செல்ஃபியால் வரும் ஆபத்து
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி,பெருமை எல்லாவற்றையும் பரலோக
பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய
தேவனுக்கும் உண்டாகட்டும். செல்ஃபியால்
வரும் ஆபத்து என்ற தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து ஆவலாய்
வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன
வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இன்றைய காலத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற
வித்தியாசம் இல்லாமல் அனைவர் கைகளிலும் Smart Phone உள்ளது. அதில் உள்ள சினிமா, சீரியல்,
ஆபாசப்படம்,
செல்ஃபி(etc) இவைகளெல்லாம் தேவனுடைய பிள்ளைகளை அழிக்க பிசாசு
பயன்படுத்தும் ஆயுதமாகும்.
Smart Phone -ஐ பயன்படுத்தி ”செல்ஃபி”
எடுக்காதவர்களே கிடையாது. இதிலும்
பிசாசின் தந்திரம் மறைந்து உள்ளது. இதைக்
குறித்து இந்த இத்தீர்க்கதரிசன செய்திகளில் தியானிப்போம்.
தேவனுடைய பிள்ளைகளை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களை
தேவனுடைய பலத்த கரத்திலிருந்து
பிரிக்க வேண்டும். அப்பொழுதுதான்
பிசாசால் தேவனுடைய பிள்ளைகளை தொடமுடியும்.
இல்லை என்றால் தலையில் உள்ள ஒரு மயிரைக்கூட தொடமுடியாது.(மத்தேயு 10:30). இது வேதச்சத்தியம்.
இப்படித்தான் ஆபிரகாம் சாராள் தம்பதியினரை தேவன்
வழிநடத்தி வந்தார்.
தேவன் அவர்களுடனே இருந்தார். சாராள் பார்வைக்கு அழகுள்ள ஸ்தீரி.
அவளின் அழகு பார்வோனின்
அரண்மனைவரைக்கும் எட்டியது. சாராளின் அழகில் மயங்கின பார்வோன்
(எகிப்தின் ராஜா) அவளை அழைத்து வரச்சொன்னான். அவள் பார்வோன் அரண்மனைக்கு கொண்டு
போகப்பட்டாள்.
தேவன் அவர்களோடு இருந்தபடியால்
இந்த காரியத்தினிமித்தம் தேவன் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார். பார்வோனைமாத்திரம் அல்ல அவன்
வீட்டாரையும் வாதித்தார்.
(ஆதியாகமம் 12:11-20)
தேவன் ஒரு மனிதன் மற்றும் மனுஷியோடு இருக்கும்போது யாரும் அவர்களை தொடமுடியாது . குறிப்பாக வாலிப பெண்பிள்ளைகளை எவனும்
கண்ணேரெடுத்து கூட பார்க்கமுடியாது (சைட்டடிக்க முடியாது) மீறினால் தேவாதி தேவனே அவனுடனே யுத்தம் செய்வார். அவனோடு மாத்திரம் அல்ல அவன் குடும்பத்தோடும்
யுத்தம் செய்வார்.
ஆனால், சர்வவல்ல
தேவன் அந்த வாலிப பெண்ணைவிட்டு பிரிந்து விட்டால் கண்டவனும்
கண்வைத்து அபகரிக்க நினைப்பான். பலாத்காரம்
பண்ணுவான் விடாமல் துரத்துவான்.
அது பெண்பிள்ளைகளுக்கு
பெரும்பாரமாக இருக்கும்.
சிலநேரங்களில் வாழ்க்கையைக்கூட
இழக்க நேரிடும்
சரி யாரைவிட்டு தேவன் பிரிந்து செல்வார்? அல்லது
யார் தேவனை விட்டு
பிரிந்து செல்வார்கள்?
என்று பார்த்தோமானால் சத்திய வேதம் சொல்லுகிறது கர்த்தர் மேட்டிமையானவனை தூரத்திலிருந்து
அறிகின்றார் (சங்கீதம் 138-3).ஒரு மனிதனுக்கு தாழ்மை இருந்தால் நம் தேவன்
பக்கத்திலிருந்து பாதுகாக்கின்றார்.
ஆனால், பெருமை இருக்குமானால்
தூரத்திலிருந்து பார்க்கின்றார்.
பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து
நிற்கின்றார்.
தேவன் ஒருவருடன்
இருப்பதை பிரிக்க
வேண்டும் என்றால் பெருமையை அம்மனிதனுக்குள் கொடுத்தாலே போதும். பெருமையான சிந்தனைகளை களைகளாக விதைத்தாலே
போதும். தேவன் பிரிந்து சென்று விடுவார். இது வேதச்சட்டம். இந்த பெருமையை கொடுப்பதற்காகத்தான் இக்காலத்தில் ”செல்ஃபி”
என்ற ஆயுதத்தை பிசாசு பயன்படுத்துகிறான்.
சிலர் கொஞ்சமாக
செல்ஃபி எடுப்பார்கள். சிலரோ அதிகமாக அதிலும் குறிப்பாக ”மெமரி”
காலியாகும் வரை செல்ஃபி எடுப்பார்கள். ஒரு
நியூ டிரஸ் போட்டால் போதும் நூற்றுக்கணக்கான செல்ஃபி போட்டோக்களை விதவிதமான
ஆங்கில்களில் எடுப்பார்கள். சரி எடுத்தவுடன் விட்டுவிடுவார்களா?
இல்லை அந்த படத்தை பார்த்து பார்த்து ரசிப்பார்கள் அப்பொழுதுதான் பிசாசு கிரியை
செய்வான்.
அந்நேரத்தில் சிலருக்கு நீ அழகு இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையை சிந்தையில் விதைப்பான். அப்படிப்பட்டவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு
இடம் கொடுத்து வீட்டிற்குள்ளே முடங்கிடுவார்கள். சிலருக்கு ”நீ தான் அழகு
உன்னைவிட வேற யாரும் அழகு இல்லை.
உன்னைவிட இந்த ஊர்ல வேற யாரும்
அழகு இல்லை அடுத்த உலக அழகி நீதான்” என்ற பெருமையை சிந்தையில் களையாக விதைப்பான். பற்றாக்குறைக்கு நண்பர்கள் வேற கமெண்டில் ஜால்ரா
அடிப்பார்கள்.
லைக்கும் அதிகமாக கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சி
தொடர்ந்து நடக்கையில் நாளடைவில் ”நான்தான் அழகு” என்ற சுயப்பெருமை இருதயத்திற்குள்
வந்துவிடும். நாட்கள் செல்ல செல்ல யாரும் உடைக்கமுடியாத படி அது கடினமாகிவிடும். இந்நிலையில் எப்பொழுதும் நான் தான் அழகி என்ற பெருமை நடை, மற்றும் முகப்பாவனையில் தெரியும். என்னை விட்டா வேற யாரும் அழகு இல்லை என்ற பெருமை பேச்சில் இருக்கும்.
நாம் பிசாசு என்று
சொல்லும் லூசிபர் கூட அழகில்தான் மேட்டிமையானான் என்று சத்திய வேதம்
கூறுகின்றது(எசேக்கியல்
28:17). இப்படி பெருமை வரும் நேரத்தில் அம்மனிதரிடம் இருந்து தேவன்
விலகி சென்று விடுவார்.
அந்த நேரம் தான் ”ஆபத்தான நேரம்” .
அந்த
ஆபத்தான நேரத்தில் வாலிப பிள்ளைகளாக இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை போராட்டமான வாழ்க்கையாக இருக்கும். கண்டவனும் பின்தொடருவான். பார்க்கின்றவன் எல்லாம் கவர்ந்து செல்லும்
விதத்தில் பார்ப்பான். தேவனால் போடப்பட்ட பாதுகாப்பு வேலி உடைக்கப்படும்.
தேவனுடைய பாதுகாப்பு வேலி உடைக்கப்பட்டால் பின்பு என்ன நடக்கும்? நமக்கு
தெரிந்ததுதான் பிசாசு உட்புகுவான் பாவம், செய்ய வைப்பான், சோதனையை கொண்டு வருவான்.
ஆசீர்வாதத்தடை காணப்படும். சிலருக்கு இதனால் திருமண தடை காணப்படும், குழந்தை
பாக்கிய தடை காணப்படும், இச்சை வரும் இப்படி தேவனிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்கப்படுவார்கள்.
இதை வாசிக்கின்ற
தேவபிள்ளையே!! நீ செல்ஃபி பிரியராக இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக
இரு. உன் செல்ஃபி போட்டோவை பார்த்து வீன் பெருமைக்கு இடம் கொடுத்துவிடாதே.
எப்பொழுதும் மனத்தாழ்மையாக இரு. தாழ்மையை ஆடையாக அணிந்து கொள். சர்வவல்ல தேவன்
உன்னை விட்டு விலகாமல் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பார்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற
இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE
செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
Exellent
ReplyDeleteகர்த்தர் என்னோடு பேசினார்
DeleteAmen
ReplyDelete