நல்ல ஊழியன்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும் . நல்ல ஊழியன் என்ற தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை யோவான் 12:26-ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய பணிவிடை செய்ய பரலோக அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் உத்தமமும், உண்மையுமுள்ளவர்கள் என்ற சாட்சியினை பரலோக எஜமானால் பெறுவது மிக அவசியம். இந்த சாட்சியை பெறவேண்டுமென்றால் சில தகுதிகள் தேவை. அவற்றுள் ஒரு முக்கியமான தகுதியை குறித்து தாவீதின் படைத்தளபதி யோவாபின் வாழ்க்கையில் இருந்து தியானிக்கலாம். ஜெபத்து...