சந்ததிப் பெருக்கம் தேவனுடைய விருப்பம்

தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார். என்னிடத்தில் வாரும் தாமதிக்க வேண்டாம் என்று யோசேப்பு தன் சகோதரர்கள் மூலமாக யாக்கோபினிடத்தில் சொல்லச் சொன்னான் . (ஆதியாகமம் 45:9,10,11) இதைக் கேட்ட யாக்கோபு பெயர்செபாவுக்கு சென்று, தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்கு பலியிட்டு எகிப்துக்கு செல்லலாமா? அல்லது வேண்டாமா? என்று விசாரித்தான். அன்று இரவு தரிசனமான தேவன்: நீ எகிப்து தேசத்திற்குப் போகப் பயப்பட வேண்டாம். அங்கே உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குத்தத்தம் கொடுத்து அனுப்பினார். (ஆதியாகமம் 46 :1-5) ஈசாக்கின் காலத்தில் ஒரு பெரிய பஞ்சம் தேசத்தில் வந்தது. அப்பொழுது அவனுக்கு தரிசனமான தேவன் எகிப்துக்கு செல்ல அனுமதி கொடுக்கவில்லை.(ஆதியாகமம் :26 :1- 3) ஆனால், எகிப்துக்கு செல்ல யாக்கோபுக்கு அனுமதி கொடுத்தார். ஏன் அவனுக்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும்? ஈசாக்கை தடுத்த தேவன் யாக்கோபை தடுக்காமல் இருந்ததற்கான காரணங்கள் என்ன? இஸ்ரவேல் மக்கள் எகிப்துக்கு சென்றதற்கான காரணங்கள் என்ன? இஸ...