம் வசனத்தை வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார். இதன்படி, இனி வரும் நாட்களை ஆசீர்வதிப்பார்.
நாம் அனைவருமே கர்த்தருக்காக காத்திருக்கின்றோம். அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றோம். வாக்குத்தத்தங்கள் நிறைவேற காத்திருக்கின்றோம். வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்க காத்திருக்கின்றோம். பரலோகம் கொடுக்கும் சுகத்தினை பெற்றுக்கொள்ள காத்திருக்கின்றோம். இப்படி ஏதோ ஒரு வகையில் காத்திருக்கின்றோம். இப்படி காத்திருக்கின்ற நமது வாழ்க்கையில் என்னென்ன ஆசீர்வாதங்களை தருவார் என்றும் என்னென்ன நன்மைகளை தருவார் என்பதைக் குறித்து இந்த தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தியில் தியானிக்கலாம்
சரீரத்தில்
புதுப்பெலன் கிடைக்கும்:
புதிய ஏற்பாடு புத்தகத்தில் சிமியோன் என்ற
ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான் என்றும் அவன் இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கின்றவனாக
இருந்தான் என்றும் வேதம் கூறுகின்றது.(லூக்கா 2) அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக
காத்திருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவியும் இருந்தார். அவனுக்கு கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவை காணும் முன்னே மரணமடையமாட்டாய் என்ற உறுதிப்பாடு கொடுக்கப்பட்டிருந்தது.
யாரெல்லாம் தேவனுக்காக காத்துக்கொண்டிருக்கின்றார்களோ,
அவர்கள் அதை பெற்றுக்கொள்ளும் வரை மரணம் என்ற ஒன்றே நிச்சயம் வராது.
இந்த உறுதிபாட்டின்படி இயேசு கிறிஸ்துவை காண்பாய் என்ற வாக்குத்தத்தம் நிறைவேறும்
வரை மரணம் என்ற ஒன்றே அவனுக்கு வரவில்லை. அதாவது அவன் காத்திருக்க காத்திருக்க சரீரத்தில்
புதுப்பெலன்தான் கிடைத்தது. பெலன் குறையாமல் கூடிக்கொண்டேதான் இருந்தது. அதேப்போல் காத்திருக்கின்றவர்கள் புதுப்பெலன் அடைவார்கள்.
சரீரத்தில் சோர்வு என்ற ஒன்றே இருக்காது. வியாதி என்றே ஒன்று இருக்காது.
இதை வாசிக்கின்ற நீங்களும் சிமியோன் போல் வாக்குத்தத்தங்கள்
நிறைவேறக் காத்துகொண்டு இருக்கின்றீர்களா?
சோர்ந்து போகாதீர்கள். புதுப்பெலனை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். காத்திருக்கின்ற ஒவ்வொரு நாளும் புதுப்பெலனை பெற்றுக்கொள்கின்றீர்கள்.
பரலோக தேவன் உங்களுக்கு புதுப்பெலன் தந்துக்கொண்டே இருக்கின்றார். உங்களுக்கான வாக்குத்தத்தங்கள்
நிறைவேறும் வரை நீங்கள் மரணத்தை காண்பதில்லை.
இயற்கைக்கு
மேற்பட்ட அற்புதங்கள் நடக்கும் :
கர்த்தருக்கு காத்திருக்கின்ரவர்களோ ஓடினாலும்
இளைப்படையார்கள்; நடந்தாலும் சோர்ந்து போவார்கள் என்று வேதம் கூறுகின்றது. ஓடும் போதும், நடக்கும் போதும் சரீரத்தில் உள்ள ஆற்றல்
குறைந்து சோர்வு வரும். இது இயற்கையான ஒன்று.
இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எல்லாருக்கும் பொதுவானதுதான். ஆனால் கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்களோ இளைப்படைந்து
சோர்ந்து போகமாட்டார்கள். அதாவது இயற்கைக்கு
மேற்பட்ட அற்புதங்கள் நடக்கும். இயற்கையின் விதியை மாற்றுவார்கள். மருத்துவ விதியை
மாற்றுவார்கள்.
ஒருவேளை
இன்றைய நாட்களில் நீங்களும் கர்த்தருக்காக காத்துகொண்டிருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் இயற்கைக்கு மேற்பட்ட அற்புதங்கள்
நடக்கப்போகின்றது. இன்றிலிருந்தே நடக்கப் போகின்றது.
இந்த மாதத்தில் பரலோக தேவன் இயற்கைக்கு மேற்பட்ட
அற்புதங்களை வாழ்க்கையில் செய்யப் போகின்றார்.
முடியாத
கருத்தில் ஒரு முடிவு வரும்:
இளைஞர் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள், வாலிபரும் இடறி விழுவார்கள். கர்த்தருக்கு காத்திருக்கின்றார்களோ புதுப்பெலனை
அடைந்து என்று வேதம் கூறுகின்றது. வாலிப வயதில்
உள்ள அனைவருக்கும் முழுப்பெலன் இருக்கும். முதியோர்களால் செய்யக்கூடாத காரியத்தினை கூட வாலிபர்கள்
எளிதில் செய்வார்கள். அவர்களே இளைப்படைந்து
சோர்ந்து போவார்கள். அவர்களுக்கே இளைப்பு வரும்.
ஆனால், கர்த்தருக்கு காத்திருக்கின்றார்களோ புதுப்பெலனை
அடைவார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் கர்த்தருக்கு காத்திருக்கின்ரவர்களுக்கு புதுப்பெலன்
கிடைக்கும்.
எல்லாத் திறமையும் இருந்தும், எல்லா ஞானமும் இருந்தும் தொழில் செய்கின்றவர்கள் கூட சில நேரங்களில் துவண்டு விட வாய்ப்புகள் அதிகம். தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைகள் வரலாம். ஆனால், கர்த்தருக்கு காத்திருக்கின்ற உங்களுக்கோ எல்லாவற்றையும் செய்து முடிக்க பெலன் கொடுப்பார். முடியாத காரியத்தையும் முடிப்பதற்கான பெலத்தை தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.
இந்த நாட்களிலும் கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள் என்ற வசனத்தின் படி பரலோக தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
இதுவரை வெளிவந்த தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க CLICK HERE
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE
Comments
Post a Comment