விஷத்தை முறிக்கும் விசுவாசம்

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கின்றது என்று எபிரேயர் 11 :1 ல் வாசிக்கலாம்.
இது மகா பரிசுத்தமானது (யூதா 1:20). இதற்கு விஷத்தை முறிக்கும் வல்லமையுள்ளது. விசுவாசம்
எப்படி விஷத்தை முறிக்கும் என்பதைக் குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக
தியானிப்போம். இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு
மகிமையை செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஜெபியுங்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் மெலித்தா என்னும் தீவில்
இருக்கும் போது ஒரு விரியன் பாம்பு அவன் கையைக் கவ்விக் கொண்டது. அந்தப் பாம்பு அவன்
கையில் கடித்து தொங்குகிறதைப் பார்த்த அந்த தீவின் மக்கள் வீக்கம் கொண்டு அல்லது சடிதியாய்
விழுந்து சாவான் என்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு விசுவாச வீரன். விசுவாச வீரர்கள் எப்பொழுதும் சடிதியாய் விழுந்து
சாவதில்லை. அதேபோல் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு ஒரு சேதமும் வரவில்லை. அதைப் பார்த்த
மக்கள் வேறுசிந்தையானர்கள் என்று அப்போஸ்தலர் 28 ம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம்.
பாம்பின் விஷம் என்பது மனிதனைக் கொல்லும்
ஆற்றல் உள்ளது. அதிலும் விரியன் பாம்பின் விஷம் மிக கொடுமையானது. கடித்த சிலமணி நேரங்களிலே அந்த
விஷம் இரத்தத்தில் கலந்து மனிதன் உயிரை எடுத்துவிடும். ஆனால், அப்போஸ்தலனாகிய பவுலை
மாத்திரம் அது கொல்லவில்லை. ஏன் அவனை கொல்லவில்லை? அவனிடம் என்ன இருந்தது? என்ன செய்தான்?
அப்போஸ்தலர் 27ம் அதிகாரத்தில் கடலில்
கப்பல் யாத்திரை செய்தான். அவனோடு கூட அநேகர் அந்தப் பயணத்தில் இருந்தார்கள். யூரோக்கிலிதோன்
என்னும் கடும் காற்று அவர்கள் மேல் மோதியது. அநேக நாட்களாய் சூரியனையும் நட்சத்திரங்களையும்
காணாமல் மிகுந்த பெரும் மழையில் சிக்கிக் கொண்டார்கள். தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கை
அற்றுப் போய் இருந்தார்கள். பவுலுக்கும் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை. ஆகிலும்
தேவதூதன் பவுலைப் பார்த்து பயப்படாதே, நீ இராயனுக்கு
முன்பாக நிற்க வேண்டும். இதோ உன்னுடனே கூட
யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவு பண்ணினார் என்றான். அதாவது
இந்தக் கொடிய சேதத்திலும் நீ சாகமாட்டாய் என்று சொல்லி இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும்
என்ற பரலோக திட்டத்தினை அறிவிக்கின்றார். பின்பு அந்த ஆபத்தில் இருந்து தப்பி மெலித்தா
தீவுக்கு வருகின்றான். அங்கேதான் பாம்பு அவனைக் கடிக்கின்றது.
ஏற்கனவே,
மிகப்பெரிய ஆபத்திலிருந்து தேவன் அவனை தப்புவித்த விதத்தையும், வழிநடத்தினதையும்
அவன் பார்த்திருந்தான். அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தினை உறுதியாக விசுவாசித்தான்.
எனவே, இப்போது மெலித்தா தீவில் விரியன் பாம்பு அவனைக் கடித்தப் பின்பும் கூட, அவன்
சூழ்நிலைகளை பார்க்கவில்லை. பாம்பின் விஷத்தைப் பார்க்கவில்லை. தேவன் இராயனுக்கு முன்பாக
நிற்க வேண்டும் என்று வாக்குகொடுத்துள்ளார் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று விசுவாசித்தான்.
இருதயத்தில் பல கேள்விகள் எழும்பியிருக்கும். ஆனாலும், அவிசுவாசத்திற்கு இடங் கொடுக்கவில்லை.
விசுவாசத்தினை விட்டு பின்வாங்கவில்லை. சுற்றி இருந்த மக்கள் கூட சடிதியாய் விழுந்து
சாவான் என்று எண்ணினார்கள். ஆனால், பவுல் ரொம்ப சாதாரணமாக இருந்தான். அவன் விசுவாசத்தின்
உறுதி இரத்தத்தில் கலந்த விஷத்தின் வல்லமையை முறித்தது. அந்த விஷம் இரத்தத்தில் கிரியை
செய்ய முடியவில்லை. அப்படியே அழிந்துவிட்டது. பவுலுக்கு ஒன்றும் ஆகவில்லை. பவுலின்
உறுதியான விசுவாசம் விரியன் பாம்பின் விஷத்தை முறித்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம்
விரியன் பாம்பின் விஷத்தை முறிக்கும்.

இன்றும் நாம் கொள்ளைநோயின் காலத்தில்
வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். எங்குப் பார்த்தாலும் கொள்ளைநோயைக் குறித்த அச்சம்.
மரணப்பயம் மக்களை பிடித்திருக்கின்றது. ஆனால், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
இரத்தத்தினால் கழுவப்பட்ட பிள்ளை. அவர் என்னைக் குறித்துப் பெரிய திட்டம் வைத்துள்ளார்.
அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார். எனக்கு வாக்குத்தத்தம் தந்துள்ளார் என்று நாம் விசுவாசிக்கும்
போது, எந்த நோயும் தொற்றாது. ஒருவேளை அது தொற்றிருந்தாலும்
சரீரத்தில் தன் வேலையைக் காட்டவும் முடியாது.
பரலோக அக்கினி அதை எரித்துவிடும்.
எனவே, தேவனுடைய பிள்ளைகளே! அப்போஸ்தலனாகிய
பவுலைக் கடித்தது விரியன் பாம்பு. அந்த பாம்பின்
விஷம் ஒரே நாளில் மனிதனைக் கொல்லும் வலிமையானது. அதைவிட கொள்ளைநோய் ஒன்றும் பெரிதானது அல்ல. எனவே, நாம் விசுவாசத்தைப் பாதுகாத்துக் கொள்வோம்.
விசுவாசத்தினால் நம்மை மூடிக்கொள்ளும் போது, எந்த சேதமும் வராது. எனவே, விசுவாசத்தோடு
இருப்போம் ஜெயமெடுப்போம்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
Amen. மிகவும் பிரயோஜனமான பதிவு.
ReplyDelete