Posts

மெய்யாகவே விடுதலையாவீர்கள்

Image
                          யோவான் 8:36-ல் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று பரிசுத்த வேதவசனம் சொல்லுகின்றது. இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளுக்கு இது ஒரு வாக்குத்தத்த வசனம் ஆகும். உண்மையிலே இது ஒரு  தீர்க்கதரிசன வாக்குத்தத்தம். இனி வரும் நாட்களில் உங்கள் வாழ்க்கையில், உங்கள் தொழிலில், வருமானத்தில் உள்ள கட்டுகள் அவிழ்க்கப்படுவதையும் ஒரு விடுதலையை பெற்றுக்கொள்ளுவதையும் உங்களால் உணர முடியும். இது பொய்யான விடுதலை அல்ல ஒரு மெய்யான விடுதலை ஆகும். இதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு தரப்போகின்றார் ஆமென் அல்லேலூயா.    எப்பொழுது இந்த விடுதலை கிடைக்கும்? இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா? எப்படி விடுதலை பெற்றுக் கொள்ளலாம்? என்ற யோசனை உங்களுக்குள்  எழும்பும். பரிசுத்த வேதத்தில் ஒரு மனிதன் தன்னுடைய சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்றான். தேவனே அந்த விடுதலையைக் கொடுத்தார்.  அவன் யார்? எப்படி பெற்றுக்கொண்டான்? என்பதனை தொடர்ச்சியாக பார்க்கலாம்.   ...

நெருங்கின சீஷர்கள்

Image
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த நாட்களில் பல இடங்களுக்கு சென்று ஜெபித்தார். ஒருமுறை தனித்திருந்து ஜெபித்து, பரலோக பிதாவின் ஆலோசனைகளை கேட்கும்படிக்கு உயர்ந்த மலைக்குச் சென்றார். அப்பொழுது பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு ஆகிய மூன்று சீஷர்கள் மாத்திரமே அவரோடு கூட சென்றார்கள். அங்கு அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது. வஸ்திரம் வெளிச்சத்தினைப் போல வெண்மையாயிற்று. (மத்தேயு: 17:1, 2 )    அதேபோல் மரித்த ஜெபஆலயத்தலைவனுடைய குமாரத்தியை உயிரோடு எழுப்பச் செல்லும் போதும், இந்த மூன்று சீஷர்களைத் தவிர வேறு யாரையும் தம்மோடு கூட வருகின்றதற்கு அனுமதி கொடுக்காமல், இவர்களை மாத்திரம் தம்மோடு கூட பிள்ளை இருந்த வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கு தலீத் தாகூமி என்று சொல்லி, அந்த சிறு பெண்ணை உயிரோடு எழுப்பினார். (மாற்கு: 5: 35 -42)   இந்த பூமியில் மனுஷ குமாரானாக ஊழியம் செய்த கடைசி நாட்களிலும் கூட ஜெபிக்கவும், வியாகுலப்படவும், துக்கமடையவும் கெத்செமனே தோட்டத்திற்கு சென்றார். அப்பொழுதும் கூட வேறு யாரையும் தன்னோடு கூட...

உறவுகள் வலிமைப்பட ...

Image
           உலக மக்களிடம் பல்வேறு உறவு முறைகள் உள்ளன. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூட, இந்த பூமியில் உள்ள நமக்கு நல்ல மணவாளனாகவும், நல்ல தகப்பனாகவும், நல்ல சகோதரனாகவும், நல்ல நண்பனாகவும், நல்ல எஜமானனாகவும் உள்ளார். அதேபோல் இந்த பூமியிலும் தகப்பன், தாய், மனைவி, கணவன், அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி என பல்வேறு உறவு முறைகள் உள்ளன.          ஆனால், பரலோகத்தில் எந்த உறவு முறையும் கிடையாது.      உயிர்த்தெழுதலில் கொள்வனையும், கொடுப்பனையும் இல்லை என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை சோதித்த சதுசேயர்களிடம் சொன்னார்.(மத்தேயு 22:23-30) அங்கே தேவதூதரைப் போல் இருப்பார்கள். அதாவது பரலோகத்தில் கணவன்-மனைவி என்ற எந்த உறவு முறையும் கிடையாது. தேவ தூதர்கள் போல்தான் ஒவ்வொருவரும் இருப்பார்கள். அதனால் யாருடைய கணவன் இவன் என்றும் யாருடைய மனைவி இவள் என்றும், யாருடைய பெற்றோர்கள் இவர்கள் என்றும் யாருக்கும் எதுவுமே தெரியாது.        இந்த பூமியில் மாத்திரமே கணவன...

தாம்பத்திய வாழ்க்கையில் பிசாசின் தந்திரம்

Image
      உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு என்று நீதிமொழிகள் 5ஆம் அதிகாரம் 18 ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். இதை ஞானத்தின் வரத்தைப் பெற்ற சாலொமோன் பரிசுத்த ஆவியானவர் துணையுடன் எழுதியுள்ளான். அதேபோல் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலும் புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையை செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்கு செய்யக்கடவள் என்று 1 கொரிந்தியர் 7 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தில் கூறியுள்ளான். அதாவது கணவன் மனைவிக்குள்ளான தாம்பத்ய உறவை கடமை என்று கூறியுள்ளான்.    பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைய கடமைகள் உள்ளன. அவைகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். கடமை என்றால் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம் என்று வாய்ப்புகள் கொடுக்கப்படாது. அவைகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவன் பூரண மனிதனாக இருப்பான். அதேப்போல் கணவன்-மனைவிக்குள்ளான தாம்பத்ய வாழ்க்கை என்பது அத்தியாவசிய கடமையாகும். அதாவது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் சென்றவர்களுக்கு இது அத்தியாவசியமான ஒன்றாகும். ஸ்திரீயை தொடாமல...