நிந்தை இல்லா ஆசீர்வாதம்




    பரிசுத்த வேதத்தில் சிம்சோனின் பெற்றோர்களைக் குறித்து தியானித்திருப்போம். தகப்பன் பெயர் மனோவா. தாயின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் ஜெபிக்கின்றவர்கள். இவர்களுக்கு சிம்சோனின் பிறப்பு ஒரு அதிசயமாகும். பரலோக தேவன் இந்த அதிசயத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு முன்பாக மலடி என்ற பட்டமும் அவனின்  தாய்க்கு கிடைத்தது. ஆசீர்வாதமும் அதிசயமும் கிடைத்தது. அதற்கு முன்பாக வேதனையும், வருத்தமும், நிந்தனையும் இருந்தது. கொஞ்சம் வருடங்களுக்கு முன்பாக அந்த ஆசீர்வாதம் கிடைத்திருந்தால், அந்த அதிசயம் நடந்திருந்தால், சொந்தங்கள் இனபந்துக்கள் மத்தியில் மலடி என்கின்ற பட்டம் அவளுக்கு கிடைத்திருக்காது. அதனால் வரும் வேதனையும் வருத்தமும் கொஞ்சம் கூட இருந்திருக்காது. ஏன் அவளுக்கு கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக இந்த அற்புதம் நடக்கவில்லை? வேதனை கிடைத்த பின்பு ஆசீர்வாதம் கிடைப்பதற்கு என்ன காரணம்? நிந்தையும் ஆசீர்வாதமும் சேர்ந்து கிடைக்க என்ன காரணம்? என்ற எண்ணங்கள் எனக்குள் மேலோங்கி காணப்பட்டது. இதை பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் கொஞ்சம் ஆழமாக பலமுறை தியானித்தேன். சில ஆழ்ந்த இரகசியங்களை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தி காண்பித்தார். அதைதான்  இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்கப்போகின்றோம். ஜெபத்துடன் வாசியுங்கள் பரலோக தேவன் உங்களோடு பேசுவாராக.

   என்னுடைய பெயர் T. வினோத் சாமுவேல். பரலோக தேவன் தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற இந்த ஊழியத்தினை கொடுத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ஊழியத்தினை செய்து வருகின்றேன். இந்த ஊழியத்தின் மிக முக்கியமான தரிசனமே வேதத்தின் மிக ஆழமான இரகசியத்தினை தேவபிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவதும், அவர்களுக்கு  ஜெபித்து ஆலோசனைகளைக் கொடுப்பதும் ஆகும். இந்த செய்தியினை வாசிக்கின்ற உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும், ஆலோசனைகள் தேவை என்றாலும் என்னை தொடர்புக் கொள்ளலாம். தேவ சித்தத்தின் படி உங்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு பதில் சொல்ல ஆயத்தமாக இருக்கின்றேன். தொடர்சியாக செய்திக்குள் செல்லலாம். முழு கவனத்துடன் வாசியுங்கள்.

       மனோவாக்கும் அவனுடைய மனைவிக்கு இடையே பிறக்கும் குழந்தையை குறித்து பரலோக தேவன் மிகப் பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். இன்றும் தேவசித்ததின்படி பூமியில் பிறக்கப்போகும் குழந்தைகளைப்பற்றி பல திட்டங்களை வைத்துள்ளார். அப்படிப்பட்டவர்களுக்கு முதலில் அந்த திட்டத்தினை வெளிப்படுத்தின பின்பே கர்ப்பத்தின் கனி என்ற ஆசீர்வாதத்தினை கொடுக்க முடியும். வெளிப்படுத்தாமல் கொடுக்க முடியாது. ஏனென்றால் தேவதரிசனத்தை அறியாதவர்களாக இருப்பார்கள். இதனால் பிரச்சனைகள் வரும். அந்த ஆவிக்குரிய திட்டங்களை வெளிப்படுத்த தரிசனங்கள், சொப்பனங்கள் மற்றும் கனவுகளைதான் பரலோக தேவன் பயன்படுத்துவார். வெளிப்படுத்தப்படும் தரிசனங்களை புரிந்துக்கொண்டவர்களுக்கு உடனே அற்புதங்கள் நடக்கும். மற்றவர்களுக்கு தாமதமாகும்.

     சிம்சோனின்  பெற்றோர்கள் வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதிலும், புரிந்துகொள்வதிலும் கொஞ்சம் குறைவு உள்ளவர்களாகவே இருந்தார்கள். எனவேதான் அவர்களுக்கு உடனே குழந்தை பாக்கியத்தினை கொடுக்க முடியவில்லை. ஆவிக்குரிய அனுபவங்களில் குறைவு உள்ளவர்களாக இருந்ததால் வருத்தம் வருவதற்கு முன்பாகவும், வேதனை வருவதற்கு முன்பாகவும், மலடி என்ற பட்டம் கிடைப்பதற்கு முன்பாகவும் ஆசீர்வாதத்தை கொடுத்து அவர்களை கனப்படுத்த முடியவில்லை. நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அனுபவத்திலும் குறைவுள்ளவர்களாக இருப்போமானால் உடனே தேவனிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ள முடியாது. அதனிமித்தம் வருத்தங்கள் மற்றும் நிந்தனைகள், அவப்பெயர்கள் வரத்தான் செய்யும். சரி சிம்சோனின் பெற்றோர்களிடம் காணப்பட்ட குறைபாடுகள் என்ன என்பதாய் யோசிக்கலாம். அதை தொடர்சியாக பார்ப்போம்.

யார் பேசுகின்றது என்பதனை  அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள் :

           கர்த்தருடைய தூதனானவர் சிம்சோனின் தாய்க்கு தரிசனமாகி பரலோக தேவனுடைய திட்டங்களை வெளிப்படுத்துகின்றார். ஆனால், அவளோ தூதனானவர் என்பதனை உணராமல் அது தேவனுடைய மனுஷன் ஒருவர் என்பதாய் அறிந்து கொண்டாள். அதேபோல் மனோவாவும் கர்த்தருடைய தூதன் என்பதனை அறியாமல் தேவனுடைய மனுஷன் என்றே விளங்கி கொள்கின்றான். பல்வேறு ஆவிக்குரிய வெளிப்பாடுகள் நமக்கு கிடைக்கும். அதை கொடுக்கின்றது யார் என்பதனை தெளிவாக அறிந்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த வெளிப்பாடுகள் தாமதமில்லாமல் உடனே வாழ்க்கையில் நிறைவேறும்.

   சிம்சோனின் பெற்றோர்களுக்கு இதற்கு முன்னமே நிறைய வெளிப்பாடுகள் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்திருந்தார்கள். எனவே அது நிறைவேறவில்லை. இந்த சம்பவத்தில்தான் அதை புரிந்துக் கொண்டார்கள். முதலில் தேவனுடைய மனுஷன் என்றுதான் நினைத்தார்கள்; ஆனால், முடிவில் தேவனுடைய தூதனானவர் என்று புரிந்துக் கொண்டார்கள். எனவே உடனே அதிசயம் நடந்தது.  அற்புதத்தினையும் பெற்றுக் கொண்டார்கள்.

    ஆவிக்குரிய அனுபவங்கள் பலவகை உள்ளன. பல்வேறு வழிகளில் பரலோக தேவன் பேசுவார். ஊழியர்கள் மூலமாகவும், தூதர்கள் மூலமாகவும், பரிசுத்தவான்கள் மூலமாகவும், தூதனானவர் மூலமாகவும், பரிசுத்த ஆவி மூலமாகவும், பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும், சில நேரங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நேரடியாக வந்தும், சில நேரங்களில் பரலோக பிதாவாகிய தேவன் வந்தும் பேசுவார். அப்படி நம்மிடம் பேசும்போது, பேசுகின்றவர்கள் யார் என்பதனை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். தூதர்கள் பேசும்போது ஊழியர்கள் என்றும், ஊழியர்கள் மாம்சத்தில் பேசும்போது, அது பரிசுத்த ஆவி என்றும், பரிசுத்த ஆவி பேசும்போது அதை பரிசுத்த ஆவியானவர் என்றும் தவறாக புரிந்துக் கொள்ளக்கூடாது. அப்படி புரிந்துக் கொள்ளும் பொழுது அவர்கள் சொன்ன காரியம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம்.

       இதை வாசிக்கின்ற நீங்களும் நெடுநாள் ஆசீர்வாதத் தடையுடன் இருக்கலாம். ஒரு கர்ப்பத்தின் கனிக்காக காத்துக்கொண்டிருக்கலாம். உங்கள் ஜெபத்தினையும் இருதய அங்கலாய்ப்பையும் கேட்டு பலமுறை பரலோக தேவன் உங்களிடம் பேசி இருப்பார். ஆனால், பேசுகின்றவர் யார் என்பதனை அறியாமலும் புரிந்துக் கொள்ளாமலும் இருந்தால் அது உங்கள் வாழ்க்கையில் நிறைவேறாது.  தொடர்ந்து தடையாகவே இருக்கும். எனவே, உங்களிடம் பேசுகின்றவர் யார் என்பதனை முதலில் அறிந்துக் கொள்ளுங்கள். அடைக்கப்பட்ட வாசல்கள் திறக்கப்படும். தடைகள் மாறும்.

 

பேசியதை ஆழமாக புரிந்துக்கொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள் :

      இரண்டாவதாக தூதனானவர் பேசி சொன்ன வார்த்தைகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக  இருந்தார்கள். சிம்சோனின் தாய்க்கு தரிசனமாகிய தூதனானவர்: இதோ, பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனை பெறுவாய். ஆதலால், நீ திராட்சை இரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும் தீட்டானது ஒன்றும் புசிக்காதபடிக்கும் எச்சரிக்கையாக இரு. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனை பெறுவாய்; அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படலாகாது. அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கத் தொடங்குவான் என்று சொன்னார். (நியாயதிபதிகள் 13). தூதனானவர் சொல்வதை நன்றாக கேட்ட சிம்சோனின் தாய், இதில் பேசியது தூதரானவர் என்பதை அறியவில்லை. தேவனுடைய மனுஷன் ஒருவன் சொல்வதாக நினைத்தாள். 

         பின்பு தன் கணவனாகிய மனோவாவிடம் சென்று தேவனுடைய மனுஷன் ஒருவர் வந்தார் என்றும், அவருடைய சாயல் தேவதூதரின் சாயலைப்போல் மகா பயங்கரமாக இருந்தது என்றும் கூறியவள், அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே சொன்னாள். இங்குதான் நன்றாக கவனித்து வாசிக்க வேண்டும். இதோ, நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனை பெறுவாய்; ஆதலால் நீ திராட்சை இரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும் தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு. என்று கூறினாள். ஆனால்,தேவனுடையதூதனானவர் எச்சரிக்கையாக இரு என்று கூறினார். இவள் அதை உள்வாங்கவில்லை. வெறும் இரு என்ற வார்த்தையை மட்டுமே சொல்கின்றாள். எச்சரிக்கை என்பதனை மறந்துவிட்டாள். அடுத்து இந்த பிள்ளை பிறந்தது முதல் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் இருப்பான் என்று சொன்னாள்.  ஆனால், தேவனுடைய தூதனானவர் மரணநாள் என்ற வார்த்தையை சொல்லவில்லை. இவள் அதை கூடுதலாக தன் கணவரிடம் சொன்னாள். இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பதுதான் அந்தப் பிள்ளையை குறித்த மிக முக்கியமான தரிசனம் ஆகும். ஆனால், அதை அவள் உள்வாங்கவில்லை. அதனை சொல்ல  மறந்துவிட்டாள். இப்படி அவளிடம் கொடுக்கப்படுகின்ற முக்கியமான வார்த்தைகளை மறக்கின்றவளாக இருந்தாள். எனவேதான் அவளால் அந்த  ஆசீர்வாதத்தினை உடனே பெற்றுக்கொள்ள முடியவில்லை.

         பரலோக தேவன் ஏதோ ஒரு வழியில் உங்களிடம் பேசும் வார்த்தைகளை உன்னிப்பாக ஆழமாக கவனியுங்கள். அதை உடனே ஒரு நோட்டில் மறக்காமல் எழுதி வையுங்கள். அதை திரும்ப திரும்ப தியானியுங்கள். வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளை கவனிப்பதில் குறைபாடுகள் இருக்கும் போது, ஆசீர்வாதங்கள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படலாம். எனவே, முழு கவனத்துடன் வெளிப்பாடுகளை கவனிப்பேன் என்று தீர்மானம் எடுங்கள். பரலோக தேவன் வெளிப்பாடுகள் மூலமாக உங்களிடம் பேசி தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றுவார்.


வெளிப்படுகளைக் குறித்து சரியான தெளிவு இல்லை:

       மூன்றாவது வெளிப்பாடுகளை குறித்து சரியான தெளிவு இல்லாதவர்களாக இருந்தார்கள். சிம்சோனின் தாய்க்கு  ஓரளவு தெளிவு இருந்தது. ஆனால், அவனுடைய தகப்பனாகிய மனோவாவுக்கு  இந்த தெளிவு இல்லை. பேசியது  கர்த்தருடைய தூதன் என்பதை அறிந்து, தன் மனைவியை பார்த்து சாகவே சாவோம் என்று கூறுகின்றான். தரிசனம் பார்த்தாலே  அதாவது தேவதூதன் தோன்றினாலே செத்து விடுவோம் என்றும், நம்மைக் கொலை செய்வதற்காகதான் தூதனை அனுப்புகின்றார்  என்றும் வெளிப்பாடுகளைப் பற்றி தாறுமாறான தவறாக புரிந்திருந்தான்.  இப்படிப்பட்ட தவறான புரிதல்கள் பல வருடங்களாக அவனுக்குள் இருந்தது. இதனால் பரலோக தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பி திட்டங்களை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் அவர்களை உடனே ஆசீர்வதிக்க முடியவில்லை.

     இன்றைய நாட்களிலும் அநேக தேவனுடைய பிள்ளைகள் வெளிப்பாடுகளைக் குறித்து சரியான புரிதல் இல்லாமல் இருக்கின்றார்கள். அதை எப்படி கையாள வேண்டும் என்று தெரிவதில்லை. ஒன்று அதைக் கண்டு மிக அதிகமாக பயப்படுகின்றார்கள் அல்லது அதை நம்பாமல், விசுவாசமில்லாமல் அசட்டைப் பண்ணுகின்றார்கள். அதன் காரணமாக சில ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். அது நெடுநாள் ஆசீர்வாதத் தடையாக மாறுகின்றது.

        வெளிப்பாடுகளை குறித்த சரியான புரிதல்கள் வரும்போது நிச்சயமாக அற்புதம் நடக்கும்.  இப்படிப்பட்ட மூன்று காரியங்கள் சிம்சோனின் பெற்றோர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டதால் ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றாலும் அதற்கு முன்பாக நிந்தைகளையும், அவமானங்களையும் பெற வேண்டியதாக இருந்தது. இப்படிப்பட்ட குறைவுகள் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கப்படும் பொழுது ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடி வரும் நிந்தைகள் அவமானங்கள் இல்லாமல் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்கள். நிந்தை இல்லா ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.ஆமென்.


 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here 

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

 

 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

வரன் தேடுபவர்களுக்கு..

அழுத்தம் வேண்டாம்

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்