ஒருக்காலும் ஒழியாது.
![40,000 Free Love Pictures to Download [HD] - Pixabay](https://cdn.pixabay.com/photo/2017/04/25/06/15/father-and-son-2258681_960_720.jpg)
1 கொரிந்தியர் 13:8 ல் அன்பு ஒருக்காலும் ஓழியாது என்று பரிசுத்த
வேதம் கூறுகின்றது. இந்த உலகம் கண்டிப்பாக அழிந்துப்போகும். இந்த உலகத்தில் உள்ள சபைக்கூட்டங்கள்
ஒருநாள் கண்டிப்பாக இல்லாமல் போகும், தீர்க்கதரிசனங்களும் ஒழிந்துப்போகும், அந்நிய
பாஷைகள் ஓய்ந்துப் போம், அறிவும் ஒழிந்துப் போகும் ஆனால் அன்பு எக்காலமும் நிலைத்திருக்கும்.
அநேகர் அன்பின் தெய்வமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேடுகின்றார்கள். சிலர் பணத்திற்காகவும், கனத்திற்காகவும்,
சுகத்திற்காகவும் தேடுகின்றார்கள். இன்னும் சிலர் வரங்களுக்காகவும், வல்லமைகளுக்காகவும்,
கட்டுகளை உடைப்பதற்காகவும், பிசாசுகளை துரத்துவதற்காகவும் தேடுகின்றார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நிச்சயம் கிடையாது.
ஒருவேளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலித்து பின்வாங்கிப் போகலாம். எல்லாம் கிடைத்தப்பின்பு
அவரை வேண்டாம் என்று விட்டுவிடலாம். ஆனால், அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஆசையாக
யாரெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேடுகின்றார்களோ, அவர்களெல்லாம் எது கிடைத்தாலும்
கிடைக்காவிட்டாலும் அவரில் நிலைத்திருந்து கனிக் கொடுப்பார்கள். யுக யுகமாக நிலைத்திருப்பார்கள்.
எனவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பிற்காக
அவரைத் தேடுவோம். தேவைகளுக்காக அல்ல… அவரின் அன்பை பெற்றுக் கொள்ள ஜெபிப்போம். ஒருக்காலும்
ஒழிந்துப் போகாமல் எக்காலமும் நிலைத்திருந்து கனிக் கொடுப்போம் ஆமென்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்கள்
You tube –ல் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை
கிளிக் செய்யவும் Click Here
Amen
ReplyDelete