மாற்றத்தால் வரும் இடறல்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். மாற்றத்தால் வரும் இடறல் என்ற தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து ஆவலாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை 100 மடங்கு ஆசீர்வதிப்பாராக.
பூமியில்
கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம் என்ற பருவங்கள் உள்ளன. இவைகள் மாறி மாறி
வரும். இப்படி காலங்கள் மாறும்போது மனிதர்களுடைய வாழ்க்கை முறையில் சில
பிரச்சனைகளும், மனிதர்களுடைய சரீரத்தில் சில வியாதிகளும் ஏற்படுவது வழக்கம்.
அதேபோல், பரிசுத்த வேதத்திலும் நியாயபிரமாணத்தின் காலம், கிருபையின் காலம்,
உபத்திரவத்தின் காலம் என பலவகையான காலங்கள் உள்ளன. இந்த காலங்கள் மாறும்போது
போராட்டங்கள், பிரச்சனைகள், இடறல்கள் ஏற்படும். இந்த மாற்றத்தினை அறியாமல்
இருந்தால் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்கிபோக நேரிடும்.
பரிசுத்த
வேதத்திலும் ஒரு தீர்க்கதரிசி காலங்கள் மாறும்போது ஏற்படும் மாற்றத்தினை அறியாமல்
இடறிப்போனான். அவன் யார்? என்பதையும், அவனுடைய வாழ்க்கையில் இருந்து காலங்கள்
மாறும்போது ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதனையும் குறித்தும், அவைகளை எப்படி
மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிப்போம்.
ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் பேசுவதை உணருவீர்கள். இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு
மகிமையை செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஜெபியுங்கள்.
தீர்க்கதரிசியாகவும், எலியாவாகவும், வானாந்திரத்தில் வழியை
ஆயத்தப்படுத்துகின்றவனாக பூமிக்கு வந்தவன் யோவான்ஸ்நானகன். ஸ்திரீகளிடத்தில்
பிறந்தவர்களில் பெரியவன் என்று சாட்சி பெற்றவன்.(மத்தேயு 11) நியாயபிரமாண
காலத்திற்கும், கிருபையின் காலத்திற்கும், இடையே உள்ள காலத்தில் பூமியில் ஊழியம் செய்தான். பரலோக
பிதாவாகிய தேவனிடமிருந்து பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை காண்பாயோ
அவரே மேசியா என்ற வெளிப்பாட்டை பெற்றிருந்தான்.(யோவான் 1:33) கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவே மேசியா என்பதில் மிக உறுதியாக இருந்தான். இவரே மேசியா என்று இஸ்ரவேல்
மக்களுக்கு வெளிப்படுத்தினான்.
இவ்வளவு
உறுதியாக இருந்த யோவான் தன்னுடைய கடைசி நாட்களில் காவலிலிருக்கும்போது,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் மேசியாவா? அல்லது இன்னும் ஒருவர் வருவாரா? என்ற
சந்தேகம் அவனுக்குள் வந்துவிட்டது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து
இடறலடைந்துவிட்டான். (மத்தேயு 11) ஏன்
அவன் மாறினான்? எதனால் அவனுக்குள் இந்த மாற்றம் என்று பரிசுத்த வேதத்தினை
ஆராய்ந்து பார்த்தால் பல இரகசியங்கள் தெரியவரும். அவற்றுள் ஒன்று காலங்கள்
மாறும்போது ஏற்படும் மாற்றத்தினை அறியாமல் இருந்தது என்பதனை விளங்கி கொள்ள
முடியும்.
யோவான்ஸ்நானகன் நியாயபிரமாண காலத்தில் இருந்து கிருபையின் காலத்திற்கு
காத்திருந்தான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையாக வந்தார். நியாயபிரமாண
காலத்தில் பரிசேயர்கள், வேதபாரகர்கள் அநேகந்தரம் உபவாசித்தார்கள். அதேபோல்,
யோவானுடைய சீஷர்களும் உபவாசித்தார்கள். ஆனால், கிருபையாக வந்த கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் சீஷர்கள் உபவாசியாமல் இருந்தார்கள்.(மத்தேயு9:14,15) இதை
பார்த்தவுடன் யோவானுக்கும் அவனுடைய சீஷர்களுக்கும் ஒரு சந்தேகம் முளைக்க
ஆரம்பித்துவிட்டது. இவர்தான் மேசியாவா என்ற சந்தேகம் வளர ஆரம்பித்துவிட்டது.
கடைசியில் இவர் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அவனுடைய சீஷர்களை
கர்த்தராகிய இயேசுவிடம் அனுப்பி வருகிறவர் நீர்தானா? இன்னும் ஒருவர் வர
காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கவும் ஆரம்பித்துவிட்டான். விசுவாசத்தில்
குறைவுப்பட்டுவிட்டான். இப்படித்தான் யோவான் காலங்கள் மாறும்போது ஏற்படும்
மாற்றத்தினை அறியாமல் இடறிப்போனான்.
பொதுவாக காலங்கள்
மாறும்போது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில், ஆராதனைகளில், ஜெபங்களில் சில
மாற்றங்கள் ஏற்படும். உபதேசத்திலும், பிரசங்கத்திலும் கூட மாற்றங்களை பார்க்கலாம்.
இதை நாம் அறிந்து, தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் யோவானைப்போல்
இடறலடைந்துவிடுவோம்.
எனவே, கிருபையின்
கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் உபத்திரவ காலங்கள் வரும்போது ஆவியில்
ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்வது மிக அவசியம்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில்
அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை
கிளிக் செய்யுங்கள்.Click Here
Arumaiyana pathivu
ReplyDelete