புத்திமானாய் நடப்பதினால் வரும் ஆசீர்வாதங்கள்
மனுஷனுக்குள்ளே இருந்து மனுஷனை தீட்டுப்படுத்தும் காரியங்கள் பதிமூன்று(13) உள்ளன. இதைக் குறித்து மாற்கு ஏழாம் அதிகாரத்தில் 20 முதல் 23 வசனங்கள் வரை வாசிக்கின்றோம். இதில் பதிமூன்றாவது காரியமாக மதிக்கேடு என்ற ஒன்று உள்ளது. இதுவும் மனுஷனை தீட்டுப்படுத்தும். எப்படி விபச்சாரம், வேசித்தனம், காமவிகாரம் மனிதனை தீட்டுப்படுத்தி, ஆசீர்வாதங்களை இழக்கச் செய்யுமோ. அதேபோல் மதிக்கேடும் தீட்டுப்படுத்தி, பரலோக ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும், அற்புதங்களையும் இழக்கச் செய்யும். அறிவுக்கெட்டவன், முட்டாள் என்று கூப்பிடுவதை கேட்டிருப்போம். இவைகள் மதிக்கேடு உள்ளவர்களை அழைக்கும் மற்றோர் பெயராகும். அதன்படி மதிகேடு என்பது அறிவு கெட்டுப் போகுதல் ஆகும். ஒரு மனிதன் அறிவு இல்லாதவனாக வாழ்வது மதிக்கேடு ஆகும். அதே நேரத்தில் ஒரு மனிதன் அறிவு உள்ளவனாகவும், புத்தி உள்ளவனாகவும் இருந்தால் அனேக ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்றுக் கொள்வான். அறிவில்லாதவனாக இருக்கும் போது, ஆசீர்...