பரிபூரண சித்தம்
”நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து
அழைத்து வரும்படி உன்னை பார்வோனிடத்திற்கு அனுப்புவேன் வா” என்று தரிசனங்களைக் கொடுத்து மோசேயை அழைத்த சர்வவல்லதேவன்,
அவனை எகிப்துக்கு அனுப்பினார். (யாத்திராகமம் 3:10) ஆனாலும், அவன் செல்லும் வழியிலே
அவனைக் கொலைச் செய்யப் பார்த்தார். (யாத்திராகமம் 4:24) அழைத்து அனுப்பின தேவன் அவனை
ஏன் கொல்லப் பார்த்தார் என்று நமக்குள் கேட்கத்
தோன்றும். இந்த தீர்க்கதரிசன தியானத்தில் இதைப்பற்றி தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள்.
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார்.
மோசே தீர்க்கதரிசியை தேவன் ஏன் வழியிலே கொல்லப் பார்த்தார் என்பதனை அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் பிலேயாம் என்ற தீர்க்கதரிசியை ஏன் பட்டயத்தினால் கொலைச் செய்ய பார்த்தார் என்பதனை ஆழமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
புறஜாதிகளிலிருந்து அழைத்து, தீர்க்கதரிசியாக
உருவாக்கப்பட்டு, ஜாதிகளுக்கு பயன்படுத்தப்பட்டவன் பிலேயாம் என்ற தீர்க்கதரிசி ஆவான்.
அவன் யாரை ஆசீர்வதிக்கின்றானோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும்,
யாரை சபிக்கின்றானோ அவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். எனவே, கானானை நோக்கிப்
பயணம் செய்த இஸ்ரவேல் மக்களைச் சபிப்பதற்காக மோவாபின் ராஜாவாகிய பாலாக் அவனை அழைப்பித்தான்.
குறி சொல்வதற்கான கூலியைக் கொண்டு சென்ற மோவாபின் மூப்பர்கள் பிலேயாமிடத்தில் பாலாக்
சொன்ன வார்த்தைகளை விவரித்துச் சொன்னார்கள்.(எண்ணாகமம் 22)
எந்தக் காரியமாக இருந்தாலும் தேவ சமூகத்தில்
காத்திருந்து முடிவெடுக்கும் நல்ல ஆவிக்குரிய சுபாவம் பிலேயாமிடத்தில் இருந்தது. எனவே,
இன்று இராத்திரி இங்கே தங்கி இருங்கள். கர்த்தர் எனக்கு சொல்கின்ற படி உத்தரவு கொடுப்பேன்
என்று பாலாக்கின் மூப்பர்களிடத்தில் சொன்னான். அவர்கள் அங்கே இராத்தங்கினார்கள்.
சர்வவல்ல தேவன் இரவிலே பிலேயாமை சந்தித்து உன்னிடத்தில்
வந்திருக்கின்ற இந்த மனிதர்கள் யார்? என்று கேட்டார். நடந்தக் காரியங்களை பிலேயாம்
விளக்கிக் கூறினான். அதை கேட்ட தேவன் நீ அவர்களோடு போக வேண்டாம். அந்த ஜனங்களை சபிக்கவும்
வேண்டாம். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தன்னுடைய பரிபூரணத் திட்டத்தினை வெளிப்படுத்தி
சொன்னார். அவன் அவர்களுடனே செல்வதற்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் யாரும் அனுமதி
கொடுக்கவில்லை. அதனால், காலமே எழுந்த பிலேயாம் மோவாபின் பிரபுக்களை அனுப்பிவிட்டான்.
அவர்கள் ஏமாற்றத்துடன் தங்கள் தேசத்திற்கு
திரும்பிச் சென்றார்கள்.
மோவாபின் இராஜாவாகிய பாலாக்கினிடத்தில் சென்று
நடந்தக் காரியங்களை சொன்னார்கள். ஒருவேளை நாம் கொடுக்கின்ற பணம் குறைவாக உள்ளதோ என்று
நினைத்த அவன் கனவான்களான பெரிய பிரபுக்களையும், மூப்பர்களையும் அனுப்பி உம்மை மிகவும்
கனம் பண்ணுவேன்; நீர் சொல்வதை எல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த மக்களை சபிக்க
வேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
பாலாக் எனக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும்
தந்தாலும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை
மீற மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்த பிலேயாமுக்கு, இரண்டாவது வந்த பாலாக்கின் மூப்பர்கள்
பேசின வார்த்தைகள் பணம் ஆசையை தூண்டின. எனவே, அவர்களோடு செல்லக்கூடாது என்றும், அந்த
இஸ்ரவேல் மக்களை சபிக்கவும் கூடாது என்று தேவன் தன்னுடைய பரிபூரணத் திட்டத்தினை வெளிப்படுத்தின
பின்பும் பணஆசையினால் மறுபடியும் தேவ சமூகத்திற்கு சென்று விசாரித்தான்.
ஒருமுறை தேவனுடைய பரிபூரணத் திட்டத்தினை
அறிந்துக் கொண்ட பின்பு அதற்கு முழுமையாக கீழ்ப்படிய வேண்டும். மாறாக, திரும்பத் திரும்ப
தேவசமூகத்தில் கேட்கக் கூடாது. இது கீழ்ப்படியாமையையும், இருதயக்கடினத்தையும் குறிக்கும்.
இதுதான் எனக்கு வேண்டும் என்று இருதயக் கடினத்திற்கு இடம் கொடுத்து மறுபடியும் தேவசமூகத்திற்குள்
சென்றால், சிலவேளைகளில் தேவசித்தம் அல்லாதவைகளை செய்ய சர்வவல்ல தேவன் அனுமதி கொடுத்துவிடுவார்.
இது அனுமதிக்கப்பட்ட சித்தமாக மாறிவிடும்.
அப்படித்தான் மறுபடியும் தேவசமூகத்திற்குள்
சென்ற பிலேயாமுக்கு ’அவர்களோடு செல் .ஆனாலும்
நான் உனக்கு சொல்லும் வார்த்தையின்படி செய்யவேண்டும்’ என்று சொல்லி அனுமதி கொடுத்துவிட்டார்.
இவனும் காலமே எழுந்து கழுதையின் மீது சேணங்கட்டி இஸ்ரவேல் மக்களை சபிக்க மோவாபின் பிரபுக்களோடு
சென்றான்.
பிலேயாம் சென்றது தேவனுடைய பரிபூரண சித்தம்
அல்ல. அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் சென்றான். இப்படி செல்வதை பார்த்த தேவன் கோபமூண்டவராகி,
வழியிலே அவனைக் கொன்று போடுவதற்கு ஒரு உருவின
பட்டயத்தினை பிடித்துக்கொண்டு, எதிராளியாக நின்றார். ஆம்! தேவனுடைய பரிபூரணத்
திட்டத்தினை அறிந்த பின்பும், அதை விட்டுவிலகி அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் செல்லும்போது
சர்வவல்லதேவன் நமக்கு எதிராக எழும்புவார். (எண்ணாகமம் 22:23)
சரி! பிலேயாம் தேவசித்தத்தினை விட்டு விலகிச் சென்றான். ஆதலால் அவனை கொன்றுப் போட எதிராளியாக தேவன் உருவின பட்டயத்தோடு நின்றார். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தேவனுடைய தாசனாகிய மோசே என்ன பாவம் செய்தான்? அவனும் அனுமதிக்கப்பட்ட சித்தத்தில்தான் சென்றானா? அப்படி என்றால் அது என்ன? என்பதாய் நீங்கள் கேட்கலாம். உங்கள் ஆதங்கம் புரிகின்றது. இப்பொழுது ஏன் மோசேயை கொன்றுப் போட தேவன் நின்றார்? என்பதனைக் குறித்து விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் என்னுடன் வாருங்கள்.
மோசே தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பதாகவே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சிக்க வேண்டும் என்று மோசேயைக் குறித்து ஒரு பெரியத் திட்டத்தினை பரலோக தேவன் வைத்திருந்தார். இது பரிபூரண சித்தம் ஆகும். அதன்படி அவனை பாதுகாத்து 40 வருடங்கள் எகிப்தின் அரண்மனைகளிலும், 40 வருடங்கள் வனாந்தரத்திலும் உருவாக்கினார். அவனுடைய எண்பதாவது வயதில் முட்செடியில் உண்டாயிருந்த அக்கினியின் நடுவில் தரிசனமாகி, அவனோடு பேசி தன்னுடைய பரலோக பரிபூரணத் திட்டத்தினை வெளிப்படுத்தினார். அவனும் பல சந்தேகங்களை கேட்டான். அதற்கான பதிலையும் தேவன் பொறுமையாக கூறினார்.
ஒரு கட்டத்தில் ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்கு வல்லவன் அல்ல; நான் திக்குவாயும், மந்த நாவுமுள்ளவன் என்று கூறினான். அதற்கு பொறுமையாக கர்த்தர் அவனை நோக்கி, மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும் உண்டாக்கினவர் யார்? ஆதலால் நீ போ ;நான் உன் வாயோடு இருந்து பேச வேண்டியதை உனக்கு போதிப்பேன் என்று சொன்னார். (யாத்திராகமம் 4:11,12)
எவ்வளவு சமாதானம் சொல்லியும் இருதயக் கடினத்திற்கு இடம் கொடுத்த மோசே கடைசியில், ”ஆண்டவரே நீர் அனுப்ப சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும்” என்று சொன்னான்.
மோசேயைதான் சர்வவல்ல தேவன் உருவாக்கினார். அவனை மட்டும்தான் அனுப்ப வேண்டும் என்பது அவருடைய பரிபூரணத் திட்டம். ஆனால், அவனோ யாரையாகிலும் அனுப்பும் என்று கேட்டுக்கொண்டான். இது தேவனுடைய பார்வையில் தகாததாய் காணப்பட்டது. எனவே, மோசேயின் மீது கோபமூண்டவராகி அவனுடைய அண்ணனாகிய ஆரோனை அவனுக்கு துணையாக அனுப்பினார்.
மோசேயும் தன் மனைவி பிள்ளைகளை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்துக்குப் புறப்பட்டு சென்றான். வழியில் ஆரோனை சந்தித்து அவனையும் தன்னோடு கூட்டிச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் சென்றான். இப்படி செல்வது தேவனுக்கு பிடிக்கவில்லை. மோசே அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் செல்லும்போது வழியிலே கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார்.
மோசே எகிப்துக்கு சென்றதினால் தேவன் அவனுக்கு எதிராளியாக வரவில்லை. தேவனுடைய பரிபூரண சித்தமல்லாத நபரைத் தன்னோடு கூட்டிக் கொண்டு செல்ல விரும்பியதால் தேவன் அவனை கொல்லப் பார்த்தார். அப்பொழுது மோசேயின் மனைவி சிப்போராளினிமித்தம் அவன் காப்பாற்றப்பட்டான். எப்படி ஒரு கழுதை பிலேயாமின் மதியீனத்தை உணர்த்தி அவனை காப்பாற்றியதோ, அதேபோல் மோசேயின் மனைவி அவனை காப்பாற்றினாள். (யாத்திராகமம் 4:24-26)
இரண்டு விதமான சித்தங்கள் உண்டு. ஒன்று தேவனுடைய பரிபூரண சித்தம் ஆகும். மற்றொன்று அனுமதிக்கப்பட்ட சித்தம் ஆகும். பரலோக புஸ்தகத்தில் எழுதப்பட்டு பல நூறு வருடங்களுக்கு முன்பாக முன் குறிக்கப்பட்ட சித்தம் பரிபூரண சித்தம் ஆகும். ஆனால், நம் இருதயகடினத்தினிமித்தம் அனுமதி கொடுத்து அனுப்புவது அனுமதிக்கப்பட்ட சித்தமாகும்.
ஒருவன் தேவனுடைய பரிபூரணச் சித்தத்தின்படி சென்றால் யாராலும் அவனை அசைக்க முடியாது. எந்த ஆவியும் தாக்காது. அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் சென்றால் சர்வவல்ல தேவனே எதிராளியாக பட்டயத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பார். தேவனுடைய தாசனாகிய மோசே அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் சென்றான். எனவே, சர்வவல்ல தேவன் பட்டயத்தினால் அவனை கொலைச் செய்யப் பார்த்தார்.
இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! உங்கள்
வழியை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் செல்லும் பாதை தேவனுடைய பரிபூரணத் திட்டமா? அல்லது
அனுமதிக்கப்பட்ட சித்தமா? என்பதனை கவனித்துப் பாருங்கள்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Amen this message is so deep. The Spirit of God has revealed this to u. God bless your Ministries sir!
ReplyDeleteAmen நல்லா ஆழமான கருத்து
ReplyDelete