யோபுவும் சோதனையும்
ஊத்ஸ் தேசத்தில் யோபு என்ற மனுஷன் இருந்தான்.
யோபுவை பரிசுத்த வேதம் மனுஷன் என்றே அடையாளப்படுத்துகின்றது. அவன் நம்மைப்போல் பாடுள்ள
மனுஷனாக இருந்தான். அவன் உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு
விலகுகிறவனுமாய் இருந்தான் என்று பரிசுத்த
வேதத்தில் கர்த்தராகிய தேவனும் சாட்சிக்கொடுக்கின்றார். ஒரு முறை அல்ல இரண்டு முறை
இந்த சாட்சி கொடுக்கின்றார். அது வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.
பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த பாடுள்ள மனிதனாகிய
யோபுவே, இந்த சாட்சியைப் பெறமுடியுமென்றால், இந்தக் கிருபையின் காலத்தில் பரிசுத்த
ஆவியானவர் ஆளுகையில் வாழ்கின்ற நாம் இந்த சாட்சியை எவ்வளவு அதிகமாக பெறலாம். மிக மிக
அதிகமாக பெறலாம். அதற்கு சாக்குபோக்கு சொல்ல முடியாது.
இந்த யோபுவுக்கு ஏழு குமாரர்கள் மூன்று குமாரத்திகள்
பிறந்தார்கள். நீதிமான் சந்ததி பூமியிலே அறுப்புண்டு போகாது. ஒருவன் தேவனுக்கு பிரியமாக
இருந்தால் அவனுடைய சந்ததி பூமியிலே தழைக்கும். அதன்படி, தேவனுக்குப் பிரியமாக வாழ்ந்த
யோபுவுக்கு புத்திர சந்தானத்தை கொடுத்து ஆசீர்வதித்தார். நீங்களும் தேவனுக்கு பிரியமான
வாழ்க்கை வாழ பிரயாசப்படலாம் உங்களுக்கும் நல்ல கர்ப்பத்தின் கனியைத் தந்து பரலோகதேவன் ஆசீர்வதிப்பார்.
இப்பொழுதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கர்ப்பத்தின் கனியைத் தடுக்கின்ற
கட்டுகள் உடைக்கப்படட்டும்.
அதுமட்டுமல்ல தேவாதி தேவனுக்குப் பயந்து பிரியமான
வாழ்க்கை வாழும்போது எப்படி குடும்ப ஆசீர்வாதம் கிடைகின்றதோ, அதேப்போல் அவர்களை சுற்றியும்,
அவர்களுடைய குடும்பத்தை சுற்றியும் சர்வவல்ல தேவன் வேலியடைக்கின்றார். யோபுவுக்கும்
இந்த பாதுகாப்பு கிடைத்தது. யோபுவையும், யோபுவுக்கு உண்டான எல்லாவற்றைச் சுற்றியும்
தேவனுடைய பாதுகாப்பு வேலி இருந்தது.
சர்வவல்லதேவன் யாரைச் சுற்றி எப்பொழுது வேலியடைக்கின்றாரோ
அப்பொழுதே அவர்களுடைய சம்பத்து தேசத்தில் மிக அதிகமாக பெருகும். இது உண்மையான ஒன்றாகும்.
அதன்படி யோபுவுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஓட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும்,
ஐந்நூறு கழுதைகளும் இருந்தது. இது மட்டுமல்லாமல் திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்.
கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் மிகவும்
பெரியவனாக இருந்தான். யோபுவின் வீட்டில் தினமும் விருந்துதான் நடைப்பெற்றது.
யோபுவைப்போல்
இந்த ஆசீர்வாதத்தினைப் பெற வேண்டும் என்றால் முதலில் நம்மைச் சுற்றியும், வீட்டைச்
சுற்றியும், நமக்கு உண்டான எல்லாவற்றைச் சுற்றியும் வேலியடைக்க ஒப்புகொடுக்க வேண்டும்.
அதற்காக ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். தேவன் வேலியடைத்துவிட்டார் என்றால் சம்பத்து தேசத்தில்
பெருகும். அது நிச்சயம்.
தேவன் ஒரு மனிதனையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைத்திருக்கும் போது, பறிகாரர்களோ, பிசாசோ மற்ற மனிதர்களோ அவர்களுடையது எதையும் தொடமுடியாது. குறிப்பாக ஆசீர்வாதத்தினைத் தொடவே முடியாது. அப்படித் தொட வேண்டும் என்றால் முதலில் அம்மனிதனை சுற்றியுள்ள பாதுகாப்பு வேலி உடைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு வேலி இருக்கும் போது அருகில் கூட நெருங்க முடியாது.
சரி… எப்பொழுது இந்த பாதுகாப்பு வேலி உடைக்கப்படும்?
எப்பொழுது பிசாசு அந்த மனிதனைத் தொடுவான் என்று பார்த்தால், அந்த மனிதன் தேவாதி தேவனையும்
அவருடைய நாமத்தையும் மறுதலித்து எப்பொழுது தூஷிக்கின்றானோ, அப்பொழுதுதான் அந்த வேலி
உடைக்கப்படும். இது வேத இரகசியம்.
இந்த
வேத இரகசியம் யோபுவுக்கு மிக நன்றாக தெரியும். எனவே, தேவாதி தேவனை மட்டும் எக்காரணம்
கொண்டும் தூஷித்துவிடக் கூடாது என்பதில் மிக மிக ஜாக்கிரதையாக இருந்தான். எனவே, தன்னுடைய
குமாரர்கள் ஓவ்வொருவருடைய வீட்டிலும் விருந்து முடிகின்ற நேரத்தில், அவர்கள் தங்கள் இருதயத்தில் தேவனை தூஷித்திருப்பார்கள்
என்று சொல்லி காலை வேளையில் அவர்களை அழைத்து
பரிசுத்தப்படுத்தி எல்லாருடைய இலக்கத்தின்படியும் சர்வாங்க தகனபலியை செலுத்துவான்.
தினமும் இதை செய்வான்.
இப்படி எச்சரிக்கையாக இருப்பது நாளடைவில் இது அதீத
பயமாகவே மாறிவிட்டது. என் குமாரர்கள் தேவனை தூஷித்திருப்பார்களோ, பாதுகாப்பு வேலி பிடுங்கப்படுமோ,
என் சொத்துகள் அழிக்கப்படுமோ, குமாரர்கள் குமாரத்திகள் மரித்து விடுவார்களோ என்று பயந்து
பயந்து பலி செலுத்த ஆரம்பித்துவிட்டான். அதாவது இன்றும் சிலர் காலையில் வேதம் வாசிக்கவில்லையென்றால்
பாவம், ஜெபிக்கவில்லையென்றால் தேவன் அடித்துவிடுவார், சபைக்கு செல்லவில்லையென்றால்
ஆசீர்வாதம் கிடைக்காது என்று எண்ணி அன்பின் தேவமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
அன்பை புரியாமல் ஆவிக்குரிய காரியங்களில்
ஈடுப்படுவார்களே அதேப்போல் யோபுவும்
பயந்து பயந்து பலி செலுத்தினான்.
இப்படி பலியிடுவது தவறு இல்லை.. தேவனுடைய பார்வையில் பாவமாகவும் தெரியாது.
ஆனால், இதைக்கொண்டு பிசாசு அம்மனிதர்களை சோதிக்கமுடியும். எப்படியெனில் , ஆசீர்வாதம்
வேண்டும் என்றுதான் இவன் தேவனை தேடுகின்றான்,
ஆசீர்வாதம் இல்லையென்றால் தேவனை மறுதலிப்பான் என்று எண்னி பிசாசு அம்மனிதனை
சோதிக்க கண்ணி வைப்பான்.
அப்படித்தான் யோபுவை சோதிக்க பிசாசு முடிவெடுத்தான்.
மிருக ஜீவன்கள், பிள்ளைகள் என எல்லாவற்றையும் இழந்து விட்டான் என்றால் கண்டிப்பாக தேவனை
தூஷிப்பான் என்று சதித்திட்டம் தீட்டினான். ஆனால், யோபுவையும், யோபுவுக்கு உண்டான எல்லாவற்றைச்
சுற்றியும் பாதுகாப்பு வேலி இருந்ததினால் அவனுடைய ஆசீர்வாதத்தினை தொடமுடியவில்லை. எனவே,
தேவனிடத்தில் முறையிட்டு அனுமதி வாங்கச் சென்றான்.
ஒரு நாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில்
வந்து நின்ற போது, சாத்தானும் அவர்கள் நடுவில் வந்து நின்றான். இந்த வசனத்தை வாசிக்கும்போது
பிசாசினால் எப்படி தேவசமூகத்தில் நிற்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு வரும். சும்மா சாதாரணமாக நிற்க
முடியாது. அவருடைய பிரசன்னத்திற்குள் நுழையவே முடியாது. ஆனால் தேவனால் வேலியடைக்கப்பட்ட
மனிதன் அல்லது தேவாதி தேவனிடத்திலிருந்து நன்மைகளைப் பெற்ற ஒருவன் மீது ஏதேனும் குற்றம்
இருந்தால் அதைக்கொண்டு பிசாசு தேவசமூகத்திற்குள் உரிமையுடன் வருவான். அப்படித்தான்
தேவசமூகத்திற்குள் வந்தான்.
. தேவப்புத்திரர் எல்லாரும் நிற்கின்றார்கள்.
தேவன் பிசாசைப்பார்த்து எங்கேயிருந்து வருகின்றாய்
என்று கேட்டார். பூமியெங்கும் சுற்றி வருகின்றேன் என்று சொன்னான். அவன் சொல்லுவதற்கு
முன்பே வந்த நோக்கத்தினை அறிந்த தேவன் ”என் தாசனாகிய யோபுவின் மேல் உன் கவனம் சென்றதோ?
அவன் உத்தமன், சன்மார்க்கன் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகின்ற அவனைப் போல்
பூமியில் ஒருவனும் இல்லை” என்று சாட்சிக்கொடுத்தார்.
அதற்கு சாத்தான் உண்மைதான். நீர் சொல்லுவது எல்லாம்
சரிதான். ஆனால் யோபு விருதாவாகவா உமக்கு பயந்து நடக்கின்றான்? உம்மிடத்தில் ஆசீர்வாதம்
கிடைக்கின்றது. அதை இழந்துவிடக்கூடாது என்று எண்ணி உமக்குப் பயந்து நடக்கின்றான். பலி
செலுத்துகின்றான். நீரும் அவனை சுற்றி வேலியடைத்திருக்கின்றீர். இப்பொழுது உம்முடைய
கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொட்டுப்பாரும் அந்த நேரமே.. அடுத்த கனமே உமது முகத்துக்கு எதிரே உம்மை தூஷிக்கானோ பாரும்
என்றான்.
நம்
தேவன் மகா நீதிபரர் ஒரு மனிதனையோ தேவப்பிள்ளையையோ
குறித்து சோதிக்க பிசாசு அனுமதி கேட்கும்போது, அவர் கொடுத்துதான் ஆக வேண்டும். அதுவும்
அவர் சாட்சி கொடுத்த மனிதனின் உத்தமத்தினை சோதிக்க அனுமதி கேட்டால் கண்டிப்பாக கொடுத்துதான்
ஆக வேண்டும். அதனால்தான் கர்த்தராகிய இயேசு
கிறிஸ்து எங்களை சோதனைக்குட்பட பண்ணாமல் எல்லா தீமையினின்று இரட்சித்து காத்துக் கொள்ளும்
என்று ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். அப்படி ஜெபிக்கும்போது பிசாசு சோதிக்க முடியாது.
ஏனெனில், அவனுடைய
குற்றச்சாட்டைவிட
நம்முடைய ஜெபம் மிகவும் மதிப்பானது.
நீதியின்படி அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றையும் தொடு அவன்
மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்று நிபந்தனையுடன் பிசாசுக்கு அனுமதிக்கொடுத்தார்.
யோபுவை எப்படியாவது வாயினால் தூஷித்துப் பாவம் செய்ய வைக்கவேண்டும். என்று பூமிக்கு
வந்த பிசாசு, ஒரே நாளில் யோபுவின் மூத்தக்குமாரன் வீட்டில் விருந்து நடக்கும்போது,
மிருகஜீவன்கள், பணிவிடைக்காரர்கள், யோபுவின் பிள்ளைகள் என ஒவ்வொன்றையும் அழித்தான்
இதற்கு இயற்கை (பெருங்காற்று) மற்றும் மனிதர்களை பயன்படுத்தினான்.
இதை யோபுவுக்கு அறிவிக்கும்படி ஒவ்வொரு மனிதர்களாக
வருகின்றார்கள். வந்து சொல்லுகின்றார்கள். தன் செவிகளில் கேட்ட யோபு தேவாதி தேவனை வெளிப்படையாக
தூஷிக்கவில்லை. தன் சால்வையை கிழித்துக்கொண்டு தன் தலையைச் சிரைத்து தரையிலே விழுந்து
பணிந்து “ நிர்வாணியாய் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்கு
திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்”
என்று அறிக்கையிட்டான். முதல் சோதனையில் வாயினால் தூஷிக்காமல் ஜெயம் எடுத்தான். ஆனாலும்,
அவன் சொன்ன இந்த அறிக்கையே அவனுக்கு கண்ணியாயிற்று. இரண்டாம் சோதனைக்கு காரணமாயிற்று.
அப்படியென்றால் இது தவறா? இல்லை இப்படி அறிக்கையிடுவது
தவறல்ல.. தேவனுடைய நாமத்தினை தூஷிக்கும் வார்த்தையும் அல்ல. ஆனால், இந்த அறிக்கையில்
கர்த்தர் கொடுத்தார் என்பது சரி. கர்த்தர் எடுத்தார் என்பது தவறு. தேவாதி தேவன் யோபுவுக்கு
தீமையை அனுமதிக்கவில்லை.
நம் தேவன் அன்புள்ளவர். மிகுந்த கிருபையுள்ளவர்.
தீமைக்கு மனஸ்தாபப்படுகின்றவர். இந்த சம்பவத்தினை நன்கு ஆராய்ந்து வாசித்து பாருங்கள்.
பிசாசு தேவனை நோக்கி நீர் கையை நீட்டி தொடும் என்கின்றான். ஆனால், தேவன் தன்னுடைய கையை
நீட்டாமல் நீதியினிமித்தம் நிபந்தனையோடு விருப்பம் இல்லாமல் அனுமதி மட்டும் கொடுக்கின்றார்.
அனுமதி கொடுப்பதற்கும் தொடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அவர் தொடவில்லை பிசாசுதான்
தொட்டான். இது தெரியாமல் கர்த்தர் எடுத்தார் என்று யோபு அறிக்கையிட்டான்..
பொதுவாக ஒரு மனிதனுக்கு பிரச்சனை எங்கேயிருந்து
வருகின்றது? யார் கொண்டு வருகின்றார்கள்? என்பதனை அறிந்துக்கொண்டாலே போதும் அதிலிருகின்ற
பிசாசின் கிரியைகள் அழிக்கப்படும். அந்த அசுத்த ஆவி தோற்கடிக்கப்படும். அது தெரியாமல்
இருந்தால் அந்த ஆவி இன்னும் பலம் கொண்டு எழும்பும், இது ஆவிக்குரிய இரகசியம் இதற்குத்தான்
வெளிப்பாட்டுவரம் மிக முக்கியம்.
யோபுவுக்கு பிசாசின் தந்திரங்கள் தெரியாமல் தேவன்தான்
எடுத்துக்கொண்டார் என்று அறிக்கையிட்டதை பிசாசு பிடித்துக்கொண்டு, மறுபடியும் அடுத்த
ரவுண்ட் சோதித்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தான்.
மறுபடியும் தேவ சமூகத்திற்குள் சென்றான். அவனைப்
பார்த்து முகாந்திரமில்லாமல் என் தாசனாகிய யோபுவை நிர்மூலமாக்கும்படி கேட்டுக்கொண்டாய்;
ஆனாலும், யோபு தன் உத்தமத்தில் உறுதியாய் நிற்கின்றான் என்று தேவன் சாட்சிக்கொடுத்தார். அதற்கு சாத்தான் பிரதியுத்தரமாக தோலுக்கு பதிலாக தோலையும் தன் ஜீவனுக்கு பதிலாகத்
தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்; நீர் உம்முடைய கையை நீட்டி
அவனுடைய எலும்பையும் அவனுடைய மாம்சத்தையும் தொடுவீரானால் அப்பொழுது உமது முகத்திற்கு
எதிரே உம்மை தூஷிக்கானோ பாரும் என்றான்.
மறுபடியும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்று
நிபந்தனையுடன் அனுமதிக்கொடுக்கின்றார். கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு வந்த சாத்தான் யோபின் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் கொடிய
பருக்களால் வாதித்தான்.
யோபுவோ ஒன்றும் சொல்லாமல் ஓட்டை எடுத்து தன்னைச்
சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். இந்த நேரத்தில் எந்த அறிக்கையும் செய்யவில்லை.
கிட்டத்தட்ட ஜெயம் எடுத்துவிட்டான். ஆனால், பிசாசு அவனுடைய மனைவியின் மூலமாக இன்னும்
உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கின்றீரோ
தேவனை தூஷித்து ஜீவனை விடும் என்று பேசுகின்றாள்,
அதற்கு யோபு நீ பயித்தியக்காரி பேசுவது போல் பேசுகின்றாய்.
தேவனிடத்திலிருந்து நன்மையைப் பெற்ற நாம் தீமையை
பெற வேண்டாமோ? என்று அறிக்கையிடுகின்றான். முதல் வார்த்தை சரியானது. இரண்டாவது வார்த்தை
தேவனுடைய பார்வையில் பாவம் கிடையாது. ஆனால், யோபு பிசாசின் தந்திரத்தையும் தனக்கு தீமையை
செய்வது யார் என்பதனையும் அறியாமல் இருப்பதனை காட்டுகின்றது. தேவனிடத்திலிருந்துதான்
இந்த தீமை வருவதாக அறிக்கையிடுகின்றான். இந்த அறிக்கையை கவனித்த சாத்தான் இன்னும் யோபுவுக்கு
தெரியவில்லை எனவே மறுபடியும் சோதித்து பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றான். இந்த
முறை அவனுடைய நண்பர்களைக் கொண்டு சோதித்துப்
பாவம் செய்ய வைக்கலாம் என்று அவர்களை அனுப்புகின்றான்.
அவர்கள் வந்து தேவன் நீதிபரர் நீர் பாவி என்று சொன்னார்கள். யோபு நான் நீதிமான் தேவன் எனக்கு தண்டனையை கொடுத்துவிட்டார் என்று தன்னுடைய பிறந்தநாளை சபித்து, செத்தால் நலம் என்பது போல் புலம்புகின்றான். அவர்கள் யாருக்குமே தெரியவில்லை கடைசியாக தேவாதி தேவன் பேசி அவனுக்கு உணர்த்தி காரியத்தினை புரியவைத்து அவன் சிறையிருப்பை மாற்றினார். வெறும் இரண்டு அதிகாரத்தில் முடிய வேண்டிய யோபு புஸ்தகம் வெளிப்பாட்டின் வரம் யாருக்கும் இல்லாததினால் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி நாற்பத்திரண்டு அதிகாரத்திற்கு இழுத்துவிட்டார்கள்.
அதே போல் தான் இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையில்
பிரச்சனை எங்கேயிருந்து வருகின்றது? அதற்கு காரணம் என்ன என்பதனை தெரியாமல் இருப்பதினாலும்
பிரச்சனை நேரத்தில் எப்படி அறிக்கையிட வேண்டும் என்பது தெரியாமல் இருப்பதினாலும் இரண்டு
நாட்களில் சரியாக வேண்டிய பிரச்சனையை இரண்டு வருடம் அல்லது பல வருடங்களாக இழுத்தடிக்கின்றார்கள்.
ஆசீர்வாதம் இல்லாமல் பல வருடம் கஷ்டப்படுகின்றார்கள்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! உங்களுக்கு
நான் சொல்லும் ஆலோசனை பிரச்சனைக்கான காரணத்தினை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அது அறிந்துக்
கொள்ளமுடியவில்லையென்றால் அதுவரை எதுவும் பேசாதிருங்கள் அமைதியாக காத்திருங்கள் பெரும்
சோதனைக்கு நீங்கலாயிருப்பீர்கள்.
யோபுக்கு பிரச்சனை எங்கேயிருந்து வருகின்றது என்பதும்,
அதற்கான காரணம் என்ன என்பதும், அதை எப்படி ஜெயமெடுக்க வேண்டும் என்பதும், சோதனை நேரத்தில்
எப்படி அறிக்கை செய்ய வேண்டும் என்பதும் தெரியாமல் இருந்ததினால் திரும்ப திரும்ப சோதிக்கப்பட்டான்.
அவனுக்கு சோதனை திரும்ப திரும்ப வந்தது.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment