பிசாசின் சதித்திட்டம்
பெலிஸ்தியர்களை வீழ்த்த வேண்டும் என்ற
நோக்கத்தில் சிம்சோனை பிறக்கச் செய்த தேவன் அவனை ஆசீர்வதித்தார். அவன் வளர்ந்து பெரியவனானான்.
கர்த்தருடைய ஆவியானவர் ஒரு மனிதனை ஏவுவது மிகப்பெரிய சிலாக்கியம். அவன் தான் பாளையத்தில்
இருக்கையில் அவனை அவர் ஏவத்துவங்கினார். அவன்
பெலிஸ்தியர்களின் தேசமான திம்னாத்துக்கு சென்றான். அங்கே அவர்களோடு யுத்தம் செய்து
பரலோக தேவனுடைய சித்தத்தினை நிறைவேற்ற வேண்டியவன் பெலிஸ்தியர்களின் குமாரத்திகளில்
ஒரு பெண்ணைக் கண்டு அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய வீட்டிற்கே
திரும்ப வந்து விட்டான். தன் பெற்றோர்களிடம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்
என்றும், அவள் என் கண்ணுக்கு பிரியமானவள் என்றும் கூறுகின்றான்.
கர்த்தருடைய ஆவியானவர் தன்னுடைய திட்டத்திற்காக அனுப்பி இருக்க அவன் திரும்ப வந்ததற்கான காரணம் என்ன? அப்படித் திரும்ப வரும்போது ஆவியானவர் ஏன் அவனைத் தடுக்கவில்லை? இதற்குள்ளாக இருக்கும் பிசாசின் தந்திரங்கள் என்னென்ன? கொஞ்சம் தியானிக்கலாம். இந்த நாட்களிலும் அநேகர் இப்படி தேவ அழைப்பு இருந்தும், பரலோக சித்தத்தினை விட்டு பின்வாங்கிச் செல்கின்றார்கள். அதற்கான காரணங்கள் என்ன? என்பதனையும் அறிந்துக் கொள்ளலாம்.
பிசாசு தந்திரமுள்ளவன் ஆவான். தேவனுடைய
பிள்ளைகளை வீழ்த்த சதித் திட்டங்களை தீட்டுவான். அதிலும் பலத்த பாதுகாப்பில் இருக்கும்
தேவனுடைய பிள்ளைகளை வீழ்த்த முன்கூட்டியே சதித் திட்டம் தீட்டுவான். இந்த சம்பவத்தில்
சிம்சோன் கர்த்தருடைய ஆவியானவரால் நடத்தப்படுகின்றான். ஆவியானவர் நடத்துகின்ற அனுபவம்
ஒன்று உள்ளது. ஆவி நடத்துகின்ற அனுபவம் ஒன்று உள்ளது. இரண்டும் வெவ்வேறானது.
ஆவியானவரால் நடத்தப்படுகின்ற அனுபவம் உன்னதமானது. அப்படி ஆவியானவரால் நடத்தப்படுகின்ற மனிதனை சீக்கிரத்தில்
யாராலும், எந்த மனிதனாலும், எந்த பிசாசாலும் வீழ்த்த முடியாது. ஏனென்றால், பரலோகத்தின்
உச்சகட்ட பாதுகாப்பு இருக்கும். இது பிசாசுக்கு மிக நன்றாக தெரியும்.
எனவே, சிம்சோனை வீழ்த்த ஒரு புது காரியத்தை செய்கின்றான். முதலில் சிம்சோனை
நன்கு ஆராய்ந்து அவனைப்பற்றியும், அவனுடைய சூழ்நிலைகளையும் அறிந்துக் கொள்கின்றான்.
அவன் திருமணத்திற்காக காத்திருக்கும் வாலிபன்.
திருமண ஆசை இருக்கின்றது என்பதனை அறிந்து, அதிலே அவனை வீழ்த்தலாம் என்று திட்டம்
தீட்டுகின்றான். அதன்படி, ஒரு அழகான பெலிஸ்தர்களின் குமாரத்தியை அவனுக்கு முன்பாக கொண்டு
வந்து நிறுத்துவதும், அவளைப் பார்த்ததும் சிம்சோனுக்கு திருமண ஆசை வரும் அளவுக்கு அவளுக்கு
அழகையும், கவர்ச்சியையும் கொடுப்பதும், அதனால் அவன் அவள் மேல் மயங்கி பின்வாங்கி மறுபடியும் தன் இடத்திற்கே செல்வதும்
பிசாசின் சதித்திட்டமாகும். இதன்படி ஒரு அழகான பெண்ணை தேர்ந்தெடுக்கின்றான். தன்னை
கவர்ச்சிப்படுத்த வேண்டும் என்ற ஆசையையும் கொடுக்கின்றான். பரிசுத்தவானை வீழ்த்தும்
அளவுக்கு கவர்ச்சி அவளுக்குள் வருகின்றது.
கர்த்தருடைய ஆவியானவரின் வழிநடத்துதலின்படி சிம்சோன் திம்னாத்துக்கு வந்தபோது,
தன்னுடைய சதித்திட்டத்தின்படி அந்த அழகானப் பெண்ணை அவனுக்கு முன்பாக கொண்டு வந்து நிறுத்துகின்றான். அவளைப் பார்த்ததும் சிம்சோனுக்குள் அவள் மீது ஆசை
வருகின்றது. தன்னுடைய அழைப்பையும் மறந்து அவளை திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினான்.
எனவே, தேவத்திட்டத்தினை விட்டு பின்வாங்கி திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய
வீட்டிற்கே திரும்ப வந்துவிட்டான். இது சிம்சோனின் முதல் நூதன பின்மாற்றமாகும்.
கர்த்தருடைய ஆவியானவர் அவனை வழி நடத்தியது
உண்மைதான். உச்சக்கட்ட பாதுகாப்பு அவனுக்கு இருந்ததும் உண்மைத்தான். அப்படி இருந்தும்
பிசாசின் முன்கூட்டிய சதித்திட்டம்
இருந்ததால், மிக எளிதாக விழுந்து விட்டான். அவனுடைய மனம் மிக எளிதாக மாறியது. இதனால் பின்மாற்றம் அவனுக்குள் ஏற்பட்டு தேவனுடைய
திட்டத்தினை விட்டு விலகினான்.
இந்த நாட்களிலும் தேவஆவியானவர் அநேகரை வழிநடத்துகின்றார். ஆனால் அவர்களை வீழ்த்த
பிசாசின் முன்கூட்டிய சதிதிட்டம் இருப்பதினாலும், அதைக்குறித்து தெளிவு இல்லாமல் இருப்பதினாலும்
மிக எளிதாக அதற்குள் விழுந்து விடுகின்றார்கள். தன்னுடைய அழைப்பை மறந்து பின்வாங்கி
செல்கின்றார்கள். ஆதலால் தேவனுடைய பிள்ளைகள் பிசாசின் சதித் திட்டங்களை முன்கூட்டியறிந்து, அதை முறியடிக்க வேண்டும் அப்பொழுதுதான் விழுந்து
விடாமல் தேவதிட்டத்தினை நிறைவேற்ற முடியும்.
சரி எப்படி பிசாசின் சதித்திட்டத்தினை அறிந்துக் கொள்ளலாம்? எப்படி அதை மேற்கொள்ளலாம்?
என்பதாய் நீங்கள் கேட்பீர்கள். ஒரு காரியத்திற்காக
ஆவியானவர் உங்களை வழிநடத்தும்போது அல்லது திட்டங்களைத் தரும்போது, அதில் ஏதாவது பிசாசின் சதித்திட்டங்கள் இருக்கின்றதா? என்பதை தேவசமூகத்தில் காத்திருந்து கேட்டுத் தெரிந்துக்
கொள்ள வேண்டும். அப்படி சதி திட்டங்கள் இருந்தால்
அதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே
முறியடித்து ஜெபிக்க வேண்டும். ஒருவேளை இந்த
சதித் திட்டங்களை குறித்த வெளிப்பாடுகள் இல்லையென்றால்,
பொதுவாக எனக்கு விரோதமாக இருக்கின்ற எல்லா சதி திட்டங்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தினாலே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே முறியடிக்கிறேன் என்று முன்கூட்டியே
ஜெபம் செய்து, அந்தப் பலவானை கட்ட வேண்டும். அப்பொழுது பிசாசின் எந்தவிதமான சதித்திட்டங்களும்
நம்மை தொடாதபடிக்கு பரலோக தேவன் நம்மை பாதுகாப்பார்.
பிசாசின் சதித்திட்டங்களைக் குறித்து நமக்கு வெளிப்பாடுகள் கிடைத்தாலே போதும், பாதி ஜெயம் எடுத்து விட்டோம். மீதி நாம் செய்கின்ற
அறிக்கையின் நிமித்தம் ஜெயம் எடுப்போம்.
எனவே, தேவனுடைய பிள்ளைகள் இந்த காரியத்தில் நிர்விசாரமாகவும், அசட்டையாகவும் இருக்காமல், கண்ணும் கருத்தாக இருக்கும்போது, பிசாசை
எளிதாக ஜெயம் எடுக்கலாம். பின்வாங்காமல் பரலோக தேவனுடைய திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment