தாம்பத்திய வாழ்க்கையில் பிசாசின் தந்திரம்


  

   உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு என்று நீதிமொழிகள் 5ஆம் அதிகாரம் 18 ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். இதை ஞானத்தின் வரத்தைப் பெற்ற சாலொமோன் பரிசுத்த ஆவியானவர் துணையுடன் எழுதியுள்ளான். அதேபோல் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலும் புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையை செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்கு செய்யக்கடவள் என்று 1 கொரிந்தியர் 7 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தில் கூறியுள்ளான். அதாவது கணவன் மனைவிக்குள்ளான தாம்பத்ய உறவை கடமை என்று கூறியுள்ளான்.

  பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைய கடமைகள் உள்ளன. அவைகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். கடமை என்றால் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம் என்று வாய்ப்புகள் கொடுக்கப்படாது. அவைகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவன் பூரண மனிதனாக இருப்பான். அதேப்போல் கணவன்-மனைவிக்குள்ளான தாம்பத்ய வாழ்க்கை என்பது அத்தியாவசிய கடமையாகும். அதாவது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் சென்றவர்களுக்கு இது அத்தியாவசியமான ஒன்றாகும். ஸ்திரீயை தொடாமலும், திருமணம் செய்யாமலும் இருப்பவர்களுக்கு இது தேவையில்லை. இந்த செய்தியும் தேவையில்லை.

 அப்படி கடமையை நிறைவேற்றாமல் இருப்பவர்களின் குடும்பங்களிலும், உறவு முறைகளிலும் நிறைய பிரச்சனைகள் வருகின்றன. குடும்பங்கள் உடைக்கப்படுகின்றன. மனைவி தன் கணவனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் இருக்கும்போது, அவனை(கணவனை) வேசித்தனத்தின் ஆவி தாக்கி வழி விலகி செல்ல தூண்டுகின்றது. கணவன் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் இருக்கும்போது, அவள்(மனைவி) பிறர் முகம் பார்த்து பாவம் செய்கின்றாள். இதனால் குடும்பத்திற்குள் பாவங்கள் பெருகுகின்றன. அது சபைக்குள்ளும், சமுதாயத்திற்குள்ளும் பரவி பெருகுகின்றன.

   மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று ஏற்ற துணையாக ஏவாளை தேவன் உருவாக்கினார். அவர்களைத் திருமண பந்தத்தில் இணைத்து குடும்பமாக மாற்றினார். ஏன் அவர்களை குடும்பமாக மாற்ற வேண்டும்? ஏன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்? என்பதாய் யோசிக்கலாம். பக்தியுள்ள சந்ததியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் குடும்பத்தினையும் குடும்ப உறவையும் ஏற்படுத்தி கொடுத்தார். எனவே, பக்தியுள்ள சந்ததியை பெற குடும்பம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆதலால் குடும்பங்கள் உடைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

   எப்படி குடும்ப உறவுகள் உடைக்கப்படாமல் பாதுகாக்கலாம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? குடும்பத்தின் அஸ்திபாரமாக உள்ள  கணவன்-மனைவி உறவு மிக வலிமையாக இருக்க வேண்டும். கணவன்-மனைவி உறவு மிக வலிமையாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்குள்ளான அந்தரங்க வாழ்க்கையாகிய தாம்பத்திய வாழ்க்கை மிக அத்தியாவசியமான ஒன்றாகும். அது கடமையாகும்.

 பக்தியுள்ள சந்ததியைப் பூமியில் பெற குடும்பம் வேண்டும். குடும்பம் வேண்டுமென்றால் கணவன் - மனைவி உறவு வலிமையாக இருக்க வேண்டும். கணவன்- மனைவிக்குள் எந்த பிரிவினையும் வராமல் இருக்க, அதாவது மனதளவிலும் வராமல் வலிமையாக இருக்க தாம்பத்ய வாழ்க்கை மிக முக்கியமான அவசியமான ஒன்றாகும்.

  இந்த இரகசியங்களை தெரிந்த பிசாசானவன் பக்தியுள்ள சந்ததியை, இந்த உலகிற்குள் வராமல் தடுப்பதற்காக குடும்பத்தினை உடைக்க நினைக்கின்றான். அதற்கு கணவன்-மனைவியை பிரிக்க வேண்டும். எப்படி அவர்களைப் பிரிப்பது? கணவன்- மனைவிக்கு அச்சாரமாக இருக்கின்ற தாம்பத்திய வாழ்க்கையை பல வழிகளில் தடைச்செய்கின்றான். அதை தனக்கு ஒரு கருவியாக பயன்படுத்துகின்றான். அதாவது குடும்பங்களைப் பிரிக்க தாம்பத்திய வாழ்க்கையின் பிரச்சனைகளை தனக்கு ஒரு கருவியாக மாற்றுகின்றான். மறுபடியும் சொல்கின்றேன் நன்றாக கவனியுங்கள் குடும்பங்களைப் பிரிக்க தாம்பத்திய வாழ்க்கையின் பிரச்சனைகளை தனக்கு ஒரு கருவியாக பிசாசு பயன்படுத்துகின்றான்.

  பிசாசின் இராஜ்ஜியத்தில் கணவன்- மனைவிக்குள்ளான அதாவது நீதியின்படி கணவன்- மனைவியாக இணைக்கப்பட்டவர்களின் தாம்பத்திய வாழ்க்கையை தடை செய்வதற்காக ஒரு Team உள்ளது. இதில் நிறைய பிசாசின் தூதர்கள் மற்றும் பிசாசின் ஆவிகள் உள்ளன. இவைகளின் வேலையே கணவன்-மனைவிக்குள்ளான ஆசீர்வதிக்கப்பட்ட தாம்பத்திய வாழ்க்கையை தடை செய்வதாகும். இது ஒன்றிணைந்து குடும்பங்களை பிரிக்க சதி திட்டம் தீட்டுகின்றது.

     இந்த தீர்க்கதரிசன  செய்தியில் இந்த ஆவி எப்படி கிரியைச் செய்கின்றது? அதை எப்படி மேற்கொள்ளலாம்? என்பதனைக்குறித்து தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவிச் செய்வார்.

   தாம்பத்திய வாழ்க்கையை தடைச் செய்கின்ற ஆவி ஒரு மனிதனையோ அல்லது ஒரு மனுஷியையோ ஆளுகை செய்யும் போது, இனப்பெருக்க மண்டலத்தைதான் முதலில் தாக்கும். இனப்பெருக்க மண்டலம் என்பது இனப்பெருக்கத்திற்கு பயன்படும் எல்லா உறுப்புகளும், ஹார்மோன்களும் சேர்ந்ததே ஆகும். இந்த ஆவி முதலில் இதைத் தாக்கி பலவீனப்படுத்தும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கணவன்-மனைவிக்குள்ளாக இருக்கின்ற தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொண்டு வந்து  தடை செய்துவிடும். அதே நேரத்தில் வழித்தப்பி செல்ல வைக்கின்ற வேசித்தனத்தின் ஆவி கணவன்-மனைவிக்குள் கிரியைச் செய்து இச்சைகளைக் கொடுத்து, தவறான படங்களைத் காண்பித்து, உணர்ச்சிகளைத் தூண்டி , தவறானவர்களை வாழ்க்கைக்குள் கொண்டு வந்து வழித்தப்பி செல்ல வழிவகுக்கும். பாலியல் பாவத்தினை செய்யத் தூண்டும். இதற்கு இடம் கொடுப்பவர்கள் வழித்தப்பி சென்று விடுவார்கள்.

     சரி..... தாம்பத்திய வாழ்க்கையை  தடை செய்யும் ஆவி எல்லாரையும் தாக்குமா? யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? என்ற கேள்விகள் வரும். இந்த ஆவி எல்லாரையும் எளிதில் தாக்க முடியாது. அதிலும் இரட்சிக்கப்பட்டவர்களை தாக்குவது மிகக் கடினம். அப்படியென்றால் யாரைத் தாக்கும்? யார் தாக்கப்படுவார்கள்? யாரெல்லாம் இந்த ஆவியோடு உடன்படிக்கை செய்திருக்கின்றார்களோ அவர்களை எளிதாக தாக்கும். உடன்படிக்கை என்பது அந்த ஆவி சொல்லும் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவதாகும். அந்த ஆவிக்கு கீழ்ப்படிந்து அதனோடு உடன்படிக்கை செய்தவர்களை எளிதாக தாக்கும். ஏனென்றால் அதற்கு உரிமை உள்ளது.

 பிசாசின் ஆவியோடு செய்கின்ற உடன்படிக்கை என்றால் என்ன? அதை எப்படி உடைக்கலாம்? என்பதனைக் குறித்து விரிவாக தொடர்ந்து தியானிக்கலாம்.

தாம்பத்ய வாழ்க்கையைத் தடை செய்யும் ஆவி யாரை தாக்கும் அல்லது யாரோடு உடன்படிக்கைச் செய்யும்:

1. திருமணத்திற்கு முன்பு காதல் என்ற மாய வலையில் சிக்கி, காதல் என்ற பெயரில் கணவன்- மனைவியாக வாழ்ந்தவர்களை எளிதாக தாக்கும்.

2. காதலிக்கும் போதே ”நீ என் கணவன் நான்தான் உன் மனைவி” என்று அறிக்கை செய்து விட்டு, வார்த்தையால் ஒன்றிணைந்து வார்த்தைகளால்  மட்டும் பேசி பின்பு மற்றவர்களை திருமணம் செய்து கொள்கின்றவர்களை எளிதாக தாக்கும்.

3. ஓரினைச் சேர்க்கை பாவங்களில் சிக்கி அடிமையாக இருப்பவர்களை எளிதாக தாக்கும்.

4. ஆபாசப் படங்களுக்கு அடிமையாக இருப்பவர்களை எளிதாக தாக்கும்.

5. சுயப்புணர்ச்சி போன்ற பாவங்களுக்கு அடிமையாக இருப்பவர்களை எளிதாக தாக்கும்.

6. வேசித்தன, விபச்சார பாவங்களில் சிக்கியிருப்பவர்களை இந்த ஆவி எளிதாக தாக்கும்.

7. இரவில் தூங்கும் போது அசுத்த கனவுகளால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக தாக்கும்.

 மேற்கண்ட பாவங்களில் சிக்கியுள்ளவர்களை இந்த ஆவி எளிமையாக தாக்கி, அவர்களுடன் உடன்படிக்கை செய்து  கட்டுகளாக மாறிவிடும். பின்பு கீழ்கண்ட அறிகுறிகள் காணப்படும்.

இந்த ஆவி தாக்கியதற்கான அறிகுறிகள்:

1.கணவன்-மனைவி தாம்பத்ய வாழ்க்கையில் கொஞ்சம் கூட விருப்பம் ஆர்வம் இருக்காது. ஆனால், தேவசித்தத்திற்கு அப்பாற்பட்ட விபச்சாரம், வேசித்தனம் போன்ற பாவங்களில் ஆர்வம் இருக்கும்.

2. தாம்பத்திய வாழ்க்கையில் யாருடனும் ஆர்வம் இல்லாமல் இருப்பது

3. ஓரினைச் சேர்க்கை பாவத்தில் மட்டும் ஆர்வம் இருப்பது.

4. சுயப்புணர்ச்சி பாவம் மட்டும் செய்வது.

5.ஆபாசப்படங்களை அதிகமாக பார்க்க வேண்டும் என்று தூண்டப்படுவது.

6. தேவசித்தத்திற்கு அப்பாற்பட்ட கள்ளக் காதல் உறவுகளில் சிக்கிக் கொள்வது.

7.ஒன்றிற்கு மேற்ப்பட்ட பல பேர்களுடன் தொடர்பில் இருப்பது

   இன்னும் இதைப்போல் நிறைய அறிகுறிகள் உள்ளன. அவைகள் தாம்பத்திய வாழ்க்கையைத் தடை செய்கின்ற ஆவியால் தாக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் காணப்படும்.

       எப்படி இந்தக்கட்டுகளில் இருந்து விடுதலைப் பெறலாம்? என்பதாய் யோசிக்கலாம். முதலில் இந்த ஆவியோடு பண்ணின எல்லாவிதமான உடன்படிக்கையையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் உடைத்தெறிய வேண்டும். திரும்ப திரும்ப உடைக்க வேண்டும். இப்படி செய்வதினால் முதலில் அந்த ஆவியோடு இருக்கும் உடன்படிக்கை உடைக்கப்படும். பின்பு, தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தாம்பத்திய வாழ்க்கையில் உள்ள தடைகள் மாற்றப்பட ஊக்கமாக ஜெபியுங்கள். முடிந்தால் கணவன் மனைவியும் சேர்ந்தே ஜெபியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை கிடைக்கும்.

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)


இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..