தவறான வெளிப்பாடு
தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதின் குமாரனாகிய சாலொமோனுக்கு பிரபுக்கள் குலமான ஏழுநூறு
மனையாட்டிகளும் முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்.(1 இராஜாக்கள்
11:3) இஸ்ரவேல் இராஜாக்களில் அதிகமான பெண் சாதிகளைக் கொண்ட இராஜா இவன்தான். எப்படி இவ்வளவு மனையாட்டிகள் வந்தார்கள்? மறுமனையாட்டிகளின் தொகையும் அதிகமாக இருக்கக் காரணம் என்ன? என்று நாம் யோசிப்போம்.
இந்த தீர்க்கதரிசன செய்தியில் சாலொமோன்
இராஜாவுக்கு அதிகமான
மனையாட்டிகள் மற்றும் மறுமனையாட்டிகள் வரக்காரணம் என்ன?
என்பதைக் குறித்து கொஞ்சம் விரிவாக
ஆழ்ந்த இரகசியங்களை தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.
பரலோக தேவனிடத்திலிருந்து விபச்சார வேசித்தனங்களைக் குறித்து அதிகமான வெளிப்பாடுகளை பெற்றவன் சாலொமோன் ஆவான்.
அவனுடைய தகப்பனாகிய தாவீது விபச்சாரத்தில் விழுந்து பெரும் பாதிப்புகளை சந்தித்தான்.(2
சாமுவேல் 11) எனவே,
தகப்பனைப் போல் பிள்ளையும் பாவத்தில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக விபச்சாரம்,
வேசித்தனம் போன்ற பாலியல் பாவங்களைக் குறித்து அதிக வெளிப்பாடுகளை அவனுக்கு
கொடுத்து, அதைக்
குறித்து மிக ஆழமாகவும் கற்றுக்கொடுத்தார்.
அவனும் இருதயத்தின்
ஆழத்தில் கற்றுக்கொண்டான். அதைத்தான் நீதிமொழிகள் புத்தகத்தில்
பல அதிகாரங்களில் எழுதியுள்ளான்.
நாமும் வாசித்து இருக்கின்றோம்.(நீதிமொழிகள் 2,4,5,6,7)
சாலொமோனுக்கு மற்றொரு சுபாவமும் இருந்தது. அவனுடைய
கண்கள் இச்சித்தவைகளில் எதையும் தடைப் பண்ணமாட்டான். இருதயத்திற்கு சந்தோஷமான
எந்த ஒன்றையும் வேண்டாம் என்று விலக்க மாட்டான்.
இதற்காக மிக அதிகமாக பிரயாசப்படுவான். ஒரு பெண்ணைப் பார்த்து
இச்சித்தாலே போதும்,
உடனே அவளை எப்படியாவது தனக்கு எடுத்துக்கொள்ள துடிப்பான். கண்களின் இச்சையைத் தடைப் பண்ணமாட்டான் . (பிரசங்கி
2:10)
விபச்சாரம் வேசித்தனம் பாவம் என்று நன்றாக தெரியும்.
ஆனால் இன்னொரு பக்கம் இச்சைகளை நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு துடிப்பு.
என்ன செய்வது என்று யோசித்தான். அவனை வீழ்த்த
நினைத்த பிசாசு இந்த நேரத்தில்தான் ஒரு தவறான திட்டத்தினை
வெளிப்பாடாக அவனுக்குள்
திணித்துவிட்டான். மனைவியாக்கிக் கொள்ளும் திட்டம் என்பதுதான் அந்த திட்டம்.
இந்தத் திட்டத்தின்படி யாரையெல்லாம்
அவன் இச்சிக்கின்றானோ அவர்களை
முதலில் தனக்கு மணவாட்டிகளாகவோ அல்லது மறுமனையாட்டிகளாகவோ மாற்றிக்கொள்வான். பின்பு, அவர்களோடு இன்பத்தினை அனுபவிப்பான். இப்படி செய்வதால் நியாயபிரமாணத்தின்படி அவனுக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராது. இது விபச்சார,
வேசித்தன பாவத்தில் சேராதே என்று நினைத்தான்.
கண்களினால் இச்சித்த எல்லா
பெண்களையும், வயது வித்தியாசமின்றி, கோத்திர பாகுபாடின்றி தனதாக்கிக்கொண்டான். இதனால், மனையாட்டிகளின்
எண்ணிக்கையும் மறுமனையாட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. வயதான காலத்திலும்
ஏழுநூறு மனையாட்டிகளும் முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்.
இப்படித்தான் சாலொமோனுக்கு மனையாட்டிகள் மற்றும் மறுமனையாட்டிகள் அதிகமாக வந்தார்கள்.
ஆனால், அவர்களே அவனுக்கு இடறலாக மாறினார்கள். கடைசியில் அவனுடைய
இருதயத்தினை வழுவிப்போகும்படி செய்தார்கள். அந்நிய தேவர்களை பின்பற்றும்படி
சாயப்பண்ணினார்கள். தேவனை விட்டு பிரிந்துச் சென்று மோவாபின் அருவருப்புகளுக்கு
மேடைகளை கட்டினான். .(1 இராஜாக்கள்
11)
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன
செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment