இச்சையும்… பயமும்…

                           

      இச்சை மாத்திரமல்ல, பயமும் பாவம்தான் என்று பரிசுத்தவேதம் கூறுகின்றது. இச்சையின் ஆவி ஒரு மனிதனின் உணர்ச்சிகளைத்தூண்டி,  எப்படி பாலியல் பாவங்களை செய்ய வைக்கின்றதோ,  அதேபோல் பயத்தின் ஆவியும்  ஒரு மனிதனுக்குள் கிரியை செய்து பாவம் செய்ய வைக்கின்றது. இந்த தீர்க்கதரிசன செய்தியில் இச்சையின் ஆவி எப்படி பாவங்களை செய்ய வைக்கின்றது என்பதனையும், பயத்தின் ஆவி ஒரு மனிதனுக்குள் கிரியை செய்து எப்படி பாவங்களை செய்ய வைக்கின்றது என்பதனையும் இந்த வீடியோவில் விரிவாகப்பார்க்கலாம். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

    ”பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக” என்பது  பிரதான கட்டளையாகிய பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையாகும். (யாத்திராகமம் 20:17 ) ஒரு ஸ்திரீயை இச்சையோடுப் பார்க்கின்ற எவனும், தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்கின்றான் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னார்.(மத்தேயு5:28). எதிர்பாலினரை இச்சையோடு பார்ப்பது பாவமாகும். அதேபோல், பயப்படுகின்றவர்களும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. (வெளிப்படுத்துதல் 21:8) தேவனுடைய பிள்ளைகள், ஏதோ ஒரு காரியத்தினைக் குறித்துப் பயந்து நடுங்குவதும் பாவமாகும். இச்சை எப்படி பாவமோ அதேபோல் பயமும் பாவமாகும்.

  எதிர்பாலினரை இச்சையோடு பார்க்கும் போது இச்சையின் ஆவி, தேவனுடைய பிள்ளைகளின் ஆவி, ஆத்துமாவை முதலில் தாக்குகின்றது. பின்பு, சரீரத்திலுள்ள பாலியல் உணர்வுகளைத் தூண்டும் ஹார்மோன்களைத்தாக்கி ஆளுகை செய்து, அதைத் தாறுமாறாக சுரக்கச்செய்கின்றது.  ஊசி மூலமாக மருந்தை செலுத்தும் போது, அது எப்படி துரிதமாக இரத்தத்தில் கலக்கின்றதோ, அதேபோல் இந்தக் ஹார்மோன்களும், இரத்தத்தில் துரிதமாகக் கலந்து, இனப்பெருக்கமண்டலத்தைத் தூண்டி, இனப்பெருக்க உறுப்புகளை வேலை செய்ய வைக்கின்றது. இப்பொழுது இச்சையான சூழ்நிலைகள் காணப்படும். உடனே மனிதன் தன்னுடைய இச்சைகளை திருப்தி செய்ய ஆபாச படங்களை பார்ப்பதும், விபச்சாரம் வேசித்தனங்களை செய்வதும், எதிர்பாலினரோடு ஆபாச சாட்டிங் செய்வதும், சுயப்புணர்ச்சி செய்வதும் போன்ற பாவக்காரியங்களை செய்ய துணிகின்றான். இது பாவமாகும்.   

   இதேபோல்தான்,  ஏதோ ஒரு காரியத்தினைக் குறித்துப்பயந்து நடுங்கும் போதும், பயத்தின் ஆவி முதலில் ஆவி, ஆத்துமாவை  தாக்குகின்றது. பின்பு பயத்தைத்தூண்டும் ஹார்மோன்களைத் தாக்கி ஆளுகை செய்து, அதை தாறுமாறாக சுரக்கச்செய்கிறது. இந்த ஹார்மோன்கள் தாமதமின்றி, உடனே இரத்தத்தில் கலந்து, சரீர உறுப்புகளை ஆளுகை செய்கின்றது. இந்த சூழ்நிலையில், பயம், பதற்றம், அதிகமான இருதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், முகத்தில் வியர்வை போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றது.  ஒரு பயம் கலந்த பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும். இது பயத்தின் ஆவியால் வரும் பாவமாகும்.

   இச்சையின் ஆவி ஒரு மனிதனை தொடர்ந்து தாக்கும்போது இனப்பெருக்க மண்டலத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இனப்பெருக்க மண்டலம் என்பது இனப்பெருக்கத்திற்குப் பயன்படும் எல்லா உறுப்புகளும், அதற்குத் தேவையான ஹார்மோன்களும் சேர்ந்த தொகுப்பு ஆகும். இவைகள் எல்லாம் பாதிக்கப்படும். இதனால் பிரம்மியம் ஏற்படுதல்,பெரும்பாடு ஏற்படுதல், யூட்ரஸ் சம்பந்தமான பிரச்சனைகள் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.  அதேபோல் பயத்தின் ஆவியும் ஒரு மனிதனைத் தாக்கும் போது, இருதயம் சம்பந்தமான நோய்கள், ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள், அதிகமான இருதயத்துடிப்பு போன்றவை ஏற்படும்.

  எனவே, எப்பொழுதெல்லாம், இச்சையின் ஆவி தாக்கி உணர்ச்சிகளைத் தூண்டி பாவம் செய்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துகின்றதோ, அப்பொழுதெல்லாம் உடனே அதை தேவசமூகத்தில் அறிக்கை செய்ய வேண்டும். தூண்டுகின்ற இச்சையின் ஆவிகளை உடனே  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கடிந்து அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல்தான், பயத்தின் ஆவிகளுக்கு இடம் கொடுக்கும் போதும் உடனே அதை தேவசமூகத்தில் அறிக்கையிட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே துரத்த வேண்டும்.  பயத்தின் ஆவிகள் தாக்காதபடிக்கு அதற்கு எதிர்த்து நிற்க வேண்டும். இப்படி செய்வதால் இச்சையின் ஆவிகள் நம்மை தாக்காதபடிக்கு பாதுகாக்கலாம். பயத்தின் ஆவிகளையும் எதிர்த்து ஜெயம் எடுக்கலாம்.

  ஆதலால், ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கின்ற தேவனுடைய பிள்ளைகள் இச்சைக்கு தொடர்ந்து எதிர்த்து நிற்பது போல், பயத்தின் ஆவிக்கும் எதிர்த்து நின்று விரட்டி துரத்துங்கள். அசுத்த ஆவிகளை ஜெயமெடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.இந்த செய்தியை You tube –லும் பார்க்கலாம். Click Here 

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

Switch To ENGLISH    HINDI

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..