நெருங்கின உறவினர்கள் மற்றும் இரத்த சம்பந்தமானவர்கள் அசுத்தமாகவும், ஆபாசமாகவும், அருவருப்பாகவும் இருப்பது போல் கனவுகளில் வருவதுண்டு. இப்படிப்பட்ட கனவுகள் வருவது ஏன்? என்பதனைக் குறித்து இந்த செய்தியில் தியானிக்கலாம். செய்தியை வாசிப்பதற்கு முன்பு லேவியராகமம் 18-ம் அதிகாரத்தை முதலில் நன்றாக வாசித்து விட்டு, பின்பு இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசியுங்கள். உங்களுக்கு மிக எளிமையாக புரியும். ஆசீர்வாதமாகவும் இருக்கும். தாய், தகப்பன், குமாரன், குமாரத்தி, அண்ணண், தம்பி, அக்கா, தங்கை, மருமகள், பேரன், பேத்தி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை போன்ற நெருங்கின இனமானவர்களை சேரும்படி அவர்களை நிர்வாணமாக்கக்கூடாது என்று பரிசுத்த வேதம் தெளிவாகக் கூறுகின்றது. இது தேவன் அருவருக்கின்ற பாவங்களில் ஒன்றாகும். இதை செய்கின்றவர்கள் தங்களை தீட்டுபடுத்துவது மட்டுமல்லாமல், தாங்கள் வசிக்கும் தெரு, கிராமங்கள், பட்டணங்கள் மற்றும் தேசத்தையும்...
Comments
Post a Comment