Posts

சிறியவனிலும் சிறியவன்

Image
      உலகத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசங்கள் இருக்கின்றன.   அதேப்போல் பரலோக இராஜ்ஜியத்திலும் சிறியவன் பெரியவன் என்று அளவீடும் உள்ளது.   இதைக் குறித்து மத்தேயு 5-ம் அதிகாரம் 19 ஆம் வசனத்தில் தேவனுடைய கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதான ஒன்றையாகிலும் மீறி மனுஷருக்கு போதிப்பவன் சிறியவன் என்றும், எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு போதிப்பவன் பெரியவன் என்றும் கூறுகின்றது. அதேபோல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யோவான்ஸ்நானகனை குறித்து சொல்லும் போது, பரலோக இராஜ்ஜியத்தில் சிறியவனாக இருக்கின்றவன் எவனோ, அவன் அங்கே   அவனிலும் பெரியவனாக இருக்கின்றான் என்று சொல்கின்றார்.   இதை மத்தேயு 11-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில் வாசிக்கலாம்.   இரண்டு வசனங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது பரலோக இராஜ்யத்தில் பெரியவன் மற்றும் சிறியவன் என்ற அளவீடு உள்ளது என்பது நமக்கு புலப்படும்.    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த அளவீட்டின்படியேதான் யோவான் ஸ்நானகனைக் குறித்து பரலோக இராஜ்யத்தில் சிறியவனாக   இருக்கின்றவன் அவனிலும் பெரியவனாக இருக்க...

போஜனத்திற்கான ஆசீர்வாதம்

Image
                        யாத்திராகமம் 23:25 …அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.            நாம் சாப்பிடும் அப்பமும்,   பருகும்   தண்ணீரும் ஆசீர்வதிக்கப்படுவது இந்த பூமியில் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.   இதனை போஜனத்திற்கான ஆசீர்வாதம் என்றும்,   சாப்பிடுவதற்கான ஆசீர்வாதம் என்றும் சொல்லலாம்.   இரண்டு வகையான உணவு உள்ளது.   ஒன்று ஆவிக்குரிய உணவு மற்றொன்று மாம்சத்திற்கான உணவு.   இரண்டையும் பரலோக தேவனால் ஆசீர்வதிக்க முடியும்.   இரண்டிலும் சர்வ வல்ல தேவனுடைய ஆசீர்வாதங்கள் இருக்கும் போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து தியானிக்கலாம்.   மாம்ச உணவு :              மாம்ச உணவு சரீர பலத்திற்காக தினமும் எடுக்கும் ஆகாரம் ஆகும்.   இது ஆசீர்வதிக்கப்படும் போது சரீரத்திற்கு நல்ல பெலன் கிடைக்கும். முன்நாட்களில் சாப்பாடு கிடைக்காமல் பஞ்சத்தினால் அநேக மக்கள் செத்தார்கள்....

தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி

Image
      புது மாதத்தை நம்முடைய வாழ்க்கையில் காணச் செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரமும்,   கனமும்,   மகிமையும் உண்டாகட்டும்.   ஒவ்வொரு புது நாளை காண்பதும் கர்த்தருடைய மகா பெரிய கிருபையே. ஒவ்வொரு முறையும் புதுப்புது வாக்குத்தங்களையும் வழிநடத்துதல்களையும் தந்து பரலோக தேவன் ஆசீர்வதிக்கின்றார். இந்த புதிய மாதத்திலும் உன் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார் என்ற தீர்க்கதரிசன வாக்குத்தத்த வசனத்தின் படி ஆசீர்வதிப்பாராக. (உபாகமம் 28:1)    பூமியில் உள்ள சகல ஜாதிகளிலும் மேன்மை என்பது மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இதை சுதந்தரித்து கொள்ள   என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும்? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தியில் தியானிக்கலாம்.      இந்த பூமியில் அநேக மனிதர்கள் வாழ்கின்றார்கள்.   சிலருக்கு ஒரு சில ஆசீர்வாதங்கள் இருக்கும்.   வேறு சிலருக்கு மற்ற சில ஆசீர்வாதங்கள் இருக்கும்.   உதாரணமாக, சிலருக்கு கர்ப்பத்தின் கனிக்கான ஆசீர்...

பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

Image
                            குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று கர்த்தருடைய வார்த்தை சொல்கின்றது (யோவான் 8:36). இன்றைய நாட்களில் பல்வேறு பாவங்களுக்கும், சாபங்களுக்கும் அநேக தேவனுடைய பிள்ளைகள் அடிமைகளாகவே உள்ளார்கள். இந்த உலகத்தில் வேசித்தனம், விபச்சாரம், காமவிகாரம், மதுபானம், புகைப்பிடித்தல்,   ஆபாச படங்களை பார்ப்பது, சினிமா பார்ப்பது, இச்சையான பார்வை, சுயபுணர்ச்சி, கள்ளக்காதல், ஆபாச சாட்டிங், போஜனபிரியராக இருப்பது, வாகனங்களை வேகமாக ஓட்டுதல் போன்ற பல அடிமைத்தனத்தின் பாவங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பாவங்களில் எளிதாக சிக்கிக் கொள்கின்றார்கள். ஆனால், அவற்றினை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றார்கள். எவ்வளவு போராடியும் எவ்வளவு ஜெபித்தும் அவர்களால் கொஞ்சம் கூட வெளியே வர முடியாமல் இருக்கின்றார்கள். பாவங்களில் சிக்கி அடிமைத்தனத்தின் கட்டுகளில் இருப்பவர்கள் எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதை குறித்து இந்தச் செய்தியில் வ...

Registration now

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…           கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்… உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக 2019 ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் வேதாகம தேர்வுகள் நடத்தப்படுகின்றது. தேவனுடைய பிள்ளைகள் வேதத்தை நேசித்து,  வேதவசனத்தை வாசித்து, சொந்தக்கரங்களால் எழுதி, தியானிக்க வேண்டும் மற்றும் அதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இதன்  நோக்கமாகும். எந்தவிதமான கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இத்தேர்வுகளில் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி யார் வேண்டுமென்றாலும் எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் இதில் கலந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படும் வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதியவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும். நீங்களும் இந்த தேர்வில் கலந்துக்கொள்ளலாம். ஆம் இதை வாசிக்கின்ற உங்களையும் இத்தேர்வில் கலந்துக்கொள்ள நான் அன்புடன் அழைக்கின்றேன். கடந்த வருடங்களில் பதிவு செய...