வரன் தேடுபவர்களுக்கு..
திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்த்து தன்
வாழ்க்கைத் துணை இவளா? இவரா? என்பதனை உறுதி செய்யும் நிகழ்ச்சியை வரன்பார்க்கும் படலம்
என்பார்கள். எல்லாரும் திருமண வாழ்க்கைக்கு செல்வதற்கு முன் இதை கடந்து
வந்திருப்பார்கள். இது திருமண வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். இதில் எடுக்கப்படும்
முடிவே எதிர்கால குடும்ப வாழ்க்கையை தீர்மானிக்கும். அநேகர் இதில் தவறான முடிவை எடுத்து,
பின்நாட்களில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.
இந்த
தீர்க்கதரிசன செய்தியில் திருமணத்திற்கு முன்பு எப்படி துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?
என்னென்ன காரியங்களை பார்க்க வேண்டும்? பரிசுத்த வேதத்தில் முதன்முதலாக ஆதாமுக்கு
நடந்த பெண் பார்க்கும் படலம் எப்படி நடந்தது? என்பதனைக் குறித்து பரிசுத்த வேதவசனம்
மூலமாக தியானிக்கலாம். இதை ஜெபத்துடன் வாசியுங்கள். திருமணத்திற்காகக் காத்திருக்கும்
உங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும். அப்படியே உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்
கீழே உள்ள Comment Box-ல் Comment பண்ணுங்கள். நாம் சேர்ந்து சர்வவல்ல தேவனுடைய நாமத்தினை
மகிமைப்படுத்துவோம்.
பரிசுத்த வேதத்தில்
முதல் மனிதனாகிய ஆதாம் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று நினைத்த தேவன் அவனுக்கு திருமணம்
செய்து வைக்க விரும்பினார். உடனே ஒரு பெண்ணை கொண்டு வந்து இவளை திருமணம் செய்துக்கொள்.
இவள்தான் உன் மனைவி என்று சொல்லவில்லை. மாறாக பெண்பார்க்கும் படலம் என்ற நிகழ்ச்சியை
நடத்தினார்.
சகலவிதமான விலங்குகளையும், ஆகாயத்து பறவைகளையும் மண்ணினால் உருவாக்கி, ஆதாம்
அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவனிடம் கொண்டுவந்தார். அதில் ஏதாவது
ஆதாமுக்கு பிடித்திருக்கின்றதா? எதையாவது விரும்புகின்றானா? இதில் அவன் துணை உள்ளதா?
என்று ஆராய்ந்து பார்த்தார். ஆனால், ஆதாமுக்கோ எதுவும் பிடிக்கவில்லை. ஒன்றையும் அவன்
ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதாம் விருப்பத்திற்கு எதிராக தேவனும் ஒன்றும் செய்யவில்லை.
ஆனால், ஆதாமுக்கோ
திருமணம் செய்து வைப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். எனவே, ஆதாமுக்கு நல்ல அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார். பின்பு அவன்
விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை மனுஷியாக உருவாக்கி ஆதாமிடம் கொண்டு வந்தார்.
அவளை பார்த்தவுடன் ஆதாமுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவள் தன் எலும்பில் எலும்பும்,
மாம்சத்தில் மாம்சமாய் இருப்பதை உணர்ந்தான். அவளுக்கு மனுஷி என்று பெயரிட்டு தன் மனைவியாக
ஏற்றுக்கொண்டான். சர்வவல்ல தேவன் அவளையே ஆதாமுக்கு திருமணம் செய்து வைத்தார்.
முதலில் சகலவிதமான விலங்குகளையும், பறவைகளையும் ஆதாமிடம் கொண்டுவரும்போது அதில்
எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால், அவைகள் எதிலும் தன்னுடைய சாயல், தன்னுடைய
சுபாவம் காணப்படவில்லை. விலங்குகளின் சாயலும், சுபாவமும் காணப்பட்டது. ஆனால், தன் எலும்பில்
இருந்து எடுக்கப்பட்ட ஏவாளைப் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துவிட்டது. ஏனென்றால், அவளிடம்
மனுஷ சாயல், ஆதாமின் சுபாவம் காணப்பட்டது. உடனே, அவள்தான் தன்னுடைய மனைவி என்று முடிவு
செய்துவிட்டான். தேவனும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து ஆசீர்வதித்தார்.
அதேபோல்,
இன்றைய நாட்களிலும் வரன்பார்க்கும் நிகழ்ச்சி நடக்கும்போது பெண் எவ்வளவு படித்திருக்கின்றாள்?
எவ்வளவு வரதட்சனை தருவார்கள்? எவ்வளவு நகை போடுவார்கள்? எவ்வளவு சம்பளம் வாங்குகின்றாள்?
சொத்து எவ்வளவு உள்ளது? சொந்த வீடு உள்ளதா? போன்ற உலகப்பிரகாரமான காரியங்களை பார்க்கக்கூடாது.
மாறாக தன்னுடைய சுபாவம் காணப்படுகின்றதா? தன்னுடைய ஆவிக்கு ஏற்றவளாக இருக்கின்றாளா?
இருக்கின்றாரா?தனக்கு இருக்கும் அதே அபிஷேகம் அந்தப் பெண்ணிடம் இருக்கின்றதா? என்பதனை
முதலில் பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட
பெண்ணைப் பார்க்கும்போது இருதயத்தில் ஒரு இனம் புரியாத சமாதானம் வரும். உடனே, அதை
Select பண்ண வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் துணையால் எதிர்காலம் மிகவும் ஆசீர்வாதமாக
இருக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். இதை விட்டுவிட்டு பணம், பொருள், படிப்பு, அழகு போன்றவற்றினை மட்டும்
பார்ப்பதினால் தன்னுடைய சுபாவத்திற்கு ஏற்ற துணை கிடைக்காமல் போய்விடும். இதனால் திருமண
வாழ்க்கையில் மிகவும் பிரச்சனை போராட்டம் காணப்படும்.
இப்பொழுது,
இந்த செய்தியை கருத்தாக வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! வாலிபர்களே! முதலில் உங்கள்
திருமணத்திற்காகவும், அதில் தேவசித்தம் நிறைவேறவும், நல்ல துணையை காட்ட வேண்டும் என்பதற்காக
ஜெபியுங்கள். உங்கள் விருப்பம் இல்லாமல் எந்த துணையையும் உங்களுக்கு சர்வ வல்ல தேவன்
திருமணம் செய்து வைக்கமாட்டார். வரன்பார்க்கும் படலத்தில் உங்கள் சுபாவத்திற்கு ஏற்ற
துணை இருக்கின்றதா? என்பதனை ஆராய்ந்துபாருங்கள். அப்படிப்பட்ட துணையை தேர்ந்தெடுக்கும்போது
உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை
உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள்,
நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக
இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Devanukey magimai undakattum..... Ennoda name getciyal....ennoda marriage veshayathula romba kolapathula eruntha unmya entha message enaku romba helpfull ah erunthuchu nandri appa...
ReplyDeletePraise the Lord.....
ReplyDeletePerfect explanation.....
Praise the Lord
ReplyDeleteAmen so useful
ReplyDelete