நூதன பின்மாற்றம்
சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை
எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும்,
பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும். நூதன பின்மாற்றம் என்ற தலைப்பில் உள்ள தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க
லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களையும்
உங்கள் குடும்பத்தையும் மத்தேயு 4:15-ன் படி ஆசீர்வதித்து
உயர்த்துவாராக. இந்த செய்தி
தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உள்ளது. உங்களுக்கு தேவையான
மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும்.
பரலோக ஈவை
ருசிப்பார்த்தவர்கள் பின்வாங்கி மறுதலித்துப்போனால் அவர்களை புதுப்பிக்க
கூடாத காரியம் என்று சத்திய வேத வசனங்கள் கூறுகின்றது (எபிரேயர் 6:4-6). இன்றைய
காலத்திலும் அனேக பின்மாற்றக்காரர்களை சபைகளிலும், ஐக்கியங்களிலும் பார்க்க
முடிகின்றது. சில பின்மாற்றங்களை நேரில் பார்த்த உடனே கண்டுபிடித்துவிடலாம், சில
பின்மாற்றங்களை உடனே கண்டுபிடிக்க முடியாது. இதனை நூதன பின்மாற்றம் என்று
கூறுகின்றோம். இந்த தீர்க்கதரிசன செய்தியில் நூதன பின்மாற்றத்தினைக் குறித்து
விரிவாக தியானிக்கப்போகின்றோம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். பரிசுத்த
ஆவியானவர் உங்களுடன் பேசுவார். நிறைய ஆவிக்குரிய இரகசியங்களை அறிந்துகொள்வீர்கள்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும்
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன
வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
சிம்சோனைக்
குறித்து நியாயாதிபதிகள் 13-16-ம் அதிகாரங்களில் வாசித்திருப்போம். இவனைக்
குறித்து பரலோகம் மிகப்பெரிய திட்டத்தினை வைத்திருந்தது. பெலிஸ்தரின் கைகளுக்கு
நீங்கலாக்கி இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு இரட்சிக்க வேண்டும் என்பது அந்த திட்டம்.
தாயின் கர்பத்தில் உருவாகுவதற்கு முன்பு அந்த திட்டத்தினை அவனுடைய பெற்றோர்களுக்கு
சர்வ வல்ல தேவன் தம்முடைய தூதனை அனுப்பி அறிவித்தார். பிள்ளை வளர்ந்து பெரியவன்
ஆனான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
பரலோக திட்டத்தின்படி அவனை பயன்படுத்துவதற்கான வேளை
வந்தது. அவன் தானின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை
ஏவத்துவங்கினார். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி திம்னாத்துக்கு போனான். அங்கே
பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு அழகான பெண்ணைக் கண்டு, இச்சைக்கு இடம் கொடுத்து,
மறுபடியும் தன் தகப்பன், தாயினிடத்திற்கு திரும்பி வந்துவிட்டான். இதைக்குறித்து
கண்களின் இச்சையின் வலிமை என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன
செய்தியில் விரிவாக தியானிக்கலாம். இந்த செய்தியை வாசிக்கவில்லையென்றால் இங்கே
கிளிக் செய்து வாசியுங்கள். Click here
சிம்சோன் கண்களுக்கு பிரியமான அந்த பெண்ணைத்தான்
திருமணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் பிடிவாதமாக இருந்தான். அவனுடைய பெற்றோர்களே
வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. அப்படியே அவனும் அவனுடைய பெற்றோர்களும்
திம்னாத்துக்கு புறப்பட்டார்கள். எதற்கு சென்றார்கள்? பெலிஸ்தரின் குமாரத்தியை
சிம்சோனுக்கு திருமணம் செய்துவைக்க சென்றார்கள். பெலிஸ்தரின் பாளையத்திற்கு
சென்று, அவர்களோடு யுத்தம் செய்து, இஸ்ரவேல் ஜனங்களை இரட்சித்து மீட்க வேண்டிய
சிம்சோன் இப்பொழுது பெலிஸ்தரின் குமாரத்தியை திருமணம் செய்ய செல்கின்றான். யுத்தம்
செய்யவேண்டியவன் அழகுக்கு அடிபணிந்து மணமகன் கோலத்தில் கைதியாக செல்கின்றான்.
ஏன் சிம்சோனை தேவன் தடுக்கவில்லை என்பதாய்
யோசிக்கலாம். கிருபையின் தேவனோ அப்படியாவது பெலிஸ்தரிடத்தில் ஏதாவது குற்றத்தினை
கண்டுபிடிக்க, ஏதாவது முகாந்திரம் கிடைக்கும் என்பதற்காக அவனை அனுமதித்தார்.
அவனும் சென்றான். இப்பொழுது அவனுக்கு விரோதமாக கெர்ச்சிக்கின்ற பாலசிங்கம் ஒன்று
வந்தது. அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கியது. தன் கையில் ஒன்றும்
இல்லாதிருந்தும் ஒரு ஆட்டுக்குட்டியைப்போல கிழித்துப்போட்டான்.
இதில் கவனிக்க வேண்டிய காரியம் ஒன்று உள்ளது. முதலில்
கர்த்தருடைய ஆவியானவர் அவனை நடத்தினார். அவன் கீழ்ப்படியாமல் இச்சைக்கு இடம்
கொடுத்ததின் நிமித்தம் இப்பொழுது கர்த்தருடைய ஆவி அவனை நடத்துகின்றது. கர்த்தருடைய
ஆவியானவர் வேறு … கர்த்தருடைய ஆவி வேறு … ஆவியில் தொடங்கி மாம்சத்தில் முடிவது
பின்மாற்றமாகும்.(கலாத்தியர் 3:3) அதேபோல் கர்த்தருடைய ஆவியானவரால் தொடங்கப்பட்டு
கர்த்தருடைய ஆவியால் நடத்தப்படுவது நூதன பின்மாற்றம் ஆகும்.
இதை
யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. பார்ப்பதற்கு பரிசுத்தவான்கள் போல
தெரியும். வேதவாசிப்பு, ஜெபம், ஆராதனை எல்லாம் இருக்கும். ஆனாலும் தேவாதி தேவனுடைய
பரிபூரன திட்டம் இருக்காது. எனவே, தேவனுடைய பிள்ளைகள் இப்படிப்பட்ட காரியங்களை
குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் யாரால் நடத்தப்படுகின்றோம்
என்பதனை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
(பிதா,
குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம்.
இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள்.
அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment