கண்களின் இச்சையின் வலிமை
சகல துதி, கனம், மகிமை,
புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும்.
கண்களின் இச்சையின் வலிமை
என்ற தலைப்பில் உள்ள
தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்
சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல
தேவன் உங்களை யோவேல் 2:28 -ன் படி ஆசீர்வதித்து உயர்த்துவாராக. இந்த செய்தி தமிழ்,
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உள்ளது. உங்களுக்கு தேவையான
மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். ENGLISH or HINDI
இந்த பாவ உலகில் கண்களின்
இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை மிகுந்து காணப்படுகின்றது (1யோவான்2:16). ஒவ்வொரு பாவத்திற்கு ஒரு வலிமை உண்டு. அதேபோல் கண்களின் இச்சைக்கும் ஒரு
வலிமை உள்ளது. அது ஆவிக்குரிய வாழ்க்கையிலும், உலகப்பிரகாரமான வாழ்க்கையிலும்
அதிகமான பாதிப்புகளை கொண்டுவரும். தேவனுடைய பிள்ளைகள் கண்களின் இச்சைக்கு இடம்
கொடுத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? எப்படி கண்களின் இச்சை தேவனுடைய
பிள்ளைகளை தேவனுடைய திட்டத்தில் இருந்து பிரிக்கின்றது? போன்ற வேத இரகசியங்களை இந்த
தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிக்க போகின்றோம். ஜெபத்துடன் இதை தொடர்ச்சியாக
வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார். இந்தச் செய்தி உங்களுக்கு
பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக
இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.
பரிசுத்த வேதத்தில் சிம்சோனை குறித்து நியாயாதிபதிகள் 13-16
அதிகாரங்களில் வாசிக்கலாம். சிம்சோன் தாயின் கர்பத்தில் தோன்றுவதற்கு முன்னே பரலோக
தேவன் அவனைக்குறித்து பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். இஸ்ரவேல் ஜனங்களை
பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான் என்பது அந்த பெரிய திட்டம்
(நியாயாதிபதிகள் 13:5) அதன்படி மலடியாக இருந்த சிம்சோனின் தாய் சிம்சோனை
பெற்றெடுத்தாள். சிம்சோன் வளர்ந்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார் (நியா 13:24).
சர்வ வல்ல தேவன் தன்னுடைய
ஆதி திட்டத்தின்படி சிம்சோனை பயன்படுத்தும் நாட்கள் வந்தது. அவன் சோராவுக்கும்
எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர்
அவனை ஏவத்துவங்கினார் (நியா 13:25). சிம்சோனும் திம்னாத்திற்கு போனான். அங்கே கண்ணுக்கு பிரியமான
பெலிஸ்தரின் குமாரத்தியை கண்டு, அவளை இச்சித்து அவள் மீது காதல்வயப்பட்டு,
அவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணி, மறுபடியும் தகப்பன்,
தாயினிடத்தில் வந்துவிட்டான்.
தேவன் அவனை அனுப்பின நோக்கம் பெலிஸ்தரோடு
யுத்தம்பண்ணி, இஸ்ரவேல் ஜனங்களை அவர்களின் கைகளின் கீழிருந்து நீங்கலாக்கி
இரட்சிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், சிம்சோன் கண்களின் இச்சைக்கு இடம் கொடுத்து
பெலிஸ்தரின் குமாரத்தியின் அழகில் மயங்கி தன்னுடைய திட்டத்தினை மறந்து, அழைப்பினை
மறந்து திரும்பி வந்துவிட்டான்.
இன்றைக்கும் அனேக தேவனுடைய பிள்ளைகளை
குறித்து பரலோகம் மிகப்பெரிய திட்டத்தினை வைத்துள்ளது. ஆனால், அவர்கள் கண்களின்
இச்சைக்கு அடிமையாகி பல பெண்களை இச்சித்து, அவர்களுடன் காதல் வயப்பட்டு, தன்னுடைய
அழைப்பினையும், தன்னைக்குறித்து பரலோகம் வைத்துள்ள மிகப்பெரிய திட்டத்தினையும்
இழந்து போகின்றார்கள். கண்களின் இச்சை தன்னுடைய வலிமையால் தாயின் கர்பத்தில்
தோன்றுவதற்கு முன்னே பரலோகம் வைத்துள்ள மிகப்பெரிய திட்டத்தினை இழந்து போக
செய்கின்றது.
எனவே, தேவனுடைய பிள்ளைகள்
கண்களின் இச்சையை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கண்ட கண்ட
ஸ்திரீகளை இச்சித்து அழைப்பையும், பரலோகம் தந்த அபிஷேகத்தினையும் இழந்துவிடக்கூடாது.
(பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப
திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது
உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP - ல் இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment