ஜெபமே முதலீடு



      சகல துதி, கனம், மகிமை, புகழ்ச்சி, கீர்த்தி, பெருமை எல்லாவற்றையும் பரலோக பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாகட்டும்.    உலக மனிதர்கள் தாங்கள் இரவு, பகலாக சம்பாதிக்கும் பணத்தை ஆபத்து நேரங்களுக்கும், எதிர்காலத்துக்கும் பயன்படும் விதமாக வங்கிகளில் சேமிப்பார்கள் அல்லது சந்தைகளில் முதலீடு செய்வார்கள். இப்படி சேர்த்து வைக்கும் பணத்தைக்கொண்டு எதிர்காலத் தேவைகளுக்கும் அல்லது ஏதோ ஒன்றை வாங்கவோ பயன்படுத்துவார்கள். சகோதரர் ஒருவர் தான் சம்பாதித்த பணத்தை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து வைத்தார். சந்தைகளில் முதலீடும் செய்தார். முடிவில் பெரிய தொகை கிடைத்தது. அதைக்கொண்டு பெரிய வீட்டை கட்டினார். இப்படியாக உலக மனிதர்கள் அனைவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைக்கின்றார்கள். ஆனால், தேவைகளுக்காக பரலோக தேவனையே நம்பி, அவரையே சார்ந்து விசுவாச வாழ்க்கை வாழும் ஆவிக்குரியவர்கள் உலக மனிதர்களைப்போல் பணத்தை சேர்க்க முடியாது. ஏதோ ஒன்றில் முதலீடு செய்ய முடியாது. Insurance-ம் பண்ண முடியாது. அன்றன்று வரும் வருமானம்  அன்றன்றைய தேவைகளுக்கு சரியாக இருக்கும். மறுநாள் தேவைகளுக்கு பரலோக தேவனையே சார்ந்திருக்க வேண்டிய நிலைமை.

   இப்படியிருக்க ஆவிக்குரியவர் ஒரு அவசர தேவைக்கு என்ன செய்ய வேண்டும்? பெரிய செலவு செய்து எப்படி வீடு கட்ட முடியும்? எதை சேமிக்க வேண்டும்? எப்படி முதலீடு செய்ய வேண்டும்? போன்ற கேள்விகள் வரும். இக்கேள்விகளுக்கு பதிலை பெற்றுக்கொள்ளும் விதமாக இத் தீர்க்கதரிசன செய்தியில் சில ஆவிக்குரிய இரகசியங்களை தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.

    இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசிக்க லிங்கை கிளிக் செய்து வாஞ்சையாய் வந்த உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக எங்களுடைய அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நிச்சயம் சர்வவல்ல தேவன் உங்களை  ஆசீர்வதித்து உயர்த்துவாராக. இந்த செய்தி தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உள்ளது. உங்களுக்கு தேவையான மொழிகளில் இங்கே கிளிக் செய்து வாசிக்கவும். 

   தேவனையே முழுமையாக சார்ந்திருக்கும் விசுவாச பிள்ளைகள் உலக மனிதர்களைப்போல் பணத்தை சேர்க்க முடியாது. ஆனால், ஜெபிக்க முடியும். அந்த ஜெபத்தை சாதாரணமாக செய்யாமல் சேமிப்பாகவும், முதலீடாகவும் மாற்றவேண்டும். பின் நாட்களில் என்னென்ன தேவைகள் வரும், அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் எப்படி அதை பெற்றுக்கொள்வது போன்றவற்றை முன்கூட்டியே நிதானித்து, அதற்காக ஒவ்வொரு நாளும் ஊக்கமாக கருத்தாக ஜெபிக்க வேண்டும். தினமும் ஜெபிக்க வேண்டும். இப்படி செய்வது பணத்தை சேமிப்பதுபோல் சேமிப்பதற்கு சமமாகும். இதைதான் ஜெபத்தில் முதலீடு என்று கூறுகின்றோம்.

   உதாரணமாக ஒரு வீடுகட்ட வேண்டும் என்று கர்த்தருக்குள் ஒரு திட்டம் வைத்துள்ளீர்கள். அதற்கான பணமும் இல்லை, சேமிப்பதற்கான வருமானமும் இல்லை. இந்நேரத்தில் நீங்கள் பணத்தை சேமிப்பதுபோல் ஒவ்வொரு நாளும் ஜெபத்தில் சேமிக்க வேண்டும். உங்கள் தரிசன இல்லத்திற்காகவும் தேவைகளுக்காகவும் ஒவ்வொரு நாளும் ஊக்கமாக கருத்தாக ஜெபிக்கவேண்டும்.   இப்படி ஜெபிக்கின்ற ஜெபங்கள் தேவ சமூகத்திற்கு தூபமாக சென்று சேமிக்கப்படும். எப்படி சேமிக்கப்படும்? பணத்தை சேமிப்பதுபோல் சேமிக்கப்படும். ஏற்றவேளை வரும்போது இந்த சேமிப்பே வீடுகட்டுவதற்கான எல்லா தேவைகளையும் சந்திக்கும்.

      ஒவ்வொரு நாளும் தன் வருமானத்தை சேர்த்து வைத்தவர்கள் கட்டும் வீட்டை விட மிகப்பெரிய வீடு கட்டுவீர்கள். எந்த ஒரு தடையும், வன்கண்களும், பொறாமைகளும், பிசாசின் போராட்டங்களும் இல்லாதபடிக்கு ஏற்றவேளையில் காரியங்கள் வாய்க்கும். சிலர் பாதி கட்டி மீதம் கட்டாமல் இருப்பார்கள். அதுபோல் இல்லாமல் முழுமையாக கட்டி முடிப்பீர்கள்.

   பரலோக தேவனையே நம்பி வாழும் தேவனுடைய பிள்ளைகள்! எதிர்காலத்திற்காக என்னால் ஒன்றும் சேமிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டு கலங்காமல், ஜெபம் செய்யுங்கள். அந்த ஜெபத்தை சேமிப்பாகவும், முதலீடாகவும் மாற்றுங்கள். ஏற்றகாலங்களில் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கும். ஆமென்!

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)


Switch To ENGLISH    HINDI


தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

  1. The messages which I am getting through this whatsApp ministry is really encouraging my soul and gives new life to my soul.

    ReplyDelete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..