தாம்பத்திய வாழ்க்கையில் பிசாசின் தந்திரம்

உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு என்று நீதிமொழிகள் 5ஆம் அதிகாரம் 18 ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். இதை ஞானத்தின் வரத்தைப் பெற்ற சாலொமோன் பரிசுத்த ஆவியானவர் துணையுடன் எழுதியுள்ளான். அதேபோல் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலும் புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையை செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்கு செய்யக்கடவள் என்று 1 கொரிந்தியர் 7 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தில் கூறியுள்ளான். அதாவது கணவன் மனைவிக்குள்ளான தாம்பத்ய உறவை கடமை என்று கூறியுள்ளான். பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைய கடமைகள் உள்ளன. அவைகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். கடமை என்றால் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம் என்று வாய்ப்புகள் கொடுக்கப்படாது. அவைகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவன் பூரண மனிதனாக இருப்பான். அதேப்போல் கணவன்-மனைவிக்குள்ளான தாம்பத்ய வாழ்க்கை என்பது அத்தியாவசிய கடமையாகும். அதாவது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் சென்றவர்களுக்கு இது அத்தியாவசியமான ஒன்றாகும். ஸ்திரீயை தொடாமல...